சற்று முன்

'இனிமேல்' ஆல்பம் ரிலீஸில் கைதி 2 அப்டேட் தெரிவித்த லோகேஷ் கனகராஜ்   |    இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது 'ஆபிரகாம் ஓஸ்லர்'!   |    அறிமுக இயக்குநர் செல்வ குமார் திருமாறன் இயக்கும் அற்புதமான ஃபீல் குட் எண்டர்டெயினர் படம்!   |    தனது அடுத்த முயற்சியாக திரைப்பட தயாரிப்பில் களமிறங்கும் Behindwoods   |    டிரெய்லர் வெளியானபோதே திரையுலகிலிருந்து, பலர் போன் செய்து திட்டினார்கள் - நடிகர் கலையரசன்   |    பாலாஜி தேர்ந்த அரசியல்வாதி அளவு, மிக தேர்ச்சிபெற்ற பேச்சாளர் - நடிகர் ஜெகன்   |    பெரும் மகிழ்ச்சியில் இயக்குநர் ராஜேஷ்.M !!   |    பன்முகத் திறமையின் உருவகம், ஈடு இணையற்ற மனிதர் ஃபஹத் ஃபாசில் - எஸ்.எஸ்.கார்த்திகேயா   |    திகில் நாடகத் தொடரான இன்ஸ்பெக்டர் ரிஷியின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது   |    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட 'திருட்டு பாடம்' டீஸர்   |    காடு எனக்குக் கடவுளை விட மிகவும் பிடிக்கும் - நடிகை ஆண்ட்ரியா   |    பழிவாங்குதலின் பரிமாணங்களைப் புதிய திரை அனுபவமாக உணரும் வகையில் 'கங்கணம்'   |    நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது   |    திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற 'பைக் டாக்சி' பூஜை!   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள RKFI   |    இயற்கையின் ஆசியில் திகட்டாத காதல் காவியமாக உருவாகும் 'ஆலன்'   |    ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இல் இடம்பெற்ற முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் இசை தொகுப்பு வெளியானது   |    திகில் நிறைந்த க்ரைம் டிராமா “இன்ஸ்பெக்டர் ரிஷி” அமேசான் பிரைமில் வெளியாகிறது   |    ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்!   |    யுடியுபரக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்ட ‘96’ பட இயக்குநர் பிரேம் குமார்   |   

croppedImg_1398761923.jpeg

'லால் சிங் சத்தா’ விமர்சனம்

Directed by : Advait Chandan

Casting : Aamir Khan, Kareena Kapoor, Naga Chaitanya, Mona Sing, Ahmad Ibn Umar, Manav Vij

Music :Pritam and Tanuj Tiku

Produced by : Aamir Khan Productions & Viacom18 Studios

PRO : Venkatesh

Review :

அமீர்கானுக்கு சிறுவயதில் காலில் பிரச்னை இருந்ததால் அவரால் சரியாக நடக்க இயலாது மேலும் எந்த ஒரு விஷயத்தையும் மெதுவாக புரிந்துகொள்ளும் தன்மைகொண்ட அமீர்கானை முட்டாள், லூசு, மெண்டல் என்று  அசிங்கப்படுத்துவார்கள். ஆனால் இவரின் அம்மா இவருக்கு தைரியத்தை கூறி வளர்க்கிறார்.  சிறு வயதிலிருந்தே அமிர்கானிடம்  அன்பாக பேசி பழகும் கரீனா கபூர் அவர் மேல் ஏற்பட்ட காதல், அமீர்கானின் கல்லூரிப் பருவம், ராணுவத்தில் சேர்ந்த பின் நாக சைதன்யா உடனான நட்பு, கரீனாவின் பிரிவு,  அம்மாவின் இழப்பு, மீண்டும் கரீனாவுடன் சந்திப்பு  என ஒரு  ரயில் பயணத்தில் அமீர்கான் தன்னுடைய கடந்த காலக் கதையை மற்ற பயணிகளிடம் சொல்வதில் இருந்து லால் சிங் சத்தா படம் ஆரம்பமாகிறது. இறுதியில் லால் கரீனாவை சந்தித்தாரா ? அவரை திருமணம் செய்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் கதை. 

 

அமீர்கான் அப்பாவியாக  இருப்பவர் மற்றவர்கள் அவரை பைத்தியம், லூசு என அழைத்தாலும் திறமைசாலி. ஓட்டப்பந்தயத்தில் சாதித்தவர், ராணுவத்தில் சிறப்பாகப் பணியாற்றி வீர் சக்ரா விருது வாங்கியவர், சுயமாகத் தொழில் ஆரம்பித்து கார்ப்பரேட் கம்பெனியை ஆரம்பித்தவர், இலவச ஆஸ்பத்திரி நடத்தியவர், விவசாயம் செய்பவர், நான்கு வருடங்கள் இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் ஓடியவர் என அமீரின் சிறு வயது முதல் நடுத்தர வயதுப் பருவம் வரையிலான அவருடைய வாழ்க்கைப் பயணத்தைக் காட்டியிருக்கிறார்கள். அப்பாவித்தனமான நடிப்பில் ஆங்கோங்கே அனுதாபப்பட வைக்கிறார், சில இடங்களில் அழ வைக்கிறார் அமீர்கான்.

 

அமீர்கான் மாஸ் ஹீரோ என்ற இமேஜை ஓரம் தள்ளிவிட்டு கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை கச்சிதமாக மாற்றிக்கொண்டு  படம் முழுவதும் லால் சிங் சத்தா என்ற கதாப்பாத்திரமாகவே மாறி வாழ்ந்திருக்கிறார்.  குழந்தைத்தனத்துடனும், அப்பாவியாகவும் நடித்து அனைவரையும் அனுதாபப்பட வைக்கிறார், சில இடங்களில் அழவும் வைக்கிறார் . 

 

கரீனா ஏமாற்றம், தோல்வி, விரக்தி, காதல் என தனது நடிப்பாற்றலை முழுமையாக  வெளிப்படுத்தி உள்ளார். ஒவ்வொரு முறையும் தனது கனவு நிறைவேறாத போது களங்கும் இடம் அசத்தல். அழகில் மட்டும் இன்றி நடிப்பிலும் ரசிகர்களை கவர்கிறார் கரீனா. 

 

அமீர்கானுடன் ராணுவத்தில் பணியாற்றும் நாக சைதன்யா, அமீர்கானின் அம்மாவாக நடித்துள்ள மோனல் சிங் நிறைவாக நடித்துள்ளார்கள். 

 

படத்தில் ஷாரூக்கான் கூட ஒரே ஒரு காட்சியில் வந்து போகிறார். சாதாரண டிவி நடிகராக இருந்து பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கும் ஷாருக்கானின் வளர்ச்சியை லால் சிங் சத்தாவின் வாழ்க்கை சம்பவத்தோடு இணைத்திருப்பது படத்தின் கூடுதல் பலம். 

 

ப்ரீதம் இசையில் தமிழ்ப் பாடல்களும், பின்னணி இசையும் ரிசிக்க வைக்கின்றன.

 

ஒளிப்பதிவாளர் சத்யஜித் பாண்டே லால் சிங் சத்தா என்ற மனிதரின் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்துவதில் அதிகம் மெனக்கெட்டிருப்பதோடு, வரலாற்று சம்பவங்களை திரைப்பட காட்சிகளாக அல்லாமல் லால் சிங்கின் வாழ்க்கை சம்பவங்களாக நேர்த்தியாக காட்டியிருக்கிறார்.

 

கேமராமேன் சத்யஜித் பான்டே இந்தியாவின் பல பகுதிகளை தன் கேமராவில் மிக அழகாக பதிவு செய்துள்ளார். 

 

படத்தின் நீளம் ரொம்பவே அதிகம். இடைவேளை வரையிலான காட்சிகள் போவது தெரியவில்லை. காதல் கதையா, சென்டிமென்ட் கதையா, தன்னம்பிக்கைக் கதையா என பிரித்து சொல்ல முடியாத அளவுக்கு எல்லாம் கலந்த கலவையாக உள்ளது. நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு சில காட்சிகள் அந்நியமாக இருக்கின்றன. திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும் படம் பார்ப்பவர்கள் கதையோடு ஒன்றிவிடும் அளவுக்கு சுவாரஸ்யமாக நகர்கிறது.

 

"லால் சிங் சத்தா" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

 

Verdict : படம் முழுவதும் சுவாரஸ்யமாக நகர்கிறது.

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA