சற்று முன்

புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகும் 'பேரன்பும் பெருங்கோபமும்' திரைப்படம்!   |    விக்ரமுக்கு 'சேது' போல உதயாவுக்கு 'அக்யூஸ்ட்' அமையும் - ஆர்.கே. செல்வமணி   |    சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் விளையாட்டு சரித்திரத்தை மாற்றியமைக்க உள்ளது!   |    'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா   |    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் கத்தார் அரசு விருதை வென்று சாதனை!   |    'இராமாயணா' படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது!   |    பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது   |    இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம்! - தயாரிப்பாளர்-இயக்குநர் இசக்கி கார்வண்ணன்   |    இங்கு பெண்களுக்கான குரலை பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது - இயக்குநர் வசந்தபாலன்   |    சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    திரைப் படைப்பாளிகளின் பாராட்டுக்களைக் குவித்துள்ள 'மனிதர்கள்' மே 30 முதல் திரையரங்குகளில்!   |    பேயை செல்லப்பிராணியாக வளர்க்கலாம் என்று 'ஜின் தி பெட்' படம் சொல்கிறது - ஆர். கே. செல்வமணி   |    'மெட்ராஸ் மேட்னி' திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!   |    'ராமாயணா' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் பற்றிய அப்டேட்!   |    JP.தென்பாதியான் இயக்கத்தில் உருவாகும் 'அங்கீகாரம்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    மோகன்லாலின் பிறந்தநளை முன்னிட்டு கண்ணப்பா படத்தின் சிறப்பு வீடியோ கிளிம்பஸ் வெளியானது!   |    'விருஷபா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து கொண்ட மோகன்லால்   |    யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    '#சூர்யா 46' படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது!   |    விஜய் ஆண்டனியுடன் 'லாயர்' படத்துக்காக இணையப்போகும் புகழ் பெற்ற ஒரு நடிகை!   |   

croppedImg_462463172.jpeg

'சுழல்' விமர்சனம்

Directed by : Bramma G and Anucharan

Casting : Aishwarya Rajesh, Kathir, R. Parthiban, Harish Uthaman, Sriya Reddy

Music :Sam C. S.

Produced by : Wallwatcher Films - Pushkar and Gayatri

PRO : Yuvaraj

Review :

சிமெண்ட் தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவராக இருக்கும் பார்த்திபனின் இளைய மகள் திடீரென்று மாயமாகி விட அவரை தேடும் முயற்சியில் பார்த்திபன் இறங்குகிறார். அப்போது தொழிற்சாலை தீ விபத்து தொடர்பாக வரை போலீஸ் கைது செய்ய, அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா ராஜேஷ் களத்தில் இறங்கு தனது தங்கையை தேடும் முயற்சியில் இறங்குகிறார். இதற்கிடையே பார்த்திபனுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை சேகரிக்கும் போலீஸ் அதிகாரிகள் ஸ்ரேயா ரெட்டி மற்றும் கதிருக்கு அவரது மகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியான ஆதாரம் ஒன்று கிடைக்கிறது. அந்த ஆதாரத்தின் மூலம் அவள் காணாமல் போகவில்லை கடத்தப்பட்டிருக்கிறாள், என்பது தெரியவர, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை பல முடிச்சுகளோடு சுவாரஸ்யமாக சொல்லியிருப்பது தான் சுழல் இணைய தொடரின் கதை.

 

'திமிரு' படத்தில் நடித்த ஸ்ரேயா ரெட்டியை இன்னமும் அதே 'திமிரு'டன் மிரட்டியிருக்கிறார். கோபம், பாசம், ஏக்கம், அழுகை என எல்லா உணர்வுகளையும் கடத்த வேண்டிய கதாபாத்திரம், பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

 

போலீஸ் அதிகாரி சக்கரையாக கதிர் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தொடர் முழுவதும் வரும் அவரது கதாப்பாத்திரமும் அதற்கு ஏற்ப அவர் நடித்திருப்பதும் தொடருக்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

இரண்டு மகள்களுக்கு தந்தையாக நடித்திருக்கும் பார்த்திபன் மிக இயல்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக அவரது வழக்கமான நடிப்பையும், வசனத்தையும் தவிர்த்துவிட்டு நடித்திருப்பது புதிதாக இருப்பதோடு ரசிக்கும்படியும் இருக்கிறது.

 

சாம் சி.எஸ் பின்னணி இசையில் தான் எப்போது முன்னணி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். அவரது பின்னணி இசை கதையின் வேகத்தையும் விறுவிறுப்பையும் அதிகரித்திருக்கிறது.

 

முகேஷ்வரனின் ஒளிப்பதிவு பிரம்மாண்டமாக உள்ளது. மலைப்பகுதியின் அழகையும், இரவு நேர காட்சிகள் மற்றும் மயானகொள்ளை திருவிழா காட்சிகளை படமாக்கிய விதம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட லைட்டிங் அனைத்தும் கவனம் ஈர்க்கிறது.

 

8 தொடர்களையும் மொத்தமாக பார்த்தால் சுமார் 5 மணி நேரம் ஆகிறது. ஆனால், அந்த 5 மணி நேரம் எப்படி போனது என்பதே தெரியாதபடி காட்சிகளை மிக கச்சிதமாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.

 

சந்தன் குமாரின் கதை மிக சாதாரணமாக இருந்தாலும், அதற்கு இயக்குநர்கள் பிரம்மா.ஜி மற்றும் அனுசரண் அமைத்த திரைக்கதை மற்றும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கிறது. இப்படி தான் நடந்திருக்கும், என்று நாம் யோசிக்கும் போது, நம்மை அசரவைக்கும்படி புதிய ட்விஸ்டோடு கதை பயணிக்கிறது.


சமூகத்தில் அனுதினமும் நடக்கும் ஒரு குற்றப்பின்னணி கொண்ட கதையை குல தெய்வ வழிபாட்டுக் கதைகளின் வழி சொல்லியிருக்கிறார்கள்.

 

"​'சுழல்" படத்திற்கு மதிப்பீடு 3.75/5

 

 

Verdict : அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA