சற்று முன்

பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |   

croppedImg_1196083068.jpeg

'ட்ரிகர்’ விமர்சனம்

Directed by : Sam Anton

Casting : Atharva, Tanya Ravichandran, Aurun Pandian, Raghul Dev Shetty, Setha, Munishkanth, Chinni Jayanth, Azhakamperumal

Music :Ghibran

Produced by : Prateek Chakravorty and Shruthi Nallappa

PRO : DOne

Review :

காவல்துறை அதிகாரியான அதர்வ ஒரு ஆபரேஷனில் பணியாற்றும் பொது நடக்கும் பிரச்சினையில் வேலை இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். பின்னர் தனது உயர் அதிகாரியால் undercover போலீசாக காவல்துறை செய்யும் தவறுகளை கண்காணிக்கும் பணிக்கு மற்றப்படுகிறார். அப்படி கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கும் போது குழந்தைகளை சிலர் கடத்துவது தெரியவருகிறது. இதற்கிடையில் அதர்வாவின் அண்ணன் தத்தெடுக்கும் பெண் குழந்தையை ஒரு கும்பல் கடத்துகிறது. அதை விசாரிக்கும் பொது அந்த கும்பல் செய்யும் அதிர்ச்சியூட்டும் குற்ற செயல் குறித்து தெரிய வருகிறது. ஆதாரத்துடன் அந்த கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் அதர்வா, இந்த கடத்தலின் பின்னணி என்ன? யார் இதில் சம்பந்தப்பத்திருக்கிறார்கள்? அதை எப்படி முறியடிக்கிறார் என்பதே  ‘ட்ரிகர்’.

undercover போலீசாக  நடித்திருக்கும் அதர்வ ஆக்‌ஷன் காட்சிகளில் காட்டும் அதிரடியால் தன்னை ஒரு நல்ல ஆக்‌ஷன் ஹீரோவாக நிரூபித்திருக்கிறார். எமோஷனல் காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார். 

எப்பொழுதும் போல் இந்த படத்திலும் தான்யாவிற்கு அதிகமான காட்சிகள் இல்லையென்றாலும் நிறைவாக வந்து போகிறார். 

அருண்பாண்டியன், ராகுல் தேவ் ஷெட்டி, சீதா, முனீஷ்காந்த், சின்னி   ஜெயந்த், அழகம்பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

ஜிப்ரான் இசையில் பாடல்கள் சுமார் என்றாலும், பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக பயணித்துள்ளது.


இயக்குனர் சொல்ல வந்த கதையை தன்னால் முடிந்த அளவு விரிவாக காட்சிப்படுத்தியுள்ளார். காக்கிச் சட்டை போட்டுக்கொண்டு பணியாற்றும் காவலர்களை விட, தங்களின் அடையாளத்தை காட்டாமல், உயிரை பணிய வைத்து பணியாற்றும் காவலர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர், தொழில்நுட்ப ரீதியாக காவல்துறை எப்படி எல்லாம் பணியாற்றுகிறார்கள் என்பதையும் நேர்த்தியாக காட்டியிருக்கிறார். மொத்தத்தில் வித்தியாசமான கிரைம் திரில்லர் கதையாக உருவாகியுள்ள ட்ரிகர் படத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்கலாம்.

 

"ட்ரிகர்" படத்திற்கு மதிப்பீடு 3/5 

 

Verdict : வித்தியாசமான த்ரில்லர் கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA