சற்று முன்

பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |   

croppedImg_1133090455.jpeg

'மெய்ப்பட செய்’ விமர்சனம்

Directed by : Velan

Casting : Adhav Balaji, Madunika, PR Tamil Selvam, Adukalam Jayabal, OAK Sundar, Super Good Subramani, Rajkapoor, Raghul Thatha, Benjamin

Music :Bharani

Produced by : SR Harshith Pictures - PR Tamil Selvam

PRO : Suresh Sugu Dharma

Review :

"மெய்ப்பட செய்" வேலன் இயக்கத்தில் SR ஹர்ஷித் பிக்சர்ஸ்  - PR தமிழ்  செல்வம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இசை பரணி. இந்த படத்தில் யாதவ் பாலாஜி, மதுனிகா, PR தமிழ் செல்வம், ஆடுகளம் ஜெயபால், ஓக் சுந்தர், சூப்பர் குட் சுப்ரமணி, ராஜ்கபூர், ராகுல் தாதா, பெஞ்சமின் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

தஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஆதவ் பாலாஜியும், மதுனிகாவும் காதலிக்கிறார்கள், இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மதுனிகாவின் தாய்மாமன் பி.ஆர்.தமிழ் செல்வன். இதனால் காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டு ஊரை விட்டு வெளியேறி சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்குகிறார்கள் இவர்களுக்கு உதவியாக மூன்று நண்பர்களும் செல்கிறார்கள். அங்கு குடியிருக்கும் வீட்டில் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.அந்த பிரச்சினையை எதிர்த்து போராடுகிறார்கள். இவர்களுடைய போராட்டம் வெற்றி பெற்றதா? பிரச்சினைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை கிடைத்ததா? என்பதுதான் "மெய்ப்பட செய்" படத்தின் கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் ஆதவ் பாலாஜி, முதல் படம் போல் இல்லாமல் காதல், செண்டிமெண்ட், சண்டைக்காட்சி என அனைத்திலும் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். 

 

நாயகி மதுனிகா வசீகரிக்கும் அழகாலும், நடிப்பாலும் கவனிக்க வைத்து இருக்கிறார்.

 

நாயகியின் தாய்மாமன் வேடத்தில் நடித்திருக்கும் பி.ஆர்.தமிழ் செல்வம், ஆரம்பத்தில் அடாவடி வில்லனாக வலம் வந்தாலும், இறுதியில் நல்லவனாக மாறிவிடுகிறார். திடமான உடம்போடு வில்லன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருப்பவருக்கு கூடுதல் காட்சிகள் கொடுத்திருக்கலாம்.

 

கட்ட கஜா என்ற தாதா வேடத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் ஜெயபால், உட்கார்ந்த இடத்திலேயே மிரட்டுகிறார். அவருடைய தோற்றமும், வசன உச்சரிப்பும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறது.

 

ஓ.ஏ.கே.சுந்தர், சூப்பர் குட் சுப்பிரமணி, ராஜ்கபூர், பெஞ்சமின், ராகுல் தாத்தா, பயில்வான் ரங்கநாதன், நாயகனின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் என்று படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஆர்.வேல், காட்சிகளை தெளிவாக படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளை ரசிக்கும்படியும், சண்டைக்காட்சிகளை மிரட்டலாகவும் காட்சிப்படுத்தியுள்ளார்.

 

பரணியின் இசையில் பாடல்கள் திரும்ப திரும்ப கேட்கும் ரகமாகவும், வரிகள் புரியும்படியும் இருக்கிறது. பின்னணி இசையும் குறையில்லாமல் பயணிக்கிறது.

 

இயக்குநர் வேலன் தான் சொல்ல வந்த கருத்தை, கமர்ஷியலாக திரைக்கதை அமைத்து சொல்லியிருந்தாலும், எந்த ஒரு விஷயத்தை திணிக்காமல் நேர்த்தியாகவும், சுறுக்கமாகவும் சொல்லியிருக்கிறார்.

 

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாக தண்டனை கொடுப்பதோடு, மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் வேலன். சொல்ல வந்த கருத்தை, தெளிவாக சொல்லி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

 

அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் நல்ல மெசஜை நெருடல் இல்லாத காட்சி அமைப்புகளோடும், விறுவிறுப்பாக திரைக்கதையோடும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். 

 

"மெய்ப்பட செய்​​" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : நல்ல கமர்சியல் படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA