சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

croppedImg_1409385531.jpeg

’மாயோன்’ விமர்சனம்

Directed by : N Kishore

Casting : Sibi Sathyaraj,Tanya Ravichandran, Radha Ravi, K.S. Ravikumar, Bagavathi Perumal, Hareesh Peradi

Music :Ilaiyaraja

Produced by : Arun Mozhi Manickam

PRO : யுவராஜ்

Review :

ஒரு பழங்காலக் கோயிலுக்குள் பெரும் புதையல் இருக்கிறது. அதைக் கைப்பற்ற சர்வதேசக் கொள்ளைக்கும்பல் திட்டமிடுகிறது. அதற்காக அரசுத் தொல்லியல்த்துறையை சேர்ந்த சில அதிகாரிகளை தங்களுடன் சேர்த்துக்கொண்டு கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அவர்களுடைய திட்டம் பலித்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

 

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிபிராஜ், ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 

 

ஹீரோயினாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன், கமர்ஷியல் நாயகியாக அல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதாப்பாத்திரமாக படம் முழுவதும் வருகிறார்.

 

கே.எஸ்.ரவிக்குமார், ஹரீஷ்பேரடி, ராதாரவி, பக்ஸ், மாரிமுத்து உட்பட படத்தில் நிறைய நடிகர்கள். அனுபவ நடிகர்கள் என்பதால் காட்சிகளிலும் அது நிறைந்து படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.

 

வில்லத்தனத்தில் அசத்தி இருக்கிறார் ஹரிஷ் பெராடி. தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம், திரைக்கதை எழுதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

 

இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பக்க பலமாக அமைந்துள்ளது. பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். ராம் பிரசாத் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

 

பழங்கால கோவில்களில் இருக்கும் பொக்கிஷங்கள் மற்றும் அதை பாதுகாக்கும் வழிகளை வியக்கும் வகையில் சொல்லியிருக்கும் இயக்குநர், எதிர்பாராத திருப்பங்கள் மூலம் முழு படத்தையும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்க வைக்கிறார். மேலும் பல வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஆன்மீகத்தை சார்ந்த ஒரு ஆராய்ச்சி திரைப்படம் வெளியாகி இருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

"'மாயோன்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

 

Verdict : ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றே என்பதை உணர்த்தும் படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA