சற்று முன்

கர்நாடக சக்கரவர்த்தி சிவண்ணா ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் தரும், புதிய அப்டேட்!   |    பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸை இதுவரை திரையில் கண்டிராத அவதாரத்தில் #BSS12 -ல் காணலாம்   |    எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆவணப்படம் 16வது IDSFFK விழாவுக்கு தேர்வு!   |    Susi Ganeshan Reveals Motion Poster for 'Ghuspaithiya   |    'ரகு தாத்தா' இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை பற்றி தான் பேசுகிறது!   |    SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக, அசத்தலான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது !   |    அசத்தலான காமெடி ஜானரில், 'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்' டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது   |    எத்தனை முரண்கள் இருந்தாலும் ஒருவர் ஒருவரை அரவணைத்து கொள்வது ஒரு அழகு - இயக்குநர் நாகராஜ்   |    மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் இயக்குநர் மற்றும் நடிகர் சேரன்!   |    சாண்டி மாஸ்டரின் துடிப்புமிக்க நடன அசைவுகளுடன் 'பிரதர்' பட முதல் பாடல் வெளியானது!   |    கதை அம்சத்தோடு technical -ளாகவும் பிரமிக்க வைக்கிறது 'TEENZ' - இயக்குனர் பிரபு சாலமன்   |    பல தடைகளைக் கடந்து ரிலீஸை நோக்கி முன்னேறி வரும் ‘வணங்கான்’   |    தனுஷ் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!   |    சாந்தினி தமிழரசன் நடிக்கும் சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் 'அமீகோ'!   |    ஒன்ட்ராக ஒரிஜினல்ஸின் ‘ராசாத்தி’ புரோமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு   |    கலை இலக்கியத்தை அரசியல் வடிவமாக்கி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் - இயக்குநர் பா ரஞ்சித்   |    என்னை என் அரசியலைப் புரிந்து கொள்வதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம் 'வாழை' - மாரி செல்வராஜ்   |    விஷ்ணு விஷால் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் செய்து அசத்திய ரசிகர்கள்!   |    உலகமெங்கும் தீபாவளி அன்று வெளியாகிறது ‘அமரன்’   |    'மனோதரங்கல்' உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஆழமாக சென்று தாக்கும் தொடர்   |   

croppedImg_1576563021.jpeg

’படவெட்டு’ விமர்சனம்

Directed by : Liju Krishna

Casting : Nivin Pauly, Aditi Balan, Shammi Thilakan, Shine Tom Chacko, Indrans, Vijayaraghavan

Music :Govind Vasantha

Produced by : Vikram Mehra, Siddharth Anand Kumar, Sunny Wayne

PRO : Yuvaraj

Review :

லிஜு கிருஷ்ணா இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் மலையாளப் படம் ‘படவெட்டு’. (Padavettu) படவெட்டு என்றால் போர் என்று அர்த்தமாம். சமகால அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.

 

விவசாயத்தை நம்பியிருக்கும் கிராமத்தில், கிராம மக்களின் தேவைகளை கிராம சபை நிர்வாகிகள் பூர்த்தி செய்து கொடுக்கிறார்கள். இதற்கிடையே, மக்களுக்கு இலவச திட்டங்களை அறிவித்து அந்த கிராமத்தில் காலூன்றும் அரசியல் கட்சியின் தலைவர், அந்த கிராமத்து விவசாய நிலங்களை அபகரிக்க திட்டம் போடுகிறார். அந்த அரசியல்வாதியின் திட்டத்தின் துவக்கமாக இருக்கும் நாயகன் நிவின் பாலி, ஒரு கட்டத்தில் பொருத்தது போதும் என்று பொங்கி எழ, அந்த அரசியல்வாதியும், அவருடைய திட்டமும் என்னவானது? என்பதை சொல்வது தான் ‘படவெட்டு’.

 

விபத்தினால் வாழ்க்கையை தொலைத்த தடகள வீரரகாக அமைதியான நடிப்பை வெளிப்படுத்திருக்கும் நிவின் பாலி, அரசியல்வாதிக்கு எதிராக  எடுக்கும் நடவடிக்கையில் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார். ஒரு விபத்து, என் வாழ்க்கை, காதலி என அனைத்து போய்விட்டது, என்று அவர் சொல்லும் இடத்தில் விரக்தியின் உச்சத்தில் இருக்கும் இளைஞர்களை பிரதிபலிக்கிறார். அதே சமயம், சும்மா உட்கார்ந்திருப்பதில் பயனில்லை என்று அவர் எடுக்கும் முயற்சிகளும், விவசாய நடவடிக்கைகளும் இளைஞர்களை உத்வேகப்படுத்துகிறது.

 

நாயகியாக நடித்திருக்கும் அதிதி பாலனுக்கு காதல் காட்சிகள் இல்லை, டூயட் பாடல்கள் இல்லை. ஆனால், அவர் திரையில் வரும்போதெல்லாம் நம் உள்மனதில் ரசாயண மாற்றம் நிகழ்கிறது. பார்வையிலேயே தனது ஒட்டு மொத்த காதலையும் வெளிப்படுத்தும் சக்தி படைத்தவராக இருக்கிறார் அதிதி பாலன்.

 

குய்யாலி என்ற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஷம்மி திலகன், இயல்பான நடிப்பு, மிரட்டலான வில்லத்தனம் என படம் பார்ப்பவர்களுக்கு கோபம் வரும்படி நடித்திருக்கிறார்.

 

நிவின் பாலியின் அத்தையாக நடித்திருக்கும் ரெம்யா சுரேஷ், ஷினே டாம் சக்கோ, மனோஜ் ஒமன் உள்ளிட்ட  மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கவனம் பெறும் வகையில் நடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு காட்சியில் வரும் அதிதி பாலனின் முன்னாள் கணவராக நடித்திருக்கும் நடிகர் கூட தனது நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார்.

 

தீபக் டி.மேனனின் ஒளிப்பதிவு கேரள கிராமத்தின் அழகை நம் கண்முன் நிறுத்துவதோடு, அவர்களின் வாழ்வியலை எந்தவித ஒப்பணையும் இல்லாமல் காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.

 

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல் அனைத்தும் இனிமை. அதிலும் நிவின் பாலி - அதிதி பாலன் காதலை பறிமாறும் காட்சியில் ஒலிக்கும் அந்த மழை பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். பின்னணி இசை கதையோடு பயணிப்பதோடு மட்டும் அல்லாமல் காட்சிகளுக்குள் நம்மையும் அழைத்து செல்கிறது. ஷபிக் முகமது அலியின் படத்தொகுப்பு நேர்த்தி.

 

இலவச திட்டங்கள் மூலம் காலூன்ற நினைக்கும் அரசியல் கட்சி பிறகு அராஜகம், வன்முறை போன்றவற்றை கையில் எடுத்து எப்படி ஒரு கிராமத்தையே தன் வசப்படுத்த நினைக்கிறது, என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் லிஜு கிருஷ்ணா, பா.ஜ.க அரசை மறைமுகமாக விமர்சித்து இருந்தாலும், மிக கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

 

கட்சியின் பெயர்களையும், அவர்களின் அடையாளத்தையும் மறைமுகமாக காட்டி, மிக நாசுக்காக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநர், மக்கள் யாரை எதிர்க்க வேண்டும், யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை மிக சாமர்த்தியமாக சொல்லியிருக்கிறார்.

 

”நம் மண், நம் வீடு, நம் நாடு” என்ற மக்கள் முழக்கத்தோடு முடிவடையும் படம், யாருக்கு எதிராக இந்த முழக்கத்தை நாம் எழுப்ப வேண்டும் என்பதை மிக அழகாக சொல்லு படம், இப்படிப்பட்ட போர்குனம் இல்லை என்றால், நாம் எதையெல்லாம், எப்படியெல்லாம் அவர்களால் இழக்க நேரிடும் என்பதை எச்சரிக்கையாகவும் சொல்லியிருக்கிறது.

 

"படவெட்டு" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

 

Verdict : மக்களுக்கான விழிப்புணர்வு

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA