சற்று முன்

கர்நாடக சக்கரவர்த்தி சிவண்ணா ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் தரும், புதிய அப்டேட்!   |    பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸை இதுவரை திரையில் கண்டிராத அவதாரத்தில் #BSS12 -ல் காணலாம்   |    எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆவணப்படம் 16வது IDSFFK விழாவுக்கு தேர்வு!   |    Susi Ganeshan Reveals Motion Poster for 'Ghuspaithiya   |    'ரகு தாத்தா' இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை பற்றி தான் பேசுகிறது!   |    SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக, அசத்தலான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது !   |    அசத்தலான காமெடி ஜானரில், 'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்' டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது   |    எத்தனை முரண்கள் இருந்தாலும் ஒருவர் ஒருவரை அரவணைத்து கொள்வது ஒரு அழகு - இயக்குநர் நாகராஜ்   |    மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் இயக்குநர் மற்றும் நடிகர் சேரன்!   |    சாண்டி மாஸ்டரின் துடிப்புமிக்க நடன அசைவுகளுடன் 'பிரதர்' பட முதல் பாடல் வெளியானது!   |    கதை அம்சத்தோடு technical -ளாகவும் பிரமிக்க வைக்கிறது 'TEENZ' - இயக்குனர் பிரபு சாலமன்   |    பல தடைகளைக் கடந்து ரிலீஸை நோக்கி முன்னேறி வரும் ‘வணங்கான்’   |    தனுஷ் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!   |    சாந்தினி தமிழரசன் நடிக்கும் சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் 'அமீகோ'!   |    ஒன்ட்ராக ஒரிஜினல்ஸின் ‘ராசாத்தி’ புரோமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு   |    கலை இலக்கியத்தை அரசியல் வடிவமாக்கி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் - இயக்குநர் பா ரஞ்சித்   |    என்னை என் அரசியலைப் புரிந்து கொள்வதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம் 'வாழை' - மாரி செல்வராஜ்   |    விஷ்ணு விஷால் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் செய்து அசத்திய ரசிகர்கள்!   |    உலகமெங்கும் தீபாவளி அன்று வெளியாகிறது ‘அமரன்’   |    'மனோதரங்கல்' உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஆழமாக சென்று தாக்கும் தொடர்   |   

croppedImg_1161374540.jpeg

'N4' விமர்சனம்

Directed by : Lokesh Kumar

Casting : Micheal Thangadurai, Gabriella Sellus, Vinusha Devi, Anupama Kumar, Afsal Hameed, Akshay Kamal, Pragya Nagra, Vadivukkarasi, Abhishek Shankar, Azhagu

Music :Balasubramanian.G

Produced by : Dharmraj Films - Naveen Sharma, Lokesh Kumar

PRO : AIM

Review :

"N4'" லோகேஷ் குமார் இயக்கத்தில் தர்மராஜ் பிலிம்ஸ்  - நவீன் சர்மா, லோகேஷ் குமார் தயாரித்திருக்கும்  இந்த படத்திற்கு இசை பாலசுப்பிரமணியம்.ஜி. இந்த படத்தில் அக்‌ஷய் கமல் மற்றும் பிரக்யா நக்ரா, அனுபமா குமார், வடிவுக்கரசி, அழகு, அபிஷேக், மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா, வினுஷா தேவி, அப்சல் அமீத் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

பெற்றோர் இல்லாத மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா, வினுஷா தேவி, அப்சல் அமீத் ஆகியோரை சிறு வயதில் இருந்து வடிவுக்கரசி வளர்த்து வருகிறார். இவர்கள் சென்னை காசிமேடு பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். கல்லூரி மாணவரான அக்‌ஷய் கமல் தனது நண்பர்களுடன் அடிக்கடி காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து மது அருந்துவது, சிகரெட் புகைப்பது என்று இருக்கிறார். அப்பகுதியில் இருக்கும் ‘N4’ காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டராக அனுபமா குமார் பணியாற்றுகிறார்.

 

ஒரே பகுதியை சேர்ந்தவர்களாக இவர்கள் அனைவரும் இருந்தாலும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல் இருக்க, ஒரு சம்பவம் இவர்கள் அனைவரையும் ஒரே வட்டத்திற்குள் வரவைக்கிறது. அந்த சம்பவம் என்ன? அதனால் யார் யாருக்கு எப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்தது? என்பதை சொல்வதே ’என் 4’ படத்தின் மீதிக்கதை.

 

படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் கதையோடு பயணிப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதோடு, அதில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் என அனைவரும் கதபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

 

அனைத்து நடிகர்களும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், மைக்கேல், கேப்ரில்லா, வினுஷா தேவி, அப்சல் அமீத் ஆகியோருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு பேரும் தங்களது வேடத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

 

அக்‌ஷய் கமல் மற்றும் பிரக்யா நக்ரா ஜோடி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அனுபமா குமார், வடிவுக்கரசி, அழகு, அபிஷேக் என அனைத்து நடிகர்களும் தங்களது வேலையை சரியாக செய்து மனதில் நிற்கிறார்கள்.

 

கதை துவக்கத்தில் இருந்து முடிவு வரை வரும் சில கதாபாத்திரங்களும், அதில் நடித்திருக்கும் இளைஞர்களும் கவனம் பெறும் விதத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

முழுக்க முழுக்க காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நடைபெறும் கதையை மிக இயல்பாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் திவ்யங், தனது கேமராவையும் ஒரு கதாபாத்திரமாக பயணிக்க வைத்திருக்கிறார்.

 

டைடில் பாடல் மூலம் கவனம் ஈர்க்கும் இசையமைப்பாளர் பாலசுப்பிரமணியம்.ஜி, அளவான பின்னணி இசை மூலம் கதையுடன் பயணித்திருக்கிறார்.

 

காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் அதை சுற்றி வசிக்கும் சில மனிதர்களின் வாழ்வியல் மற்றும் அவர்களை ஒரே வட்டத்திற்குள் கொண்டு வரும் ஒரு சம்பவத்தை மையமாக வைத்து விறுவிறுப்பான சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் திரில்லர் படத்தை கொடுக்க இயக்குநர் லோகேஷ் குமார் முயற்சித்திருக்கிறார்.

 

ஆரம்பத்தில் கதாபாத்திரங்கள் மூலம் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், படம் தொடர்ங்கி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கதை தொடங்காமல் இருப்பது படத்திற்கு தொய்வை ஏற்படுத்துகிறது. அதேபோல், ஏகப்பட்ட கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு அவர்களை கதையுடன் எப்படி தொடர்பு படுத்துவது என்பதிலும் இயக்குநர் சற்று தடுமாறியிருக்கிறார்.

 

பலவீனமான திரைக்கதையால் படம் பல இடங்களில் சலிப்படைய செய்தாலும், காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதிகளை காட்சிப்படுத்திய விதம், கதபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்தது, அவர்களிடம் நடிப்பு வாங்கியது, போன்றவை படத்தை ரசிக்க வைக்கிற

 

"N4" படத்திற்கு மதிப்பீடு 2.5/5

 

Verdict : சுமார் ரகம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA