சற்று முன்

பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |   

croppedImg_650374395.jpeg

சீமத்துரை திரை விமர்சனம்

Directed by : சந்தோஷ் தியாகராஜன்

Casting : வர்ஷா பொல்லம்மா, கீதன் பிரிட்டோ

Music :ஜோஸ் பிராங்கிளின்

Produced by : E. சுஜெய்கிருஷ்ணா, பூவன் மீடியா ஒர்க்ஸ்

PRO : R. குமரேசன்

Review :

ஆண்கள் ஒருதலைக்காதலால் பெண்கள் பின்னால் சுற்றுவதால் அவர்களுக்கு வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளை தெளிவாக சொல்லியிருக்கும் சந்தோஷ் தியாகராஜனுக்கு பாராட்டுகள்.

 

கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார் நாயகன் கீதன் பிரிட்டோ. கீதன் தனது நண்பர்கள் மகேந்திரன், வின்செண்ட்டுடன் சேர்ந்து ஊர் மக்களை எதிர்த்து, சேர முடியாமல் தவிக்கும் காதலர்களை சேர்த்து வைக்கின்றனர்.

 


பக்கத்து ஊரை சேர்ந்த நாயகி வர்ஷா பொலம்மா பள்ளி முடித்து கல்லூரியில் சேர்கிறார். வர்ஷாவை பார்த்ததும் கீதனுக்கு அவள் மீது காதல் வந்து வர்ஷா பின்னால் சுற்றுகிறார். இதனால் வர்ஷா வீட்டில் பிரச்சினை ஏற்படுகிறது. வர்ஷாவின் அப்பாவுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் முன்னாள் வந்து நிற்பவர் வர்ஷாவின் தாய்மாமன் காசிராஜன்..அவர் வர்ஷாவை திருமணம்செய்து கொள்ளவதாக பெண் கேட்கிறார். அதற்கு அதற்கு வர்ஷாவின் தந்தை மறுக்கவே இருவருக்கும் இடையே பகை ஏற்படுகிறது. இதற்கிடையே கீதன் மீது வர்ஷாவுக்கு காதல் வருகிறது. கடைசியில், கீதன் – வர்ஷா இணைந்தார்களா? அவர்களது காதல் என்னவானது? காசிராஜான் தனது மாமாவை பழிவாங்கினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

 


நாயகன் கீதன் கிராமத்து மாணவர் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். அடி வாங்கிக்கொண்டே வர்ஷா சொன்னதை நினைத்து சிரிக்கும்போது அவரது நடிப்பு பாராட்டும்படியாக இருக்கிறது.

 

நாயகி வர்ஷா,கிராமத்து பெண்ணுக்கு ஏற்றவாறு மாறி நடித்திருப்பது சிறப்பு. கண்களை உருட்டி சிரிக்கும்போது அழகாக இருக்கிறார். கீதனின் அம்மாவாக வந்து கருவாடு விற்கும் வேடத்தில் விஜி சந்திரசேகர் கிராமத்து அம்மாக்களை பிரதிபலிக்கிறார்.

 

வர்ஷாவின் தாய்மாமா காசிராஜன், ஊமையனாக வரும் நிரஞ்சன், கீதனின் நண்பர்களான மகேந்திரன், வின்செண்ட் ஆகியோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.கீதன், வர்ஷா, விஜி உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களுமே  அவர்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

 

ஜோஸ் பிராங்ளினின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். திருஞானசம்பந்தத்தின் ஒளிப்பதிவு பட்டுக்கோட்டை கிராமங்களை அழகாக பதிவு செய்திருக்கிறது.

 

கிளைமேக்ஸ் காட்சியில் வர்ஷாவின் தாய் மாமன் காசிராஜனின் அதிரடி செயல் பயங்கரமாக இருந்தாலும் வழக்கமான காதல் கதையின் முடிவாக இல்லாமல்
இயக்குநர் புது விதமாக முடித்திருப்பது பாராட்டும் படியாக இருந்தது.

 


 

Verdict : மொத்தத்தில் `சீமத்துரை’ ….சீரியஸ் துரை.

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA