FLASH NEWS

தளபதி விஜய்யுடன் நடித்தால் தான் நடிகையா? நான் நிர்வாணமாக நடிக்க தயார்   |    மிஷ்கினின் ‘சவரக்கத்தி’ – சினிமா விமரிசனம்   |    வேதனையை வெளிப்படுத்திய நடிகை ஆண்ட்ரியா!   |    ஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்   |    ஓலா பயணத்தில் என்ன நடந்தது - பார்வதி நாயர் விளக்கம்   |    தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாமீது ஒழுங்கு நடவடிக்கை நிச்சயம்   |    விஜய்க்கு ஜோடியானால் மட்டும் தான் அது நடக்குமா? நானும் நல்ல நடிகைதான்   |    என்னது நடிகை அஞ்சலியா இது- என்ன இப்படி மாறிவிட்டார்?   |    சமூக வலைதள பிரபலம் பிரியா வாரியருக்கு அடித்த அதிர்ஷ்டம்   |    சாய் பல்லவி அதிரடி: ஹீரோக்கள் கலக்கம்   |    அரசியலுக்கு வருவேன் : வரலட்சுமி சரத்குமார்   |    கேளிக்கை வரியை எதிர்த்து திரையரங்குகள் 16-ந்தேதி முதல் மூடப்படும்   |    உதயநிதி ஜோடியாகும் ப்ரியா பவானி ஷங்கர் - இந்துஜா   |    கேரள அரசு சினிமா விருது - சிறந்த நடிகையாக பார்வதி தேர்வு   |    பொது மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத சிம்பு   |    இன்று திருமண பந்தத்தில் இணையும் நடிகர் பார்த்திபன்   |    தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 தனுஷ் தான்   |    ஒரேபடத்தில் 14 காமெடி நடிகர்கள்!   |    நிகழ்ச்சியில் பங்கேற்க இரு சக்கர வாகனத்தில் வந்த சாய்பல்லவி!   |    ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு   |   

Movie News

ஓலா பயணத்தில் என்ன நடந்தது - பார்வதி நாயர் விளக்கம்
Updated on : 13 March 2018

பார்வதி நாயர்"சமூக வலைதளங்கள்ல தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களைப் பேசிட்டு வர்றீங்களே... என்ன காரணம்?""தனக்கு என்ன பிரச்னை நேர்ந்தாலும், பெண்கள் அதை வெளிப்படையாகவும், தைரியமாகவும் சொல்லணும். நமக்கு நடந்ததை வெளியில சொன்னா, நம்மளைக் கேவலமா பார்ப்பாங்கன்னு நினைக்கிறதுதான் தவறு. நிறையப் பெண்கள் சமூகத்துல நடக்கிற அவலங்களுக்கு எதிரா குரல்கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவங்கள்ல ஒருத்தரா நான் இருக்கணும்னு விரும்புறேன். அதாவது, குரலற்ற பெண்களின் குரலா இருக்கணும். அவங்களுக்கு ஆதரவு அளிக்கணும். பெண்கள் பாதுகாப்புகுறித்த மனுக்களை ஆதரிப்பதற்குக் காரணம், நம்மளால இந்தச் சமூகத்துல ஒரு சின்ன மாறுதல் ஏற்பட்டுவிடாதா என்ற நம்பிக்கைதான். நிறையப் பேர் இந்தமாதிரி ஆதரிச்சாங்கன்னா கண்டிப்பா இந்திய அரசாங்கத்துக்கிட்ட கோரிக்கைகள் எடுத்துச் சொல்லப்படும். சில புதிய சட்டங்களும் கொண்டுவரப்படும். " 'அப்னே ஆப் விமன் வேர்ல்டு வைட்'  (Apne Aap Women World Wide) பத்தி சொல்லுங்க..."" 'அப்னே ஆப் விமன் வேர்ல்டு வைடு' - பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்கு எதிராக எழுப்பப்பட்ட ஒரு மனு. இதுக்கு  எவ்ளோ தூரம் மக்கள் ஆதரிக்கிறாங்கன்னு பார்த்து, பெண்கள் பாதுகாப்புச் சட்டத்துல ஒழுங்குமுறை கொண்டுவரப்படும். இந்தக் காலத்துல கொஞ்சமாவது பெண்கள் வெளிப்படையா பேச ஆரம்பிச்சிருக்காங்க. ஒரு 10 வருடத்துக்கு முன்னாடி, என்னதான் தனக்குக் கொடுமைகள் நடந்தாலும், அதை மூடிமறைச்சு, சமூகத்துக்குப் பயந்துதான் பெண்கள் வாழ்ந்துட்டு இருந்தாங்க. அவங்களைக் குறைசொல்ல முடியாது; இந்த சமூகம் பெண்களை இப்படித்தான் நடத்துது. இந்த மனநிலை மாறுனதுக்கு சோஷியல் மீடியா ஒரு முக்கியக் காரணம். நாம ஏதாவது ஒரு போஸ்ட் போட்டா போதும். அதுக்கு கருத்துக்களைத் தெரிவிக்கிறதோட மட்டும் இல்லாம, ஆதரித்துப் பேசவும் நிறையப் பேர் இருக்காங்க. பெண்களுக்குக் கிடைச்சிருக்கிற சுதந்திரம்தான் இதுக்குக் காரணம். ஆனா, இன்னும் கிராமப்புறங்கள்ல பெண்கள் அடிமைத்தனமா நடத்தப்படுறதையும், பாலியல் தொழில்ல தள்ளப்படுறதையும் பார்க்க முடியுது. இந்த நிலைமை மாறணும். நிறைய அரசு சாரா அமைப்புகளும் இதுக்கு எதிரா போராடிக்கிட்டு இருக்காங்க.''

"ஓலா கேப் பத்தி போஸ்ட் போட்டிருந்தீங்களே... என்ன நடந்துச்சு?" "என்னோட வீடு பெங்களூர்ல இருக்கு. நான் எப்போ சென்னை வந்தாலும், ஓலா கேப் உபயோகிக்கவேண்டிய சூழ்நிலை. ஓலாவுல ப்ரைம் கார்தான் பெஸ்ட்னு சொல்வாங்க. பெஸ்ட் குவாலிட்டி, ஆன் டைம் சர்வீஸ்னு ஓலா பத்தி அத்தனை விளம்பரம் பண்றாங்க. ஆனா, நான் அந்த கேப் புக் பண்ணிப்போன சமயத்துல, அந்த டிரைவர் என்கிட்ட ரொம்பக் கடுமையா நடந்துகிட்டார். நான் எந்த இடத்துக்குப் 

போய்ச் சேரணுமோ அந்த இடத்துக்குப் போகாம, வேற இடத்துல விட்டுட்டார். நாம தப்பான இடத்துக்கு வந்துட்டோம்னு அந்த டிரைவர்கிட்ட சொல்றேன், கேட்டகவே இல்லை. அந்த ரோட்ல யாருமே இல்ல. ஸ்ட்ரீட் லைட்கூட இல்லை. அந்த டிரைவர், 'வேற கஸ்டமரை பிக்-அப் பண்ணப் போகணும். நீங்க இறங்குங்க'னு சொன்னார். நான், 'முடியாது'னு சொன்னதும், கோபப்பட்டு கத்த ஆரம்பிச்சுட்டார். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில், என்னோட மொபைல் ஆஃப் ஆயிருச்சு. கொஞ்சநேரம் சார்ஜ் போடச்சொல்லிக் கேட்டேன். அதுக்கப்புறம், 'நான் சொல்ற இடத்துக்குப் போங்க. காசு அதிகமா வேணும்னாலும் கொடுக்குறேன்'னு சொன்னேன். மறுபடியும் கோபப்பட்டு திட்ட ஆரம்பிச்சுட்டார். அந்தமாதிரி வார்த்தைகள் எல்லாம் என்கிட்ட ஏன் யூஸ் பண்ணாருனு தெரியலை. உடனே கஸ்டமர் சர்வீஸுக்குப் போன் பண்ணேன். பத்து நிமிடம் லைன்லேயே வெயிட் பண்ண வெச்சாங்க. அதுக்கப்புறம், 'நீங்க சரியான இடத்துக்குத்தான் வந்துருக்கீங்க'னு சொல்லிட்டாங்க. நான் வேற வழியில்லாம கார்ல இருந்து இறங்கி, அரைமணி நேரம் நடந்தே வந்தேன். அதனாலதான், ஓலா பத்தி சமூக வலைதளங்கள்ல போஸ்ட் போட்டேன்.  அடுத்த நிமிடமே எனக்கு ஓலாகிட்ட இருந்து போன். 'மேடம், அந்த டிரைவரை சஸ்பெண்ட் பண்ணிட்டோம். சர்வீஸ்கூட மாத்திட்டோம். ப்ளீஸ் உங்க போஸ்டை டெலிட் பண்ணிடுங்க'னு கெஞ்சினாங்க. தொடர்ந்து ஐந்து தடவை போன் பண்ணி இதையே சொல்லிட்டு இருந்தாங்க. என் பதிவுக்கு இவ்வளோ ரீச் இருக்குனு தெரிஞ்ச உடனே, அவங்க இத்தனை போன் பண்றாங்க. நான் ஒரு சாதாரண பொண்ணா இருந்திருந்தா, இந்த விஷயம் அப்படியே போயிருக்கும். இனிமேல் இந்தமாதிரியான கார் சர்வீஸ்களை நம்பி ராத்திரி நேரத்துல போகாதீங்க.!"

 

Latest News

  • SPORTS  
  • |
  • CINEMA