சற்று முன்

'இனிமேல்' ஆல்பம் ரிலீஸில் கைதி 2 அப்டேட் தெரிவித்த லோகேஷ் கனகராஜ்   |    இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது 'ஆபிரகாம் ஓஸ்லர்'!   |    அறிமுக இயக்குநர் செல்வ குமார் திருமாறன் இயக்கும் அற்புதமான ஃபீல் குட் எண்டர்டெயினர் படம்!   |    தனது அடுத்த முயற்சியாக திரைப்பட தயாரிப்பில் களமிறங்கும் Behindwoods   |    டிரெய்லர் வெளியானபோதே திரையுலகிலிருந்து, பலர் போன் செய்து திட்டினார்கள் - நடிகர் கலையரசன்   |    பாலாஜி தேர்ந்த அரசியல்வாதி அளவு, மிக தேர்ச்சிபெற்ற பேச்சாளர் - நடிகர் ஜெகன்   |    பெரும் மகிழ்ச்சியில் இயக்குநர் ராஜேஷ்.M !!   |    பன்முகத் திறமையின் உருவகம், ஈடு இணையற்ற மனிதர் ஃபஹத் ஃபாசில் - எஸ்.எஸ்.கார்த்திகேயா   |    திகில் நாடகத் தொடரான இன்ஸ்பெக்டர் ரிஷியின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது   |    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட 'திருட்டு பாடம்' டீஸர்   |    காடு எனக்குக் கடவுளை விட மிகவும் பிடிக்கும் - நடிகை ஆண்ட்ரியா   |    பழிவாங்குதலின் பரிமாணங்களைப் புதிய திரை அனுபவமாக உணரும் வகையில் 'கங்கணம்'   |    நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது   |    திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற 'பைக் டாக்சி' பூஜை!   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள RKFI   |    இயற்கையின் ஆசியில் திகட்டாத காதல் காவியமாக உருவாகும் 'ஆலன்'   |    ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இல் இடம்பெற்ற முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் இசை தொகுப்பு வெளியானது   |    திகில் நிறைந்த க்ரைம் டிராமா “இன்ஸ்பெக்டர் ரிஷி” அமேசான் பிரைமில் வெளியாகிறது   |    ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்!   |    யுடியுபரக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்ட ‘96’ பட இயக்குநர் பிரேம் குமார்   |   

croppedImg_1737637296.jpeg

'ஏலியன்ஸ் 2042’ விமர்சனம்

Directed by : Huang Zhuasheng

Casting : Ren Tianye, Zhang Zhilu, Qu Niciren

Music :Huang Zhuasheng

Produced by : Huang Zhuasheng

PRO : RS Prakash

Review :

ஏலியன்களை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில், வரும் மே 26 ஆம் தேதி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 6 மொழிகளில் வரும் மே 26 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக உள்ள ‘ஏலியன்ஸ் 2042’ திரைப்படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.

 

ஏலியன் எனப்படும் வேற்றுகிரகவாசிகள் பூமியில் உள்ள தண்ணீர் ஆதாரங்களை திருடும் நோக்கில் அனைத்து நகரங்கள் மீதும் மிகப்பெரிய தாக்குதல் நடத்துகிறார்கள். உலக நாடுகளின் ராணுவம் அனைத்தும் ஏலியன்களிடம் தோற்றுப் போக, சீன ராணுவம் மட்டும் கடைசி வரை போராடி வருகிறது. ஆனால், அவர்களிடம் இருக்கும் ஆயுதத்தால் ஏலியன்களை அழிக்க முடியாமல் போக அவர்களும் தோல்வியடைகிறார்கள். அதில் இருந்து தப்பிக்கும் ராணுவ வீரரான செங் லிங், தனது குடும்பத்தை பார்க்க சொந்த ஊருக்கு செல்ல முயற்சிக்கும் போது, ஏலியன்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சிறு குழுவுடன் சேர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அவர்களுடன் சேர்ந்து செங் லிங் ஏலியன்களை அழித்தாரா? இல்லையா? என்பதை முழுக்க முழுக்க ஆக்‌ஷனாக சொல்லியிருப்பதே ‘ஏலியன்ஸ் 2042’.

 

ஏலியன்களை பற்றி பல ஹாலிவுட் படங்களும், சீன படங்களும் வெளியாகியிருந்தாலும், இந்த படத்தில் ஏலியன்களை அழிப்பதற்கான முயற்சி மற்றும் ஏலியன்கள் தண்ணீர் ஆதாரங்களை பூமியில் இருந்து திருடுவது போன்ற புதிய யோசனைகள் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துகிறது.

 

ஏலியன்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடும் ராணுவ வீரர் மற்றும் ராணுவ குழுவினரின் நடிப்பு கதைக்கு ஏற்ப அமைந்திருக்கிறது. ஏலியன்களிடம் சண்டையிடும் போது உணர்ச்சிகரமாக நடித்து கவனம் பெறுகிறார்கள்.

 

ஏலியன்களை வடிவமைத்த விதம் நாம் ஏற்கனவே பார்த்த சில படத்தில் வரும் ஏலியன்கள் சாயலில் இருந்தாலும், அவற்றில் இருக்கும் ஆயுதங்கள் மற்றும் மனித ஆயுதங்களால் அழிக்க முடியாத சக்தி படைத்தவைகள் போன்றவை புதிதாக இருக்கிறது.

 

படம் தொடங்கியது முதல் இறுதி வரை துப்பாக்கி சண்டையாகவே இருப்பது சற்று சலிப்படைய செய்கிறது. அதிலும், மனிதன் தயாரித்த ஆயுதங்களால் ஏலியன்களை எதுவும் செய்ய முடியாது, என்று தெரிந்தும் அதே ஆயுதங்களை தொடர்ந்து பயன்படுத்தி ஏலியன்களிடம் சண்டைப்போடுவது திரைக்கதையின் சுவாரஸ்யத்தை குறைக்கிறது.

 

ஏலியன்களை அழிக்க எப்படிப்பட்ட ஆயுதங்களை உருவாக்குவார்கள்? என்ற எதிர்பார்ப்பு படத்திற்கு சற்று சுவாரஸ்யத்தை சேர்த்தாலும், ஏலியன்கள் பற்றிய தகவல்களை அழுத்தமாக சொல்வதோடு, விஷுவல் எபெக்ட்டில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இந்த ஏலியன்களையும் ரசிகர்கள் கொண்டாடி இருப்பார்கள்.

 

இருப்பினும், ஆக்‌ஷன் பிரியர்களுக்கு ஏற்றபடி ஏலியன்களை வடிவமைத்திருப்பதோடு, ஏலியன்களிடம் இருந்து நாயகன் எப்படி தப்பிப்பார்?, ஏலியன்களை அழிப்பதற்கான வழி என்ன? போன்றவை படத்தை ரசிக்க வைக்கிறது.

 

ஒளிப்பதிவு, இசை மற்றும் ஒலி வடிவமைப்பு, படத்தொகுப்பு, கிராபிக்ஸ் என அனைத்தும் தரமாக இருக்கிறது. ஒரு சில காட்சிகளில் கிராபிக்ஸ் பணியில் தடுமாற்றம் தெரிந்தாலும், அதை சரிக்கட்டி திரைக்கதை மற்றும் காட்சிகளை வேகமாக நகர்த்தி செல்லும் இயக்குநர் Huang Zhuasheng சிறு பட்ஜெட்டில் புதிய வடிவத்தில் ஏலியன்களை பற்றிய படத்தை ரசிக்கும் வகையில் கொடுத்து திருப்திப்படுத்தியிருக்கிறார்.

 

"ஏலியன்ஸ் 2042​" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : நல்ல பொழுதுபோக்கு படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA