FLASH NEWS

தளபதி விஜய்யுடன் நடித்தால் தான் நடிகையா? நான் நிர்வாணமாக நடிக்க தயார்   |    மிஷ்கினின் ‘சவரக்கத்தி’ – சினிமா விமரிசனம்   |    வேதனையை வெளிப்படுத்திய நடிகை ஆண்ட்ரியா!   |    ஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்   |    ஓலா பயணத்தில் என்ன நடந்தது - பார்வதி நாயர் விளக்கம்   |    தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாமீது ஒழுங்கு நடவடிக்கை நிச்சயம்   |    விஜய்க்கு ஜோடியானால் மட்டும் தான் அது நடக்குமா? நானும் நல்ல நடிகைதான்   |    என்னது நடிகை அஞ்சலியா இது- என்ன இப்படி மாறிவிட்டார்?   |    சமூக வலைதள பிரபலம் பிரியா வாரியருக்கு அடித்த அதிர்ஷ்டம்   |    சாய் பல்லவி அதிரடி: ஹீரோக்கள் கலக்கம்   |    அரசியலுக்கு வருவேன் : வரலட்சுமி சரத்குமார்   |    கேளிக்கை வரியை எதிர்த்து திரையரங்குகள் 16-ந்தேதி முதல் மூடப்படும்   |    உதயநிதி ஜோடியாகும் ப்ரியா பவானி ஷங்கர் - இந்துஜா   |    கேரள அரசு சினிமா விருது - சிறந்த நடிகையாக பார்வதி தேர்வு   |    பொது மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத சிம்பு   |    இன்று திருமண பந்தத்தில் இணையும் நடிகர் பார்த்திபன்   |    தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 தனுஷ் தான்   |    ஒரேபடத்தில் 14 காமெடி நடிகர்கள்!   |    நிகழ்ச்சியில் பங்கேற்க இரு சக்கர வாகனத்தில் வந்த சாய்பல்லவி!   |    ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு   |   

Movie News

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாமீது ஒழுங்கு நடவடிக்கை நிச்சயம்
Updated on : 13 March 2018

ஞானவேல்ராஜா தயாரிக்கும் 'நோட்டா' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சில நாள்களுக்கு முன்பு நடந்தது. இந்தப் படத்தின் மூலமாகத் தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் நாயகி மெஹ்ரீன் நடிக்கிறார். ஸ்டிரைக் காரணமாகப் படங்களுக்கான புரொமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 'நோட்டா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு 'ரெட் கார்டு' போட்டப்பட்டதாகத் தகவல்கள் வர, இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கதிரேசனிடம் பேசினேன். 

  ''கியூப் பிரச்னை காரணமா எல்லோருமே ஒற்றுமையா போராடிக்கிட்டு வர்றோம். இதனாலதான் சில நாள்களாகவே புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் பண்ணவில்லை. மேலும், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, இசை வெளியீடு எதுவும் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தபோது, 'நோட்டா' படத்தின் அறிமுக விழா நடந்தது. இதனால் அவருக்கு ரெட் கார்டு எனப் பேசப்பட்ட நிலையில், ஞானவேல்ராஜா தரப்பிலிருந்து எங்களுக்கு விளக்கக் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் அவர், 'பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தக் கூடாது என்பது குறித்த விபரம் எனக்குத் தெரியாத காரணத்தினால், நிகழ்ந்த தவறு இது' எனக் கடிதத்தில் சொல்லியிருக்கிறார். இதுபற்றி அவருடன் ஒரு மீட்டிங் வைத்துதான் நடவடிக்கை எடுக்க முடியும்.ஸ்டிரைக் காரணமாக, பத்திரிகையாளர் சந்திப்பு எதையும் நடத்தக் கூடாது என்ற விஷயத்தை அந்த அந்த அமைப்புகளுக்கு நாங்கள் முன்கூட்டியே தெரிவித்தோம். முக்கியமாக, பி.ஆர்.ஓ யூனியனுக்கு இதுபற்றிய தகவலைக் கொடுத்திருந்தோம். ஆனால், " 'நோட்டா' படம் சம்பந்தமான விழாவுக்கு நடிகர்கள், இயக்குநர்கள் சென்னைக்கு வந்துவிட்டார்கள் அவர்களுக்கான அறைகளை புக் செய்துவிட்டோம். அதனால்தான் விழா நடத்த வேண்டியதாகிவிட்டது" எனச் சொன்னார்கள். இதனால், ஒழுங்கு நடவடிக்கை மட்டும் ஞானவேல்ராஜா மீது எடுக்கலாம் என்று நினைத்திருக்கிறோம். இதை ரெட் கார்டு என்று சொல்ல முடியாது. எல்லாத் தயாரிப்பாளர்களும் ஒற்றுமையா இருக்கணும். எல்லாக் காரியங்களும் ஒற்றுமையா நடக்கணும்னுதான் சங்கம் வெச்சிருக்கோம்.   

தயாரிப்பாளர்களுடைய வாழ்வதாரத்துக்காகத்தான் போராடிக்கொண்டிருக்கிறோம். இதுவரைக்கும் எல்லாத்தையும் இழந்துவிட்டோம். இனி இழப்பதற்கு எதுவுமில்லை. கியூப் பிரச்னைக்காகத்தான் ஸ்டிரைக் நடந்துகொண்டிருக்கிறது. இதுக்கு எல்லோரும் ஒத்துழைக்கணும்.  தியேட்டரில் இருக்கக்கூடிய புராஜெக்டருக்கான வாடகைக்கு எங்ககிட்ட இருந்து பணம் வாங்குறாங்க. அதை நாங்க கொடுக்க முடியாது. உதாரணத்துக்குச் சொல்லணும்னா, ஒருவர் கார் வைத்திருந்தால் அதைப் பயன்படுத்தும்போது காருடைய பராமரிப்புக்குத் தேவையான பணத்தைக் கொடுக்கலாம். ஆனா, கார் வாடகையையும் சேர்த்துக் கொடுக்க முடியாது. தியேட்டரில் இருக்கக்கூடிய புரொஜ ருக்கும் சர்வருக்குமான செலவை அவங்கதான் பண்ணனும். கருவிகளுக்கான வாடகையையும் இத்தனை நாளா எங்ககிட்டயிருந்து வாங்கிட்டாங்க. நாங்களும் இத்தனைநாள் கொடுத்துட்டோம். இதுக்கு மேலே முடியாது. சின்னப் படங்களுக்கு கியூப் கட்டணம் மட்டுமே 25 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் வரைக்கும் கட்டுறோம். ஜெயம் ரவி, தனுஷ் மாதிரியான நடிகர்கள் படத்துக்கு இந்தத் தொகை ஒரு கோடி வரை ஆகுது. சிறுபட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்களெல்லாம் அவங்க பட ரிலீஸுக்காகப் பொண்டாட்டி தாலியைக்கூட அடகு வைக்கிற நிலை இருக்கு. நாங்க கேட்டக்கூடிய ஒரே கேள்வி, நீங்க வெச்சிருக்கிற எக்யூப்மெண்ட்ஸூக்கு 'வி.பி.எஃப்'ங்கிற பெயர்ல எங்ககிட்ட ஏன் பணம் வாங்குறீங்க?" எனக் கொந்தளிக்கிறார், கதிரேசன்.

 

Latest News

  • SPORTS  
  • |
  • CINEMA