சற்று முன்

பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |   

croppedImg_1899284952.jpeg

'வாரிசு’ விமர்சனம்

Directed by : Vamshi Paidipally

Casting : Vijay, Rashmika Mandana, Sarathkumar, Prabhu, Prakash Raj, Shaam, Srikanth, Jayasudha, Yogi Babu, Sangeetha, Ganesh Venkatraman

Music :Dil Raju and Sirish

Produced by : Thaman S

PRO : Riaz K Ahamed

Review :

"வாரிசு" வம்சி படியப்பள்ளி இயக்கத்தில்  தில் ராஜு மற்றும்  சிரிஷ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இசை Thaman. இந்த படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

தொழில் ஜாம்பவானான சரத்குமார், அவருக்கு மூன்று மகன்கள், முதல் இரண்டு மகன்களும் தந்தைக்கு உதவியாக இருக்கிறார்கள். மூன்றாவது மகனான விஜய் தான் சொந்த காலில் நின்று சுயமாக முன்னுக்கு  வரவிரும்புகிறார். இதனால் விஜயின் தந்தையான சரத்குமார் கோவத்தில் விஜய்யை வீட்டை விட்டு அனுப்பிவிடுகிறார். இதற்கிடையில்  சரத்குமாரின் மூத்த மகன்கள் மூலம் அவருடைய தொழிலிலும் , குடும்பத்திலும் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் சரத்குமாரின் தொழில் சாம்ராஜ்யத்தில் சரிவு ஏற்படுகிறது. அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு தனது இளையமகனை விஜயை தனது அடுத்த வாரிசாக அறிவிக்கிறார். இதுல பிடிக்காத விஜய்யின் சகோதரர்கள் சரத்குமாரின் எதிரியான பிரகாஷ் ராஜுடன் கூட்டு சேர்க்கிறார்கள். இந்தச் சரிவை சரி செய்ய சரத்குமாரின் தொழில் வாரிசாகக் களம் இறங்கும் நாயகன் விஜய் தன் குடும்பத்தையும், தொழிலையும் சரிவிலிருந்து மீட்டாரா? பின்னர் சரத்குமாரின் தொழில் ஏன் நஷ்டம் அடைந்தது ? குடும்பத்தினர் செய்த சதி என்ன ? பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்பது தான் "வாரிசு" படத்தின் கதை.

 

தளபதி விஜய் செம மாஸான என்ட்ரி மூலம் மிரட்டியிருக்கிறார். எப்போதும் போல் நடனம், ஆக்‌ஷன் ஆகியவற்றில் அமர்க்களப்படுத்தியிருப்பவர், ரசிகர்களுக்குத் தேவைப்படும் இடங்களில் பஞ்ச் வசனங்களை சரமாரியாகத் பேசி திரை அரங்கை அதிர வைத்திருக்கிறார். அம்மாவிடம் செல்லப் பிள்ளையாகவும் அப்பாவின் பாசத்திற்கு ஏங்கும் மகனாகவும் நடிப்பிலும் உணர்வுகளை தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறார். வழக்கம் போல் காதல் காட்சிகளிலும் அவருக்கே உண்டான தனித்துவத்தோடு நடித்திருக்கிறார். ரசிகர்கள் எதிர்பார்ப்பை வஞ்சம் இன்றி தீர்வைத்திருக்கிறார். 

 

படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பை பொறுத்தவரை அவருக்கு வேலை ஒன்றும் இல்லை. கதாநாயகிக்கு வேலை கொடுக்கவேண்டும் என்பதற்காக ஒரு மூன்று பாடல்களுக்கு ஆடவைத்திருக்கிறார்கள். அந்த வேலையை சரியாக செய்துள்ளார். 

 

அப்பாவாக நடித்திருக்கும் சரத்குமார் மற்றும் ஜெயசுதா தங்களுடைய அனுபவ நடிப்பை கண்முன் நிறுத்தியுள்ளனர். எமோஷனல் காட்சிகளில் மனதை பிணைக்கிறார்கள். ஆரம்பத்தில் சரத்குமார் அதிரடியாக எண்ட்ரி கொடுத்தாலும் பிறகு அமைதியாகி விடுகிறார்.

 

வில்லனாக வரும் பிரகாஷ்ராஜ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவருடைய திறமைக்கேற்ற கதாபாத்திர கணம் இல்லை. 

 

விஜய்க்கும் - யோகி பாபுவிற்குமான கூட்டணி செம்மையாக இருக்கிறது. விஜய்க்கு பின் இப்படத்தில் மிகப்பெரிய பிளஸ் என்றால், அது யோகி பாபு. இவர்களுடைய நகைசுவை திரையரங்கில் கைதட்டல்களை அள்ளுகிறது.

 

தமனின் இசையில் “ரஞ்சிதமே...” பாடல் மட்டுமே கேட்கும்படி இருக்கிறது. மற்ற பாடல்கள் விஜய் பட பாடல்கள் போலவே இல்லை. பின்னணி இசை காட்சிகளைப் போல் உற்சாகம் இன்றி பயணிக்கிறது.

 

ஸ்ரீகாந்த் - ஷாம் இருவரும் விஜய்க்கு அண்ணன்களாக கதாபாத்திரத்திதோடு ஒன்றி அழகாக பொருந்தி அதற்கு ஏற்றாற்போல் அற்புதமாக நடித்தும் இருக்கிறார்கள். பிரபு தன்னுடைய கதாபாத்திரத்திற்கு தேவையானதை கச்சிதமாக செய்துள்ளார். சங்கீதாவிற்கு நல்ல ரோல் ஆனால், சம்யுக்தாவிற்கு பெரிதளவில் ஸ்கோப் இல்லை.

 

ஒளிப்பதிவு கார்த்திக் பழனி படப்பிடிப்பு காட்சிகள் பிரமாண்டமாகவும் வண்ணமயமாகவும் இருக்கிறது. ஒரு பெரிய கமர்சியல் படம் பார்த்த உணர்வைத் தனது ஒளிப்பதிவு மூலம் கொடுத்திருக்கிறார். 

 

முதல் பாதி முழுவதும் ரொம்ப மெதுவாக நகர்ந்தாலும், இடைவேளைக்கு பிறகு  கதையில் கொஞ்சம் ஜீவனை கொடுத்து தூக்கி நிறுத்தி இருக்கிறார் இயக்குனர். அதற்கு பெரும் உதவியாக இருப்பது விஜய்யின் நடிப்பு மட்டுமே . 

 

என்னதான் கமெர்ஷியலாக படமாக இருந்தாலும், சண்டை காட்சிகளை  கொஞ்சம் குறைத்திருக்கலாம். படம் இடைவேளைக்கு பிறகு செல்லும் வேகத்திற்கு இணையாக முதல் பாதி இன்னமும் மெருகேற்றப்பட்டிருந்தால் மேலும், சிறப்பாக இருந்திருக்கும். படத்தில் தேவை இல்லாமல் திணிக்கப்பட்டசில விஷயங்கள் சலிப்படையும் வகையில் இருக்கிறது. கதையை பொறுத்தவரை எதுவும் சொல்லும் படியாக இல்லை. விஜய் ரசிகர்களை கதை ஏமாற்றினாலும் விஜய்யின் நடிப்பு  ஏமாற்றவில்லை.

 

"வாரிசு" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : "வாரிசு" குடும்பத்தோடு பார்க்க ஒரு நல்ல குடும்ப படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA