சற்று முன்

'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை ஒட்டி வெளியான 'புஷ்பா 2' டீசர்   |    உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் புது இயக்குனர்   |    ஒன்பது வருடங்களுக்கு பிறகு 'இன்று நேற்று நாளை' 2ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியது!   |    நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ள 'கல்கி 2898 AD' அனிமேஷன் அறிமுக வீடியோ!   |    ஜீவிக்கு 4 குளோன் இருக்கு - நடிகர் அப்துல் லீ   |   

croppedImg_1692756345.jpeg

’கடமையை செய்’ விமர்சனம்

Directed by : Venkat Raghavan

Casting : SJ Surya, Yashika Anand, Vincent Ashokan, Charles Vinoth, Sesu, Rajendran

Music :Arun Raj

Produced by : Syed Zahir Hussain, TR Ramesh

PRO : Manavai Bhuvan

Review :

சிவில் இன்ஜினியராக வேலை பார்த்து வரும் எஸ்.ஜே.சூர்யா மனைவி யாஷிகா ஆனந்த். மற்றும் ஓர் குழந்தை என சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். திடீரென அவருக்கு வேலை போய்விடுகிறது. வேறு வழியில்லாமல் குடும்பத்தை காப்பாற்ற ஒரு அபார்ட்மெண்டில் செக்யூரிட்டியாக வேலைக்கு சேர்க்கிரார், சிவில் இஞ்சினியராக அவர் அந்த அபார்ட்மெண்ட் கட்டிடம் சரியாக கட்டப்படவில்லை இதனால் அங்கு இருக்கும் மக்கள் உயிருக்கு ஆபத்து நேரும் என்பதை அறிந்து அவர்களை காப்பாற்ற முயற்சியில் இறங்கும் போது ஒரு விபத்தில் சிக்கி ஸ்டுமர் என்ற நோயால் பாதிக்கப்படுகிறார், தன்னைச் சுற்றி நடப்பவை அனைத்தையும் கவனிக்க முடியும் ஆனால் அவரால் பேச முடியாது. அந்த நோயிலிருந்து மீண்டாரா?  அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளை காப்பாற்றுகின்றார் என்பதுதான் "கடமையை செய்" படத்தின் கதை.

 

ஒரு நடுத்தர வர்க்க குடும்ப தலைவனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். இரண்டாம் பாதி முழுக்கவே வசனமே இல்லாமல் உடல் அசைவுகளாலும், முகபாவனைகளால் மட்டுமே தனது நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். 

 

கவர்ச்சியாகவே நடித்துக்கொண்டிருந்த  யாஷிக்காக ஆனந்த் இந்த படத்தின் மூலம் ஒரு கதாநாயகியாக முன்னேறியிருக்கிறார். இயக்குநரின் நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறார் என்றே சொல்லலாம்.

 

மொட்டை ராஜேந்திரன், வின்செண்ட் அசோகன், சேசு உள்ளிட்ட அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் ஆகிய அனைவரும் தத்தம் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். சார்லஸ் வினோத்தின் வில்லத்தனம், அடியாள் ராஜசிம்மனின் அடங்க மறுக்கும் கழுத்து என்று ஆக்‌ஷன் ஏரியாவில் கூட காமெடியை வைத்து இயக்குநர் ரசிக்க வைத்திருக்கிறார்.

 

வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது. அருண்ராஜின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

 

வித்தியாசமான கருவை கதைக்களமாக எடுத்துக்கொண்ட இயக்குநர் வேஙட் ராகவன், அதற்கு கமர்ஷியலாக திரைக்கதை அமைத்து விறுவிறுப்பான காட்சிகள் மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.

 

இயக்குநர் வேங்கட் ராகவனின் வித்தியாசமான முயற்சிக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பதோடு, படத்தின் வெற்றிக்காக மிகப்பெரிய உழைப்பையும் கொடுத்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது.

 

"கடமையை செய்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

 

Verdict : ஒருமுறை பார்க்கலாம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA