சற்று முன்

பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |   

croppedImg_574420283.jpeg

'நானே வருவேன்' விமர்சனம்

Directed by : Selvaraghavan

Casting : Danush, Selvaraghavan, Prabhu, Yogi Babu, Indhuja, Elli Avram,

Music :Yuvan Shankar Raja

Produced by : Kalaipuli S. Dhanu

PRO : Riaz K Ahamed

Review :

இரட்டை சகோதரர்களான கதிர், பிரபு. இதில் பிரபு மிகவும் நல்லவராகவும், கதிர் சற்று மாறுபட்ட குணாதிசயங்களோடு காணப்படுகிறார். இதனால் பிரச்சினைகளால் வருகிறது. இதனால் அவருடைய தந்தை அவருக்கு தண்டனை தருகிறார். ஒரு கட்டத்தில் கதிரை தனியாக விட்டுவிட்டு வேறு ஊருக்கு சென்று விடுகின்றனர். பிறகு அந்த ஊருக்கு புதிதாக வரும் செல்வராகவன் உடன் பழக்கம் ஏற்படுகிறது. இப்படியாக நாட்கள் செல்ல இருப்பது வருடம் கழித்து பிரபு அவன் குடும்பம், குழந்தை என நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறான். அப்பொழுது தனுஷ் மகளின் நடவடிக்கைகளில் வித்தியாசத்தை காணும் தனுஷ் ஒரு கட்டத்தில் தன் மகள் மீது ஒரு ஒரு க்லேட்ட சக்தி  இருப்பதை கண்டுப்பிடிக்கிறார். அந்த கேட்ட சக்தியுடன் பேசும்போது அது சில நிபந்தனைகளை வைக்கிறது. அதற்காக கதிரை தேடி தனுஷ் செல்கிறார். அந்த கேட்ட சக்தி கூறிய நிபந்தனை என்ன? தனுஷை எதற்காக பிரபு தேடி சென்றார்.? மக்களை கேட்ட சக்தியிடமிருந்து காப்பாற்றினாரா என்பதுதான் "நானே வருவேன்" படத்தின் மீதி கதை. 

 

தனுஷ் இரட்டை வேடமேற்று நடித்திருக்கிறார். இரு வெவ்வேறு குணாதிசயங்களை வெளிப்படுத்தவேண்டிய சவாலான கதாபாத்திரம். வித்தியாசமான, யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கும் தனுஷிற்கு இந்த படம் மற்றுமொரு வெற்றி. 

 

தனுஷின் மகளாய் நடித்திருக்கும் ஹியா டேவி. அமானுஷ்யத்தைக் கண்டு அஞ்சுவது, அதன்பின்னான மேனரிசம் என நல்லதொரு நடிப்பு. 

 

இந்துஜா அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் எல்லி அவரம் வார்த்தைகள் இல்லாமல் முகபாவனைகள் மூலம் அழகான நடிப்பை கனக்கச்சிதமாக வெளிப்படுத்தி அனைவர் மனதிலும்  பதியும்படி நடித்திருக்கிறார். 

 

படத்திற்கு பக்க பலமாக இருப்பது யுவனின் பின்னணி இசை தான்.  

 

ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ் காடு சம்பந்தப்பட்ட காட்சிகள் தத்ரூபமாக ஹாலிவுட் பட அளவில் காட்டியிருக்கிறார்.

.

செல்வராகவன்-தனுஷ் காம்போ என்றாலே  ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதை சற்றும் குறையாமல் கொடுத்திருக்கிறார்கள். 

 

யோகிபாபு, பிரபு கதாபாத்திரங்கள் பெரிதும் பேசும்படியாக இல்லை. 

 

முதல் பாதி அமானுஷ்ய காட்சிகள் என பார்வையாளர்களின் ஆவலை தூண்டுகிறது. இடைவேளைக்கு பிறகு வரும் வில்லன் தனுஷ் படத்திற்கான ஆர்வத்தை மேலும் மெருகேற்றி மிரட்டியிருக்கிறார். வழக்கமான அண்ணன் தம்பி பழிவாங்கல் கதையில் அமானுஷ்யம் எஞ்சும் புது யுக்தியை பயன்படுத்தி அசதி இருக்கிறார்கள்.

 

"நானே வருவேன்" படத்திற்கு மதிப்பீடு 3/5 

 

 

Verdict : "நானே வருவேன்" குடும்பமாக பொழுபோக்க உகந்த படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA