சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

மகிழ்ச்சியில் பிரசன்னா!
Updated on : 09 December 2017

தமிழில் "திருட்டுபயலே 2", தெலுங்கில் "ஜவான்" அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களில் நடித்த பிரசன்னா மகிழ்ச்சியில் உற்சாகமடைந்துள்ளார்.



 



இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், "கடந்த வாரம் வெளிவந்து மிகப்பெரிய நற்பெயரையும் பாராட்டுகளையும் பெற்றுத்தந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "திருட்டுபயலே 2 " என் இருபத்தைந்தாவது திரைப்படம். அதேசமயம் தெலுங்கிலும் நான் நடித்த "ஜவான்" என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



 



மகிழ்ச்சியான இத்தருணத்தில் ஒரு நடிகனாக நான் உருவாக எனக்கு வாய்ப்பளித்த அத்தனை இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சக நடிகர் நடிகைகளுக்கும் தொழில்நுட்பக்கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக "5ஸ்டார்" படத்தில் என்னை நாயகனாக அறிமுகம் செய்து என் 25வது படத்திலும் அழுத்தமான பாத்திரம் தந்து பெரும் பாராட்டும் வெற்றியும் பெற்றுத்தந்த இயக்குனர் திரு சுசி கணேசன் அவர்களுக்கு நன்றி நினையாது ஒருநாளும் போகாதென் வாழ்நாளில்.



 



எனது எல்லா படங்களுக்கும் ஆதரவு தந்து நிறைகுறைகளைச் சொல்லி தட்டிக்கொடுத்து ஊக்குவித்த பத்திரிக்கை தொலைக்காட்சி வானொலி இணையதள ஊடக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் . உங்கள் பாராட்டுக்கள் பெரும் உந்து சக்தி எனக்கு. சில நேரங்களில் சில ஊடகங்கள் என்னைக் காயப்படுத்தியதும் உண்டு. அக்காயங்கள் என்னை மேலும் வலுவுடன் போராடவே உதவியுள்ளது. வெற்றியையும் தோல்வியையும் ஒன்றுபோல் எதிர்கொள்ள பழக்கப்படுத்தியுள்ள அக்காயங்களுக்கும் பெருநன்றி.



 



15 ஆண்டுகால இப்பயணம் பூ விரித்து மென்மையான பாதையில் அமைந்திருக்கவில்லை. கரடுமுரடான அப்பாதையில் உற்ற துணை ஒன்று என் படங்களை பார்த்து ரசித்து பாராட்டி எப்போதும் மனதிலே நம்பிக்கையை விதைத்துக்கொண்டே இருந்த ரசிகர்கள்தான் அந்தத் துணை.



 



ஆண்டுகள் கடந்தும் என் படங்களை நினைவுகூர்ந்து பாராட்டி ஒவ்வொரு புது முயற்சியிலும் தோள்தட்டி, எனக்கான உயரம் பெரிதென்றும் அதற்க்கான அங்கீகாரம் கிடைக்குமென்றும் எப்போதும் சொல்லிச்சொல்லி துணை நின்றிருக்கும் என் ரசிகர்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் இதயத்தின் அடித்தளத்தினின்று.



 



எனக்காக எப்போதும் பிரார்த்திக்கும் அம்மா அப்பா தம்பிக்கும் , யாரையும்விட என்னை முழுமுற்றிலும் நம்பி என் போராட்டங்களிலெல்லாம் கேள்வியின்றி துணை நின்று பலம்சேர்த்த அன்பு மனைவிக்கும், குடும்பத்தாருக்கும் , என் நலனில் அப்போதும் அக்கறையுள்ள நண்பர்களுக்கும் நன்றி சொல்லி தீராது" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா