சற்று முன்

சன் டிவியில் 'மங்கை' மெகாதொடர் இயக்கிய அரிராஜன் வசனம் எழுதி இயக்கியுள்ள குறும்படம் 'ஒழுக்கம்'   |    பா விஜய்யின் தன்னம்பிக்கையை ஊட்டும் வரிகளில் உருவாகியுள்ள 'ஜதி' ஆல்பம் !   |    தமிழ் சினிமாவில் சரிவு ஏற்படுகிறது என்றால், அதற்கு இதுதான் காரணம் - வசந்தபாலன் வேதனை   |    'இக் ஷு' ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட பான் இந்தியா படம்   |    இன்று இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் தேஜாவு படக்குழு!   |    இந்திய அரசிற்காக ராக்ஸ்டார் டிஎஸ்பி பாடிய புதிய பாடல் 'ஹர் கர் திரங்கா' வைரலானது   |    ஆடி கொண்டாட்டமாக புதிய படங்களை வெளியிட்டு ரசிகர்களை அசத்தும் ஆஹா ஓடிடி தளம் !   |    எங்களிடம் பணம் இல்லை; திறமைக்கு இங்கு யாரும் வாய்ப்பு தருவதில்லை - நடிகர் கார்த்திக்   |    தென் மாவட்ட வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை கொண்ட ஆக்சன் படத்தில் நடிக்கும் விக்ராந்த்   |    'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தில் அழுத்தமான வேடத்தில் நடிக்கவிருக்கும் அனுபம் கேர் !   |    'விஆர்எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்' ன் முதல் தயாரிப்பு ‘விஜயானந்த்’ என்பதில் பெருமிதம் கொள்கிறது   |    ’தி லெஜண்ட்’ படத்தால் விநியோகஸ்தர் அன்புசெழியனுக்கு வந்த நெருக்கடி!   |    தினேஷுடன் யோகி பாபுவும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘லோக்கல் சரக்கு’   |    வெற்றிவாகை சூடிய வலிமை 11ஸ் அணி   |    அவருக்கு இந்த படம் பலவருட கனவு, பலரால் முடியாததை சாதித்துள்ளார் - நடிகர் ஜெயம் ரவி   |    வேல்ஸ் யூனிவர்சிட்டி 11 வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார் தமிழ்நாடு ஆளுநர் திரு. R.N.ரவி   |    அமலா பாலின் ‘கடாவர்’ பட டிரெய்லர் வெளியானது   |    மூன்று மாதக் காலக்கட்டத்திற்குள் முழுமையாக படப்பிடிப்பை நிறைவு செய்தது ‘தக்ஸ்’ படக்குழு   |    தந்தைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை சினேகா !   |    கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள 'குருதி ஆட்டம்'   |   

croppedImg_1372109263.jpeg

'மாமனிதன்' விமர்சனம்

Directed by : சீனு ராமசாமி.

Casting : விஜய் சேதுபதி, காயத்ரி, K.P.A.C.லலிதா, அனிகா

Music :இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா

Produced by : YSR ப்ரொடக்ஷன்ஸ்

PRO : Nikil murukan

Review :

ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் விஜய் சேதுபதி தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமத்தில் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். தனது பிள்ளைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க வேண்டும் என விஜய் சேதுபதி ஆசைப்படுகிறார். அதற்க்கு இன்னும் நிறையப் பணம் சம்பாதிக்கவேண்டும் என்கிற ஆசையில் ஆட்டோ ஓட்டுவதை விட்டுவிட்டு நிலத்தரகர் வேலைக்குப் போகிறார். இதனால் அவரது வாழ்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? நாயகனின் குடும்பம் என்ன ஆனது? என்பதே கதைச்சுருக்கம்.

 

இரு குழந்தைகளுக்கு தந்தையாக நடித்திருக்கும்  விஜய்சேதுபதி வழக்கம்போல் இந்தப்படத்திலும் சிறப்பாக நடித்து வேடத்துக்குப் பலம் சேர்க்கிறார். ஆட்டோ டிரைவராக வாழ்ந்துள்ளார். யதார்த்த நடிப்பு அவ்வளவு அசால்ட்டாக வருவதால் எளிதாக ஸ்கோர் செய்துள்ளார். 

 

விஜய்சேதுபதி மனைவியாக வரும் காயத்ரி குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பெண் பாத்திரத்தில் கட்சிதமாக பொருத்தியுள்ளார். எமோஷனல் காட்சிகளில் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். இவர்களை தவிர வரும் அனைத்து முக்கிய பாத்திரங்களுமே நீட்டாக, கொடுத்த பாத்திரத்தை நிறைவு செய்துள்ளனர்.

 

சீனு ராமசாமி வழக்கம் போல அவருடைய யதார்த்தமான கதை தளத்தின் மூலமாக இந்த படத்தை கொண்டு சென்றுள்ளார். 

 

இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமார் ரகம்தான். இன்னும் மெனக்கிட்டிருக்கலாம்.  

 

ஒளிப்பதிவு சுகுமார், தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். ஆலப்புழாவின் அழகு என ஒளிப்பதிவும், லொக்கேஷனும் உண்மையில் பிரமிக்க வைக்கிறது. 

 

"Maamanithan" படத்திற்கு மதிப்பீடு 3/5

Verdict : யதார்த்தமான கதை களம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA