சற்று முன்

'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை ஒட்டி வெளியான 'புஷ்பா 2' டீசர்   |    உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் புது இயக்குனர்   |    ஒன்பது வருடங்களுக்கு பிறகு 'இன்று நேற்று நாளை' 2ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியது!   |    நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ள 'கல்கி 2898 AD' அனிமேஷன் அறிமுக வீடியோ!   |    ஜீவிக்கு 4 குளோன் இருக்கு - நடிகர் அப்துல் லீ   |   

சினிமா செய்திகள்

சின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் கரிமுகன்
Updated on : 08 October 2018

விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக சின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி தம்பதியினர். இந்த பாடலை எழுதியவர் செல்ல தங்கையா.



அதற்கு பிறகு இந்த பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது...யூடியூப்பில் இன்று வரை 13 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள். உலகம் முழுதும் பிரபலமான இந்த குழு “ கரிமுகன் “ என்ற படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்கள்.. செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.காயத்ரி என்ற கேரளா பெண் கதாநாயகியாக நடிக்கிறார்.



மற்றும் யோகிராம், பாவாலட்சுமணன், விஜய் கணேஷ், வின்செண்ட் ராய், தீபாஸ்ரீ ரா.கா.செந்தில் இவர்களுடன் இயக்குனர் செல்ல தங்கையாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.



ஏ விமல் புரொடக்சன்ஸ் சார்பாக T.சித்திரைச்செல்வி , M.செல்வமணி, செந்தூர் பிக்சர்ஸ் எஸ்.கார்த்திகேயன்  ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.



கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்குகிறார் செல்ல தங்கையா.



படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்...



நானும் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி மற்றும் எங்கள் குழுவினர் நாட்டுப்புற பாடல்கள் பாடி நிகழ்ச்சி நடத்தி வருகிறோம்..எங்கள் குழுவைப்பற்றி எல்லோருக்குமே தெரியும்.



ஏற்கெனவே செந்தில் கணேஷை  நாயகனாக்கி திருடு போகாத மனசு என்ற படத்தை இயக்கி வெளியிட்டேன். அதற்கு பிறகு மீண்டும் அவரை வைத்து கரிமுகன் படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது அவர் விஜய் டிவியில் பாடி புகழ் பெற்று விட்டார்.



இது எங்கள் குழுவினருக்கு மகிழ்ச்சி. திருடு போகாத மனசு படத்தில் கணேஷ் என்ற கதாபாத்திரம் ஏற்றிருந்தார்



இந்த படத்தில் செந்தில் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



படத்தின் கதை பற்றி சொல்ல வேண்டுமானால் 



முகம் தெரியாத இரண்டு பேருக்குள் நடக்கிற பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து முகம் தெரிந்த  இரண்டு பேருக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்படுகிறது  என்பதும் அதிலிருந்து அவர்கள் வெளியே வந்தார்கள் என்பதை கமர்ஷியல் காமெடியாக சொல்லி இருக்கிறோம்.



செந்தில் கணேஷ் எலக்ட்ரீஷியனாக நடிக்கிறார் ...படத்தில் இடம் பெறும் நான்கு பாடல்களில் இரண்டு பாடல்களையும் பாடி இருக்கிறார்.



படப்பிடிப்பு புதுக்கோட்டை, கோட்டை பட்டினம், தேவிபட்டினம் போன்ற இடங்களில் நடை பெற்றுள்ளது.



கரிமுகன் படத்தின் முன்னோட்ட  வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது  என்றார் இயக்குனர் செல்ல தங்கையா.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா