Sports News

20 ஓவர் போட்டியில் ‘ஹிட்’ விக்கெட்டான முதல் இந்தியர் ராகுல்
Updated on : 13 March 2018

இருபது ஓவர் சர்வதேச போட்டியில் ‘ஹிட்’ விக்கெட்டான முதல் இந்திய வீரர் ராகுல் ஆவார்.

இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல் ‘ஹிட்’ விக்கெட் முறையில் ஆட்டம் இழந்தார். ரி‌ஷப் பாண்டுக்கு பதிலாக அணியில் இடம் பெற்ற அவர் மென்டீசின் 10-வது ஓவரில் பந்தை பின்பக்கமாக வந்து அடிக்க முயன்றார். அப்போது அவரது கால் ஸ்டம்பில் பட்டதால் ‘ஹிட்’ விக்கெட் ஆனார்.

20 ஓவர் சர்வதேச போட்டியில் ‘ஹிட்’ விக்கெட்டான முதல் இந்தியர் ராகுல் ஆவார். அவர் 18 ரன்களே எடுத்தார். சர்வதேச அளவில் ‘ஹிட்’ விக்கெட்டான 10-வது வீரர் ஆவார். டி வில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), மிஸ்பா-உல்-ஹக், முகமது ஹபீஸ் (பாகிஸ்தான்) சண்டிமால் (இலங்கை) உள்பட 9 வீரர்கள் இதற்கு முன்பு ‘ஹிட்’ விக்கெட் ஆகி இருந்தனர்.

டெஸ்ட் போட்டியில் லாலா அமர்நாத்தும் (1949), ஒருநாள் போட்டியில் நயன் மோங்கியாவும் (1995) ‘ஹிட்’ விக்கெட்டான முதல் இந்தியர்களாக இருந்தனர். அந்த வரிசையில் லோகேஷ் ராகுல் இணைந்தார்.


Latest News