சற்று முன்

காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |    துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு – 2026 ஆகஸ்டில் பான்-இந்தியா வெளியீடு   |    சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் ‘பவர் பேட்டா’ டைட்டில் போஸ்டர் வெளியீடு!   |    “டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்   |    “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு   |    கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்   |    ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!   |    அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!   |    திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!   |    மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!   |   

croppedImg_1915044499.jpeg

'1982 அன்பரசின் காதல்’ விமர்சனம்

Directed by : Ullas Shankar

Casting : Aashik Merlin, Sandana Aravind, Amal Ravindran, Arunima, Harish, Sivaprakasham, Selva and Ullas Shankar

Music :S.Chinthamani

Produced by : Devakanya Productions

PRO : Vijayamuralee

Review :

 

 

"1982 அன்பரசின் காதல்’" உல்லாஷ் சங்கர்இயக்கத்தில் தேவகன்யா புரோடக்ஷன்ஸ்  தயாரித்திருக்கும். இந்த படத்திற்கு  இசை எஸ்.சிந்தாமணி. இந்த படத்தில் ஆஷிக் மெர்லின், சந்தனா அரவிந்த், உல்லாஷ் சங்கர், அருணிமா ராஜ், அமல் ரவீந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

கல்லூரில் தன்னுடன் படித்த சந்தனா அரவிந்தை, ஆஷிக் மெர்லின் ஒரு தலையாக காதலிக்கிறார். இதற்கிடையில்  சந்தனா அரவிந்த் யாரையோ தேடிக்கொண்டு செல்கிறார். அவருக்கு உதவியாக ஆஷிக் மெர்லினும் அவருடன் செல்கிறார். வழியில் ஒரு ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் அவர்களை உல்லாஷ் சங்கர் என்பவர் காப்பாற்றி தன்னுடைய இடத்தில அவர்களை தங்க வைக்கிறார். அங்கு உல்லாஷ் சங்கரின் நடவடிக்கைகள் அச்சம் ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அங்கிருந்து தப்பித்து செல்லும் அவர்களை உல்லாஷ் சங்கர் விடாமல் துறத்துகிறார். சந்தனா அரவிந்த் யாரை தேடி செல்கிறார்? ஆஷிக் மெர்லின் காதலை சந்தனா அரவிந்த் ஏற்றாரா? உல்லாஷ் சங்கர் யார் எதற்காக அவர்களை விடாமல் துரத்துகிறார்? என்பதுதான் ‘1982 அன்பரசின் காதல்’ படத்தின் கதை.


ஆஷிக் மெர்லின் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில்  இளம் காதலனாக கச்சிதமாகவும்  துறுதுறுவெனவும்  நடித்திருக்கிறார். காதலி எதை சொன்னாலும் தட்டாமல் செய்பவர், தனது காதலியின்  நிலை கண்டு கலங்குவதும், அதே காதல் கைகூடி வரும் சூழலில் கொண்டாடுவதும் புது நடிகர் என்பதையே மறக்கடிக்கிறார். 

 

இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் அமல் ரவீந்திரன், குறைவான காட்சிகளே என்றாலும் நிறைவாகவே செய்துள்ளார். 

 

சந்தானா அரவிந்த் மற்றும் அருணிமா ராஜ் என படத்தில் இரண்டு நாயகிகள். இருவரும் கேரளா புட்டில் செய்த லட்டு போல் இருக்கிறார்கள். நாயகிகளை சுற்றி முழு கதையும் நகர்வதால் இரண்டு பேரும் கதையோடு பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார்கள்.

 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் உல்லாஷ் சங்கர், வில்லனுக்கான அத்தனை அம்சங்களும் நிறைந்தவராக இருக்கிறார். பார்வையிலேயே பதற வைக்கும் விதத்தில் கூர்மையான கண்களோடு, முரட்டுத்தனமான தோற்றத்தோடும் வலம் வருபவர், அதிகம் பேசவில்லை என்றாலும் படம் முழுவதும் மிரட்டுகிறார்.

 

நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ஹரிஷ் சிவபிரகாஷம், செல்வா, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சுமதி தாஸ், முருகன் வேடத்தில் நடித்திருக்கும் தமிழன் என அனைவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

 

சிந்தாமணி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.. பின்னணி இசை சிறப்பு. செபாஸ்டியன் கேமரா மலை பிரதேசத்தின் அழகை அள்ளியுள்ளது. 

 

எழுதி இயக்கியிருக்கும் உல்லாஷ் சங்கர், உணர்வுப்பூர்வமான காதல் கதையை 1982 -ம் காலக்கட்ட மனநிலையோடும், தற்போதைய காலக்கட்ட மனநிலையோடும் ஒப்பிட்டு சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அவருடைய திரைக்கதையில் காதலை  அழுத்தமாக சொல்லாமல் வேறு சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் காதல் கதை கலவரக்கதையாக மாறிவிடுகிறது.

 

இருந்தாலும், உல்லாஷ் சங்கரின் முரட்டுத்தனம் மற்றும் எந்த இளைஞரை பார்த்தாலும் கொலை வெறியோடு தாக்குவது போன்றவை படத்தை எதிர்பார்ப்போடு பார்க்க வைக்கிறது.


இயக்குனர் உல்லாஷ் ஷங்கர் இரண்டு வெவ்வேறு காதல் கதையை படத்தின் துவக்கம் முதல் திகில் மர்மம், ஆக்சன், காமெடி என பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாகவும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும், வண்ணம்   காட்சிப்படுத்தி கவனிக்க வைக்கிறார் 

 

"1982 அன்பரசின் காதல்" படத்திற்கு மதிப்பீடு 2.5/5

 

Verdict : எளிமையான கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA