சற்று முன்

'இனிமேல்' ஆல்பம் ரிலீஸில் கைதி 2 அப்டேட் தெரிவித்த லோகேஷ் கனகராஜ்   |    இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது 'ஆபிரகாம் ஓஸ்லர்'!   |    அறிமுக இயக்குநர் செல்வ குமார் திருமாறன் இயக்கும் அற்புதமான ஃபீல் குட் எண்டர்டெயினர் படம்!   |    தனது அடுத்த முயற்சியாக திரைப்பட தயாரிப்பில் களமிறங்கும் Behindwoods   |    டிரெய்லர் வெளியானபோதே திரையுலகிலிருந்து, பலர் போன் செய்து திட்டினார்கள் - நடிகர் கலையரசன்   |    பாலாஜி தேர்ந்த அரசியல்வாதி அளவு, மிக தேர்ச்சிபெற்ற பேச்சாளர் - நடிகர் ஜெகன்   |    பெரும் மகிழ்ச்சியில் இயக்குநர் ராஜேஷ்.M !!   |    பன்முகத் திறமையின் உருவகம், ஈடு இணையற்ற மனிதர் ஃபஹத் ஃபாசில் - எஸ்.எஸ்.கார்த்திகேயா   |    திகில் நாடகத் தொடரான இன்ஸ்பெக்டர் ரிஷியின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது   |    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட 'திருட்டு பாடம்' டீஸர்   |    காடு எனக்குக் கடவுளை விட மிகவும் பிடிக்கும் - நடிகை ஆண்ட்ரியா   |    பழிவாங்குதலின் பரிமாணங்களைப் புதிய திரை அனுபவமாக உணரும் வகையில் 'கங்கணம்'   |    நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது   |    திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற 'பைக் டாக்சி' பூஜை!   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள RKFI   |    இயற்கையின் ஆசியில் திகட்டாத காதல் காவியமாக உருவாகும் 'ஆலன்'   |    ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இல் இடம்பெற்ற முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் இசை தொகுப்பு வெளியானது   |    திகில் நிறைந்த க்ரைம் டிராமா “இன்ஸ்பெக்டர் ரிஷி” அமேசான் பிரைமில் வெளியாகிறது   |    ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்!   |    யுடியுபரக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்ட ‘96’ பட இயக்குநர் பிரேம் குமார்   |   

சினிமா செய்திகள்

கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
Updated on : 19 July 2018

திரைப்படங்கள் கவிதையாக உருவாவது முற்றிலும் அரிதான ஒரு சூழல். அத்தகைய படைப்புகள் ஒவ்வொரு சினிமா துறையிலும் இருக்கும், அவை அவர்களுக்கு பெருமையையும் மரியாதையையும் கொண்டுவரும். சந்தேகமே இல்லாமல், தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி எப்பொழுதும் அந்த தளத்திலேயே உயரிய திறமையோடு இருக்க முயற்சிப்பவர் என்று சொல்லலாம். 



மிகவும் குறிப்பாக, அத்தகைய படைப்புகள் இசை என்னும்  மந்திரத்தால் மிகவும் அழகாக இருக்கின்றன. தமிழ் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த, மிகச்சிறந்த பாடல்களை தன் முந்தைய படங்களில் நமக்கு பரிசாக அவர் வழங்கியிருப்பதிலேயே இது முற்றிலும் தெளிவாகிறது. குறிப்பிடத்தக்க ஒரு உதாரணமாக சீனு ராமசாமி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்த தர்மதுரையை சொல்லலாம். 



 



அதே கூட்டணி 'கண்ணே கலைமானே' என்ற கவித்துவமான தலைப்பை கொண்ட படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கும் வேளையில், தமிழ் சினிமாவில் இருந்து அந்த படம் ஒருபோதும் மங்காது, எதிர்பார்ப்புகள் மிகப்பெரியவை. ஏன் என்றால், பாடல் வரிகளின் பேரரசர் கவிப்பேரரசு வைரமுத்துவாக இருந்தால். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த கூட்டணியின் காரணிகள், இயற்கையாகவே அனைவரின் எதிர்பார்ப்பையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளன. இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. நல்ல குழுவுடன் இணைந்து மிகச்சிறந்த இசை ஆல்பங்களை வழங்குவதற்காக நன்கு அறியப்பட்ட இந்த நிறுவனம், இசை ரசிகர்களை நிச்சயம் ஏமாற்றாது. 



 



தமிழ்நாட்டின் அழகான பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா