சற்று முன்

ஜூன் 29 முதல் திரையரங்குகளில் 'இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி'   |    தபால்காரர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் உருவாகியிருக்கும் “ஹர்காரா” ஃபர்ஸ்ட் லுக்!   |    இசைஞானியின் ஆசியுடன் புதிய படத்தை பூஜையுடன் துவக்கினார் இயக்குநர் பாரதி கணேஷ்!   |    'ஜென்டில் மேன்-2' மூலம் மீண்டும் தமிழில் இசையமைக்கும் ஆஸ்கர் வின்னர்  இசையமைப்பாளர்!   |    #Nikhil20 படத்தின் தலைப்பு 'சுயம்பு' என வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட லுக் வெளியாகியுள்ளது!   |    என்னை பெண்ணியவாதியா என்று கூட கேட்டார்கள் - ஐஸ்வர்யா ராஜேஷ்   |    மிரள வைக்கும் மோஷன் வீடியோவுடன் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!   |    கார்த்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் 'ஜப்பான்' படத்தின் சிறப்பு டீசர் வெளியீடு!   |    55வது பிறந்தநாளில் ஒரு முதிய பெண்மணியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் ரகுமான்!   |    35 ஆண்டுகளாக நான் காளி வேடம் போட்டேன் - நடிகர் டி. குமரன்   |    சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது!   |    மோசடிக் கும்பலின் தலைவியாக சோனியா அகர்வால் நடிக்கும் 'உன்னால் என்னால்'   |    பல நாட்டு திரைத்துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ONE திரைப்படத்தின் டிரைலர்   |    “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    தளபதி விஜய்யுடன் 68-வது படத்திற்காக அவருடன் இணையும் பிரபல தயாரிப்பு நிறுவனம்!   |    ஸ்ரீகாந்த் தேவாவின் 100 வது படத்தின் இசை வெளியீட்டு விழா!   |    ஐந்து மொழிகளைச் சேர்ந்த ஐந்து சூப்பர் ஸ்டார்கள் இணைந்து வெளியிடவுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷனில் 'கொட்டுக்காளி'   |    அஜித்குமாரின் நீண்ட கால விருப்பம்!   |    'ஃபுட்டேஜ்' படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் மிகப்பிரபலமான எடிட்டர்!   |   

croppedImg_754422593.jpeg

‘ஷூட் தி குருவி’ விமர்சனம்

Directed by : Mathivanan

Casting : Arjai, Sha Ra, Asiq Usain, Rajkumar.G, Suresh Chakravarthy, Mani Vaithy, Sai Prasanna, Gypsy Naveen

Music :Moon Rocks

Produced by : Rasa Studios and ShortFlix - KL Ramesh and Sanjeevi Kumar

PRO : Yuvaraj

Review :

"ஷூட் தி குருவி" மதிவாணன் இயக்கத்தில் ராசா ஸ்டுடியோஸ் மற்றும் ஷார்ட்பிலிக்ஸ் - K.J.ரமேஷ் , சஞ்சீவி குமார் தயாரித்திருக்கும்  இந்த படத்திற்கு இசை மூன்ராக்ஸ். இந்த படத்தில் அர்ஜை, ஆஷிக் ஹுசைன், ஷாரா, சுரேஷ் சக்ரவர்த்தி, மணி வைத்தி, சாய் பிரசன்னா, ஜிப்ஸி நவீன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக இருப்பதோடு, தன்னை பற்றிய தகவல்கள் வெளி உலகத்திற்கு முழுமையாக தெரியாமல் வாழும் குருவி ராஜன், எளிமையான இரண்டு பேரால் கொல்லப்படுவதோடு, அவனுடைய சாம்ராஜயமே சரிந்து விடுகிறது. யார் அந்த குருவி ராஜன்? அவனது சாம்ராஜ்யத்தை அழித்து அவனையும் அழித்த அந்த இரண்டு சாமனியர்கள் யார்?, அவர்கள் அதை எப்படி செய்தார்கள்? என்பதை சுறுக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்வதே ‘ஷூட் தி குருவி’ படத்தின் கதை.

 

பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் அர்ஜை குருவி ராஜன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு கொடுக்கப்படும் பில்டப்புக்கு நியாயம் சேர்க்கும் வகையில் அவரது தோற்றமும் நடிப்பும் அமைந்திருக்கிறது.

 

வழக்கம் போல் தனது பாணியில் வசனம் பேசி சிரிக்க வைத்திருக்கும் ஷாரா, கூடுதலாக அம்மா செண்டிமெண்ட் காட்சி ஒன்றில் நடித்து கவனம் ஈர்க்கிறார்.

 

பல படங்களில் நாயகர்களின் நண்பராக நடித்து வந்த ஆஷிக் ஹுசைன் கதையின் திருப்புமுனை கதாபாத்திரத்தில் பாராட்டும்படி நடித்திருக்கிறார். மிக இயல்பாகவும் நடித்திருப்பவர் பல இடங்களில் ரியாக்‌ஷன்கள் மூலமாகவே சிரிக்க வைக்கிறார்.

 

பேராசிரியர் வேடத்தில் நடித்திருக்கும் ராஜ்குமார்.ஜி வயதான வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். 

 

சுரேஷ் சக்ரவர்த்தி, மணி வைத்தி, சாய் பிரசன்னா, ஜிப்ஸி நவீன் என அனைத்து நடிகர்களும் அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் பிரண்டன் சுஷாந்த் ஒரு அறைக்குள் வைத்தே பெரும்பாலான படத்தை முடித்திருக்கிறார். எஞ்சிய காட்சிகளையும் வெவ்வேறு அறைகளில் படமாக்கியிருப்பவர், லைட்டிங் போன்றவற்றில் ஆக்‌ஷன் படங்களுக்கான உணர்வை அமர்க்களமாக கொடுத்திருக்கிறார்.

 

மூன்ராக்ஸ் இசையில் பின்னணி இசையின் சத்தம் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. சில இடங்களில் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களை விட பீஜியம் சத்தமே கேட்கிறது.

 

படத்தொகுப்பாளர் கமலக்கண்ணன் காட்சிகளை வேகமாக நகர்த்துவதோடு, சுவாரஸ்யமாகவும் நகர்த்தி சென்றிருக்கிறார்.

 

பிளாக் காமெடி என்று சொல்லக்கூடிய ஜானரில் மிக எளிமையான ஒரு கதைக்கு, சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் மதிவாணன். 

 

தொழிலதிபர் வி.கே.டி.பாலனின் ஆரம்பக்கால வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை மையக்கருவாக வைத்துக்கொண்டு, ஒரு கேங்ஸ்டர் படமாகவும், அதே சமயம் பிளாக் காமெடி ஜானர் திரைக்கதையோடு இயக்குநர் மதிவாணன் சொல்லிய விதம் ரசிக்க வைக்கிறது.

 

ஒரு எளிமையான கதையை மிக எளிமையான முறையில் படமாக்கியிருக்கும் இயக்குநர் மதிவாணன், அறைகளுக்குள் காட்சிகள் நடப்பது போல் திரைக்கதையை வடிவமைத்து, அதில் காமெடி, செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என அனைத்து அம்சங்களையும் கையாண்ட விதம், நடிகர்களிடம் வேலை வாங்கிய விதம் என அனைத்து ஏரியாவிலும் அசத்தியிருக்கிறார்.

 

"ஷூட் தி குருவி" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : காமெடி, செண்டிமெண்ட், ஆக்‌ஷன் கலந்த படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA