சற்று முன்

சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |    ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!   |    “சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு   |    சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!   |    சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை   |    ‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |    சுந்தர் சி – துரை V.Z. வெற்றி கூட்டணியில் திகில் படம்   |    பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை   |    பெண்கள் பாதுகாப்பை பேசும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு   |    ‘கே டி : தி டெவில்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு… ரசிகர்களிடையே உற்சாகம்   |   

croppedImg_947962308.jpeg

’ஹாஸ்டல்’ விமர்சனம்

Directed by : Sumanth Radhakrishnan

Casting : Ashok Selvan, Priya Bhavani Shankar, Sathish, Nassar, Munishkanth, KPY Yogi, Krrish Kumar, Ravi Mariya

Music :Bobo Shashi

Produced by : R Ravindran

PRO : AIM

Review :

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் அசோக் செல்வன் தனது நண்பர்களுடன் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த விடுதிக்கு முன்னாள் ராணுவ அதிகாரி நாசர் தலைமை தாங்குகிறார்.  மிகவும் ஒழுக்கமாக பசங்களை வளர்ப்பதாக அவரே சொல்லி கொள்கிறார்.  அந்த விடுதியில் ஒருநாள் இரவு மட்டும் பிரியா பவானி சங்கர் தன்னை தங்க வைக்குமாறு அசோக் செல்வன் இடம் கூறுகிறார், அவரும் பிரியாவை ஹாஸ்டெலுக்குள் யாருக்கும் தெரியாமல் கூட்டி வருகிறார்.  ஹாஸ்டலுக்குள் வரும் பிரியா பவானி சங்கர் அங்கிருந்து யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் எப்படி வெளியேறினார் என்பதே ஹாஸ்டல் படத்தின் கதை.  மலையாளத்தில் வெளியான படத்தை, தமிழ் மக்களுக்கு ஏற்ப எடுத்துள்ளனர்.  அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஜோடி பார்ப்பதற்கு புது விதமாக, அழகாக உள்ளது. அசோக் செல்வனின் நண்பர்களாக வரும் சதீஷ் மற்றும் அவர்களது கூட்டாளிகள் செய்யும் சேட்டைகள் சில இடங்களில் ரசிக்கும்படியாக உள்ளது. 

 

மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான அடி கப்யாரே கூட்டமணி என்ற ஹாரர் கலந்த காமெடி படத்தின் தமிழ் ரீமேக்தான் ஹாஸ்டல் திரைப்படம்.  

 

அசோக் செல்வன் முதல் முறையாக முழுநீள காமெடி படத்தில் நடித்திருக்கிறார். கொடுத்த வேலையை சரியாக மட்டும் அல்ல சிறப்பாக செய்ய வேண்டும் என்று பல இடங்களில் அவர் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. சில இடங்களில் முகபாவனைகள்  மற்றும் உடல் மொழி மூலம் காமெடியை வெளிப்படுத்த முயற்சித்திருக்கும் அசோக் செல்வன் அதில் வெற்றி பெற்றிருந்தாலும், சில இடங்களில் தடுமாறவும் செய்திருக்கிறார். முதல் காமெடி படம் தானே போக போக காமெடியை கற்றுக்கொள்வார் என்று நம்பலாம்.

 

பிரியா பவானி சங்கர் நல்லா நடிச்சிருக்காங்க என்று சொல்வதை விட, டபுள் மீனிங் வசனங்களை நல்லாவே பேசியிருக்காங்கனு சொல்லலாம். பிரியா பவானி சங்கருக்கு ஸ்கோப் உள்ள கதாப்பாத்திரம் அதை ரொம்ப நல்லாவே கையாண்டு இருக்காங்க.

 

போபோ சசியின் இசையில் கானா பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப இருக்கிறது. 

 

பாய்ஸ் ஹாஸ்டல் என்ற ஒரே ஒரு களத்தில் முழு படத்தையும் படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார், வித்தியாசமான பிரேம்கள் மூலம் காட்சிகளை ரசிக்க வைத்திருப்பதோடு, பிரியா பவானி  சங்கரை அழகாகவும் காட்டியிருக்கிறார். 

 

சதீஷ் வழக்கம் போல தனது டைமிங் ஜோக் மூலம் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். சில இடங்களில் சிரிக்க முடிந்தாலும் பல இடங்களில் முடியல என்று தான் சொல்லனும். அசோக் செல்வனின் நண்பர்களாக நடித்திருக்கும் கிரிஷ் மற்றும் KPY யோகி இருவரும் கொடுத்த வேலையில் குறை வைக்கவில்லை.

 

ஹாஸ்டல் வார்டனாக வரும் நாசர், கிளைமாக்ஸில் பேயை விரட்ட நினைத்து நாசர் பேயிடம் மாட்டி கொள்ளும் காட்சி ரசிக்கும் படியாக இருந்தது.  படம் முழுக்க டபுள் மீனிங் வசனங்கள் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.  இளைஞர்களை மையமாக வைத்து எடுத்துள்ளதால் இந்த முடிவில் படக்குழு இறக்கியது போல் தெரிகிறது. 

 

ஒரு குறிப்பிட்ட லொக்கேஷனில் முழு கதையும் நகரும்படியான படத்தை முழுவதுமாக ரசிகர்கள் ரசிப்பது என்பது சவாலான காரியம். அந்த சவாலை மிக கஞ்சிதமாக சமாளித்திருக்கும் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

 

"ஹாஸ்டல்​" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

 

Verdict : 'ஹாஸ்டல்' இளைஞர்களுக்கான நகைச்சுவை படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA