சற்று முன்

பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |   

croppedImg_864640687.jpeg

'விக்ரம்' விமர்சனம்

Directed by : Lokesh Kanagaraj

Casting : Kamal Haasan, Vijay Sethupathi, Fahadh Faasil, Narain, Arjun Das, Harish Uthaman, Kalidas Jayaram

Music :Anirudh Ravichander

Produced by : Kamal Haasan, R. Mahendran

PRO : Diamond Babu

Review :

போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளான காளிதாஸ் ஜெயராம், ஹரிஷ் பெராடி ஆகியோருடன், காளிதாஸின் தந்தையான கமல்ஹாசனையும் முகமூடி கும்பல் ஒன்று கொடூரமாக கொலை செய்கிறது. காவல்துறை அதிகாரிகளை கொலை செய்த கும்பல் யார்? என்பதை கண்டுபிடிக்கும் பொறுப்பு, அண்டர்கவர் வேலைகளை செய்யும் பகத் பாசி குழுவிடம் காவல்துறை ஒப்படைக்கிறது. தனது அதிரடியான விசாரணை மூலம் முகமூடி கூட்டம் யார்? அதன் தலைவன் யார்? எதற்காக அவர்கள் காவல்துறை அதிகாரிகளை கொலை செய்கிறார்கள்? என்பதை பகத் பாசில் கண்டுபிடிக்கும் போது அவருக்கு மட்டும் அல்ல படம் பார்க்கும் நமக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் தெரிக்கவிடுவது தான் ‘விக்ரம் 2’ படத்தின் மீதிக்கதை.

 

1986 ஆம் ஆண்டு வெளியான கமலின் ‘விக்ரம்’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான ’கைதி’ இந்த இரண்டு படங்களின் கருவை மையமாக வைத்துக்கொண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடத்தியிருக்கும் மிகப்பெரிய ஆக்‌ஷன் திருவிழா தான் ‘விக்ரம்’. 

 

கமலுக்கு வயதுக்கேற்ற கதாபாத்திரமாக இருந்தாலும் அடிதடியில் அதிரடியாய் அசரடிக்கிறார். எமோஷனல் காட்சிகளோ, நக்கல் நையாண்டிகளோ இனி புதிதாய் செய்ய ஒன்றுமில்லை என்னும் நிலைக்குக் கமல் வந்து பல காலமாகிவிட்டது. அப்படியிருந்தும், இதில் தூள் கிளப்பியிருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, திரையில் வெளியாகும் கமல் படம் என்பதால், அதற்கான மாஸ் மொமண்ட் காட்சிகளை இரண்டாம் பாதியில் பக்காவாக எழுதியிருக்கிறார் லோகேஷ். 

 

படத்தின் முதல் பாதி முழுவதையும் தனது முக பாவனைகளால் மட்டுமே சுமந்து சென்றிருக்கிறார் ஃபஹத் ஃபாசில். 'எங்களுக்கு ரூல்ஸ் கிடையாது... உங்களுக்கு இருந்தால் மீறப்படும்' என்று திமிரான உடல் மொழியுடன் இரக்கமில்லாத துருவித் துருவி விசாரிக்கும் ஏஜெண்டாக மிரட்டுகிறார். 'புஷ்பா' படத்திற்காக குறைத்த உடல் எடையை இந்தப் படத்திலும் காண முடிகிறது. குறிப்பாக, குழந்தையை மீட்க போராடும் காட்சிகளில் உச்சம் தொடுகிறார்.

 

மாஸான எண்ட்ரியோடு வரும் விஜய் சேதுபதி, நடிக்காமலே பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார். பிக் பாஸ் ஷிவானி நாராயணன், மகேஷ்வரி மற்றும் மைனா நந்தினி என மூன்று மனைவிகளுடன் பிரம்மாண்ட வீட்டில் கஞ்சா, கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்கும் வியாபாரி சந்தனமாக விஜய்சேதுபதி மிரட்டுகிறார். 

 

பாப்பாய் கார்ட்டூனில் ஸ்பினாச் சாப்பிட்டால் சக்தி வருவதை போல, கஞ்சாவை எடுத்து கடித்த உடன் சக்தி வந்து விஜய்சேதுபதி அடிக்கும் இடங்கள் பக்காவாக செட் ஆகி இருக்கு. விஜய்சேதுபதி போலீஸ்காரரை சுட்டு விட்டு ஆட்டோவில் இருந்து இறங்கும் ஓப்பனிங் காட்சிக்கே கைதட்டல்கள் தெறிக்கிறது.

 

காளிதாஸ் ஜெயராமன், செம்பன் வினோத், நரேன், ரமேஷ் திலக், காயத்ரி ஷங்கர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். 

 

திடீரென வந்து சர்ப்ரைஸ் கொடுக்கிறார் சூர்யா. தியேட்டரையே வியக்க வைக்கும் விதத்தில் வெறித்தனமாக நடித்திருக்கிறார். படத்தின் ஆர்மபம் முதலே பில்டப் கொடுக்கும் கதாப்பாத்திரத்தில் தான் சூர்யா வரப்போகிறார், என்று தெரிந்தாலும், அவருடைய தோற்றம் எப்படி இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்திவிடும் இயக்குநர், அதே சமயம் ஏமாற்றம் அளிக்காத வகையில் சூர்யாவின் வேடத்தை சூப்பராகவே வடிவமைத்திருக்கிறார்.

 

அனிருத்தின் இசையில் பின்னணி இசை செம மாஸ். ஆக்‌ஷன் காட்சிகளின் போது அவருடைய பின்னணி இசை படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பை கொடுப்பதோடு, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதத்திலும் இருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் கிரிஸ் கங்காதரனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டிருந்தாலும் அதற்கு அவர் அமைத்திருக்கும் லைட்டிங் மிரட்டலாக இருப்பதோடு,உறுத்தாமலும் இருக்கிறது. படத்தின் சண்டைக்காட்சிகளை படமாக்கிய விதம் அல்டிமேட்.படம் ஆக்‌ஷன் காட்சிகளால் அலங்கரிக்கப்பட்டாலும், இடையிடையேயான சில சர்ப்ரைஸ் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக, மொத்த படத்தையுமே தூக்கி நிறுத்துகிறது இன்டர்வல் ப்ளாக் சண்டைக்காட்சி. அது படமாக்கப்பட்ட விதமும், விறுவிறுப்பும் ரசிக்க வைக்கிறது. அந்த சிங்கிள் ஷார்ட் சண்டைக்காட்சியில் கேமராவை முன்னும் பின்னும் நகர்த்தி தெறிக்க விட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிருஷ் கங்காதரன்.

 

போதைப்பொருட்கள் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆயிரத்தி ஓராவது படமாக இந்தப் படம் இடம்பெற்றிருக்கிறது. பொறுமையாக தொடங்கும் திரைக்கதை விசாரணையால் வேகமெடுக்கிறது. இருப்பினும் முதல் பாதியின் நீளம், முழுப் படத்தையும் பார்த்த உணர்வை கொடுக்கிறது.

 

"விக்ரம்​" படத்திற்கு மதிப்பீடு 4/5

 

Verdict : மொத்தத்தில்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA