சற்று முன்

இங்கிருந்து பாலிவுட் செல்பவர்கள் மீது நிறைய மரியாதை வைத்துள்ளார்கள்!   |    ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை!   |    விஜய் சேதுபதி படத்தின் கதாசிரியர் அருள் செழியன் இயக்குனராக அறிமுகமாகும் குய்கோ!   |    கஷ்டப்படுகிற ஹீரோயினாக நடிப்பதை விட ஒரு நெகட்டிவ் ரோலில் கெத்தாக நடிக்கலாம்.   |    இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது!   |    ஆண்கள் கூட்டத்தின் நடுவே தான் மட்டுமே ஒரு பெண் - மனம் திரானந்த நாயகி நிரஞ்சனி   |    நல்ல கண்டன்ட் கொடுத்தால் கண்டிப்பாக பத்திரிக்கையாளர்கள் கொண்டாடுவார்கள்   |    இளையராஜா இசையில் யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக பாடிய பாடல்!   |    இதுவரை இல்லாத தோற்றத்தில் நாக சைதன்யா நடிக்கும் 'தண்டேல்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    வித்தியாசமான தோற்றத்தில் பாலிவுட்டின் நம்பிக்கைக்குரிய நடிகை நடிக்கும் 'G2 '( குடாச்சாரி 2)   |    'தி வில்லேஜ்' எனும் திகில் தொடருடனான எனது ஒ டி டி டிஜிட்டல் தள அறிமுகம் - நடிகர் ஆர்யா   |    'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' குழுவின் நன்றி தெரிவிப்பு விழா!   |    அஜித் சாருக்கு நான் கொஞ்சம் நெருக்கம் ஆகியுள்ளேன் - நடிகை யாஷிகா ஆனந்த்!   |    ரஜினி ஜோடியாக நடித்த நடிகை முதன்மை வேடத்தில் நடிக்கும் 'ஆலகாலம்'   |    கோலாகலமாக நடைபெற்ற “தி வில்லேஜ்” சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    22வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து!   |    25 லட்ச ரூபாயில் எடுக்க முடிந்த படத்திற்கு இரண்டு கோடி செலவழிக்கிறார்கள்!   |    ஒரு ரசிகனை பல சமயங்களில் கன்வின்ஸ் செய்வது இயலாத காரியம் - நடிகர் அரிஷ் குமார்   |    ஹைதராபாத்தில் அதிரடி ஆக்சன் காட்சியுடன் தொடங்கிய 'சூர்யாவின் சனிக்கிழமை'   |    விருதுகளை அள்ளும் சார்ட்டட் அக்கவுண்டன்ட் 'ஜூட் பீட்டர்'   |   

croppedImg_690018311.jpeg

‘அங்காரகன்’ விமர்சனம்

Directed by : Mohan Dachu

Casting : Sreepathy, Sathyaraj, Niya, Appukutty, KC Prabath, Reina Karad, Angadi Theru Mahesh

Music :Ku Karthik

Produced by : Sreepathy

PRO : John

Review :

"அங்காரகன்" மோகன் டச்சு இயக்கத்தில் ஸ்ரீபதி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு  இசை கு.கார்த்தி. இந்த படத்தில் ஸ்ரீபதி, நியா, சத்யராஜ், அங்காடித்தெரு மகேஷ், அப்புக்குட்டி, கே.சி.பிரபாத், ரெய்னா காரத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

குறிஞ்சி மலை வனப்பகுதியில் இருக்கும் ரிசார்ட்டில் தம்பதியான நாயகன் ஸ்ரீபதி - நாயகி நியா மற்றும் மேலும் பல விருந்தினர்கள் தங்குகிறார்கள். பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ரிசார்ட்டில் இருக்கும் ராணி பங்களா மட்டும் பூட்டியே இருக்கும் நிலையில், ரிசார்ட்டின் புதிய மேலாளரான அங்காடி தெரு மகேஷ், அந்த அறையை திறந்து சுத்தப்படுத்தி, அதில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறார். அந்த விருந்து முடிந்த பிறகு அங்கிருந்த இரண்டு பெண்கள் மாயமாகி விடுவதோடு, நாயகன் ஸ்ரீபதியும், மற்றொரு விருந்தினரும் அடித்துக்கொள்கிறார்கள். அப்போது, அங்கு திடீர் வருகை தரும் போலீஸ் அதிகாரி சத்யராஜ், நடத்தும் விசாரணையில் அந்த ரிசார்ட்டின் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்ததா?, மாயமான பெண்களின் நிலை என்ன? என்பதை திகில் மற்றும் மர்ம பின்னணியோடு சொல்வது தான் ‘அங்காரகன்’.

 

நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீபதி புதுமுகம் என்றாலும் நடிப்பு, ஆட்டம், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்திலும் பாஸ் மார்க் வாங்கும் அளவுக்கு இருக்கிறார். எந்த நேரமும் சரக்கு கையுமாக இருக்கும் அவர், சரக்கை தேடி அலையும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது.

 

நாயகியாக நடித்திருக்கும் நியாவுக்கு ஒரு பாடல், சில காட்சிகள் என்றாலும் அதில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். அங்காடித்தெரு மகேஷ், அப்புக்குட்டி, கே.சி.பிரபாத், ரெய்னா காரத் ஆகியோர் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

படத்தின் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் சத்யராஜ், மொட்டை தலையுடன் மீண்டும் வில்லனாக மிரட்டியிருக்கிறார். ஆனால், அவரது நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு காட்சிகளில் அழுத்தம் இல்லாதது ஏமாற்றம். ஆரம்பத்தில் போலீஸ் அதிகாரியாக விசாரணை நடத்தும் சத்யராஜ், திடீரென்று அவதாரம் எடுப்பது கவனம் பெற்றாலும், அதை சரியான முறையில் சொல்லாமல் கோட்டை விட்டிருக்கிறார்கள்.

 

கருந்தேள் ராஜேஷின் கதைக்கு நாயகன் ஸ்ரீபதி திரைக்கதை அமைத்திருக்கிறார். திகில் மற்றும் மர்ம பின்னணியை கொண்ட கதையை ஸ்ரீபதியின் திரைக்கதை முற்றிலும் மாற்றியிருக்கிறது. (திரைக்கதை எழுதும்போதும் கதாபாத்திரமாக மாறி போதையில் இருந்திருப்பாரோ)

 

திரைக்கதை எழுதிய ஸ்ரீபதி தான் தடுமாறியிருக்கிறார் என்றால் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் மோகன் டச்சு அதை விட மோசம். ஒரு கதையை எப்படி சொல்ல வேண்டும் என்ற குறைந்தபட்ச அனுகுமுறை கூட இல்லாமல் காட்சிகளை கையாண்டு முழு படத்தையும் சொதப்பியிருக்கிறார். 

 

கு.கார்த்தியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது. படத்தொகுப்பு வளர் பாண்டியன் என்று டைடில் கார்டில் போடுகிறார்கள். ஆனால், படத்தை பார்த்தால் படத்தொகுப்பு செய்தது போலவே இல்லை. எடுத்த காட்சிகளை அப்படியே சேர்த்து வெளியிட்டது போல் இருக்கிறது. 

 

மாயமான பெண்கள் நிலை என்ன? என்ற விசயம் மட்டும் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அடுத்தடுத்த காட்சிகள் நகராமல் திரைக்கதை தொய்வாக நகர்கிறது. 

 

"அங்காரகன்" படத்திற்கு மதிப்பீடு 2.5/5

 

Verdict : சுமார்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA