சற்று முன்

சன் டிவியில் 'மங்கை' மெகாதொடர் இயக்கிய அரிராஜன் வசனம் எழுதி இயக்கியுள்ள குறும்படம் 'ஒழுக்கம்'   |    பா விஜய்யின் தன்னம்பிக்கையை ஊட்டும் வரிகளில் உருவாகியுள்ள 'ஜதி' ஆல்பம் !   |    தமிழ் சினிமாவில் சரிவு ஏற்படுகிறது என்றால், அதற்கு இதுதான் காரணம் - வசந்தபாலன் வேதனை   |    'இக் ஷு' ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட பான் இந்தியா படம்   |    இன்று இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் தேஜாவு படக்குழு!   |    இந்திய அரசிற்காக ராக்ஸ்டார் டிஎஸ்பி பாடிய புதிய பாடல் 'ஹர் கர் திரங்கா' வைரலானது   |    ஆடி கொண்டாட்டமாக புதிய படங்களை வெளியிட்டு ரசிகர்களை அசத்தும் ஆஹா ஓடிடி தளம் !   |    எங்களிடம் பணம் இல்லை; திறமைக்கு இங்கு யாரும் வாய்ப்பு தருவதில்லை - நடிகர் கார்த்திக்   |    தென் மாவட்ட வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை கொண்ட ஆக்சன் படத்தில் நடிக்கும் விக்ராந்த்   |    'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தில் அழுத்தமான வேடத்தில் நடிக்கவிருக்கும் அனுபம் கேர் !   |    'விஆர்எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்' ன் முதல் தயாரிப்பு ‘விஜயானந்த்’ என்பதில் பெருமிதம் கொள்கிறது   |    ’தி லெஜண்ட்’ படத்தால் விநியோகஸ்தர் அன்புசெழியனுக்கு வந்த நெருக்கடி!   |    தினேஷுடன் யோகி பாபுவும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘லோக்கல் சரக்கு’   |    வெற்றிவாகை சூடிய வலிமை 11ஸ் அணி   |    அவருக்கு இந்த படம் பலவருட கனவு, பலரால் முடியாததை சாதித்துள்ளார் - நடிகர் ஜெயம் ரவி   |    வேல்ஸ் யூனிவர்சிட்டி 11 வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார் தமிழ்நாடு ஆளுநர் திரு. R.N.ரவி   |    அமலா பாலின் ‘கடாவர்’ பட டிரெய்லர் வெளியானது   |    மூன்று மாதக் காலக்கட்டத்திற்குள் முழுமையாக படப்பிடிப்பை நிறைவு செய்தது ‘தக்ஸ்’ படக்குழு   |    தந்தைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை சினேகா !   |    கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள 'குருதி ஆட்டம்'   |   

croppedImg_1647107690.jpeg

'அம்முச்சி 2' – விமர்சனம்

Directed by : Rajeshwar Kaliswamy

Casting : Arun Kumar, Srija, Chinnamani, Sassi Selvaraj, Prasanna Balachandran

Music :Vivek Saro

Produced by : Erumbugal Network

PRO : Yuvaraj

Review :

இணையத்தொடர்களில் இருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி காமா சோமாவென (காமம்- சோமம்) தொடர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் பலர்.

 

ஆனால் அதே சுதந்திரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டின் கொங்குவட்டார மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஓர் அழகான காதல்கதையைச் சொல்லியிருக்கும் படம்தான் அம்முச்சி 2.

 

தலைப்பில் வரும் அம்முச்சியாக நடித்திருக்கும் சின்னமணி அம்மாளின் தோற்றமும்  அவருடைய உரையாடல்களும் சிலிர்க்க வைக்கின்றன.

 

அவருடைய மகனாக நடித்திருக்கும் பிரசன்னா பாலசந்திரனுக்கு இது பொற்காலம் போலும். தமிழின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்றாக வந்திருக்கும் சேத்துமான், இந்தத் தொடர் அதன்பின் சுழல் தொடர் என்று எங்கு பார்த்தாலும் அவர் இருக்கிறார். சிறந்த நடிப்பில் நம்மைக் கவர்ந்திழுக்கிறார். மனைவிக்கும் அவருக்குமான காட்சிகள் தரமானவை.

 

கதையின் நாயகனாக வரும் அருண், அவருடைய சகா சசி,, நாயகி மித்ரா, வில்லனாக வரும் ராஜேஷ்பாலசந்திரன், நாயகனின் அம்மா தனம், பிரசன்னாவின் மனைவியாக வரும் சாவித்திரி உள்ளிட்ட அனைவருமே பொருத்தமாக இருக்கிறார்கள்.

 

சந்தோஷ்குமார் எஸ்.ஜே வின் ஒளிப்பதிவு கொங்குவட்டார கிராமத்தின் அழகை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறது.

 

விவேக் சரோவின் இசை காட்சிகளுக்குப் பலம் சேர்த்திருக்கிறது.

 

இத்தொடரை இயக்கியிருக்கும் ராஜேஷ்வர் காளிசாமிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஒரு வட்டார வாழ்க்கையை அப்படியே பதிவு செய்திருப்பது அவருடைய பலம். அருண், மித்ரா காதல்காட்சிகள் ஓரிரு காட்சிகள்தாம் என்றாலும் அருமை.

 

காதல் கதையை வைத்துக்கொண்டு இன்னமும் பழமைவாதம் மாறாத ஒரு கிராமத்துப் பெண் உயர்கல்வி படிப்பதில் உள்ள சிக்கல்களைச் சொல்லியிருப்பதும், கல்லூரி விண்ணப்பப்படிவத்தில் டாக்டர் அனிதா கல்லூரி என்று வைத்திருப்பதும் சிறப்பு.

 

"அம்முச்சி 2" படத்திற்கு மதிப்பீடு 2.5/5

Verdict : கொங்குவட்டார மக்களின் வாழ்க்கையை ஓர் அழகான காதல் கதையுடன் கூறியிருப்பதே அம்முச்சி 2

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA