சற்று முன்

'இனிமேல்' ஆல்பம் ரிலீஸில் கைதி 2 அப்டேட் தெரிவித்த லோகேஷ் கனகராஜ்   |    இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது 'ஆபிரகாம் ஓஸ்லர்'!   |    அறிமுக இயக்குநர் செல்வ குமார் திருமாறன் இயக்கும் அற்புதமான ஃபீல் குட் எண்டர்டெயினர் படம்!   |    தனது அடுத்த முயற்சியாக திரைப்பட தயாரிப்பில் களமிறங்கும் Behindwoods   |    டிரெய்லர் வெளியானபோதே திரையுலகிலிருந்து, பலர் போன் செய்து திட்டினார்கள் - நடிகர் கலையரசன்   |    பாலாஜி தேர்ந்த அரசியல்வாதி அளவு, மிக தேர்ச்சிபெற்ற பேச்சாளர் - நடிகர் ஜெகன்   |    பெரும் மகிழ்ச்சியில் இயக்குநர் ராஜேஷ்.M !!   |    பன்முகத் திறமையின் உருவகம், ஈடு இணையற்ற மனிதர் ஃபஹத் ஃபாசில் - எஸ்.எஸ்.கார்த்திகேயா   |    திகில் நாடகத் தொடரான இன்ஸ்பெக்டர் ரிஷியின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது   |    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட 'திருட்டு பாடம்' டீஸர்   |    காடு எனக்குக் கடவுளை விட மிகவும் பிடிக்கும் - நடிகை ஆண்ட்ரியா   |    பழிவாங்குதலின் பரிமாணங்களைப் புதிய திரை அனுபவமாக உணரும் வகையில் 'கங்கணம்'   |    நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது   |    திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற 'பைக் டாக்சி' பூஜை!   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள RKFI   |    இயற்கையின் ஆசியில் திகட்டாத காதல் காவியமாக உருவாகும் 'ஆலன்'   |    ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இல் இடம்பெற்ற முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் இசை தொகுப்பு வெளியானது   |    திகில் நிறைந்த க்ரைம் டிராமா “இன்ஸ்பெக்டர் ரிஷி” அமேசான் பிரைமில் வெளியாகிறது   |    ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்!   |    யுடியுபரக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்ட ‘96’ பட இயக்குநர் பிரேம் குமார்   |   

croppedImg_449657226.jpeg

'காரி’ விமர்சனம்

Directed by : Hemanth

Casting : Sasikumar, Parvathy Arun, JD Chakravarthy, Balaji Sakthivel, Aadukalam Naren, Ammu Abhirami. Redin Kingsley, Nagineedu, Ramkumar Ganesan

Music :D.Imman

Produced by : S.Lakshman Kumar

PRO : John

Review :

ராமநாதபுரத்தை சேர்ந்த இரு கிராமங்களுக்கிடையில் உள்ள பிரச்சினையால் கருப்பன் கோவில் திருவிழா பல ஆண்டுகளாக  நடக்காமல் இருக்கிறது. இதனால் தண்ணீர் வராத ஆற்றை அரசு குப்பை கிடங்காக மாற்ற முடிவு செய்கிறது. இதனை விரும்பாத ஊர்  பெரியவர்கள் அதை தடுக்க கோவில் திருவிழாவை நடத்த முடிவு செய்கிறார்கள். இதனால் கோவில் நிர்வாகம் யாருக்கு சொந்தம்? என்ற பிரச்சினை வருகிறது. இதற்கு தீர்வு காண ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி அந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த ஊர் தான் கோவில் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என முடிவு செய்யப்படுகிறது. போட்டி நடந்ததா? இந்த போட்டியில் யார் வெற்றி பெற்றார்கள்? எந்த ஊர் கோவில் நிர்வாக  பொறுப்பை ஏற்றது? என்பதுதான் காரி படத்தின் கதை. 

 

சசிகுமார் குதிரை ஜாக்கியாக நடித்திருக்கிறார். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை வழக்கமான பாணியில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கச்சிதமாக நடித்திருக்கிறார். 

 

நாயகியாக நடித்திருக்கும் பார்வதி அருண், கதையுடன் பயணிக்கும் கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்திருக்கிறார். அதிலும், தனது காளையை கேட்டு அவர் மண்ணில் புரண்டு அழும் காட்சியில் கைதட்டல் பெறும் விதத்தில் நடித்திருக்கிறார்.

 

சசிகுமாரின் அப்பாவாக நடித்திருக்கும் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம், சக்யுக்தா ஆகியோரது நடிப்பும், ரெடின் கிங்ஸ்லியின் காமெடியும் அளவாக இருக்கிறது.

 

டி.இமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. வழக்கமான தனது பாணியை தவிர்த்திருக்கும் டி.இமான், தனது அடையாளமே இல்லாமல் புதிதாக இசையமைத்திருக்கிறார். குறிப்பாக பின்னணி இசைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

 

ஜல்லிக்கட்டு என்பது அது நடக்கும் ஒருநாள் நிகழ்வு மட்டும்ன்று, அது உழைக்கும் மக்களின் ஊனோடும் உயிரோடும் கலந்து அவர்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்தது என்பதை இரத்தமும் சதையுமாக கூறியிருக்கிறார்கள்.

 

கதை எழுதி இயக்கியிருக்கும் ஹெமந்த், ஜல்லிக்கட்டு போட்டியின் மூலம் மாடுகளை மக்கள் கடவுளாக தான் வணங்குகிறார்களே தவிர, அவற்றை எந்த விதத்திலும் துன்புறுத்துவதில்லை, என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

"காரி​" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

 

Verdict : தரமான கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA