சற்று முன்

சினிமா மாதிரி ஒரு பயங்கரமான ஆயுதம் வேறில்லை - இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர்   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரைம் வீடியோவின் 'சுழல் - தி வோர்டெக்ஸ்' இரண்டாவது சீசன்!   |    பிரபாஸின் ' சலார் ' திரைப்படத்தின் ஒரு வருட ட்ரெண்டிங் சாதனை!   |    ரொமான்ஸ் ஜானரில் உருவான '2K லவ்ஸ்டோரி' திரைப்பட வெற்றியை கொண்டாடும் விழா!   |    சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் 'மதராஸி' பட ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது!   |    கிராமப் பின்னணியில் அமானுஷ்ய மர்ம திரில்லரான 'எமகாதகி' படத்தின் வெளியீட்டு அறிவிப்பு!   |    ஆஹா ஓடிடி யில் காதலர் தினமான இன்று இரவு 7 மணி முதல் 'மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்'   |    'டிராகன்' படத்தில் நான் தான் அவருக்கு வில்லன், ஆனால் நல்ல வில்லன் - இயக்குநர் மிஷ்கின்   |    மடோனா செபாஸ்டியன் நடிக்கும் காதல்-நகைச்சுவை திரைப்படம் 'ஹார்ட்டின்'   |    காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ஆல்பம் 'பட்டி'   |    'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் பான் இந்திய படத்தில் இணைந்த பாலிவுட் ஜாம்பவான் அனுபம் கேர்!   |    சந்தோஷ் நாராயணனின் வசீகரிக்கும் இசையில் 'வா வாத்தியார்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    “ரெட்ரோ” படத்தின் “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது   |    அதர்வா முரளி நடிப்பில் முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும் ரொமான்ஸ் திரைப்படம் 'இதயம் முரளி'   |    பாட்ஷா கிச்சா சுதீப்பின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் 'மேக்ஸ்' ZEE5-ல்!   |    'VD12' படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு டீசர் வெளியாகியுள்ளது!   |    பிப்ரவரி 28 அன்று திரையரங்குகளில் ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியாகும் 'சாரி’   |    நடிகர் ரிச்சர்ட் ரிஷி & பெல்ஜியன் மலினோயிஸ் நாய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சுப்ரமணி’!   |    'ஓ மை கடவுளே' புகழ் அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் 'டிராகன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு   |    கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |   

croppedImg_1584462992.jpeg

’கெழப்பய’ விமர்சனம்

Directed by : Yazh Gunasekaran

Casting : Kathiresakumar, Krishnakumar, Vijaya Ranadeeran, KN Rajesh, 'Bakery' Murugan, Anudiya, 'Uriyadi' Anandaraj

Music :Kebi

Produced by : Season Cinema - Yazh Gunasekaran

PRO : Nikil murukan

Review :

"கெழப்பய" யாழ் குணசேகரன் இயக்கத்தில் சீசன் சினிமா – யாழ் குணசேகரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை கெபி. இந்த படத்தில் கதிரேசகுமார், கிருஷ்ணகுமார், விஜய ரனதீரா, கே.என்.ராஜேஷ், பேக்கரி முருகன், அனுதியா, உறியடி ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

வயதான முதியவர் ஒருவர் கிராமத்தில் இருக்கும் ஒத்தையடி பாதையில் சைக்கிளில் சென்றுக் கொண்டிருக்கும் போது அவர் பின்னாடி ஒரு கார் வருகிறது. அந்த காரில், கர்ப்பிணி பெண் மற்றும் ஐந்து ஆண்கள் பயணிக்கிறார்கள். ஆனால், அந்த காருக்கு வழிவிடாமல் முதியவர் சைக்கிளில் சென்றுக் கொண்டிருக்க, காரில் வருபவர்கள் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து வழி விட மறுக்கும் முதியவரை அடிக்கிறார்கள். இதனால், அந்த இடத்தில் பரபரப்பு ஏற்படுவதோடு, ஊர் மக்களும், போலீஸ்காரர்களும் வந்து விடுகிறார்கள். அதன் பிறகு என்ன நடந்தது?, அந்த காருக்கு பெரியவர் வழி விட மறுப்பது ஏன்? என்பதை சொல்வது தான் ‘கெழப்பழ’.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கதிரேசகுமார், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். காருக்கு வழிவிடாமல் தனது முடிவில் உறுதியாக இருக்கும் அவர், அடி வாங்கிய பிறகும் தனது நிலையை மாற்றிக்கொள்ளாமல் இருக்கும் போதே, காரின் பின்னணியில் ஏதோ ஒரு பெரிய விசயம் இருப்பதை நமக்கு உணர்த்தி விடுகிறார்.

 

கிருஷ்ணகுமார், விஜய ரனதீரா, கே.என்.ராஜேஷ், பேக்கரி முருகன், அனுதியா, உறியடி ஆனந்தராஜ் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களாக இருப்பதோடு, இயல்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார்கள்.

 

 

எளிமையான கதையை மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்தும்படி காட்சிகளை படமாக்கியிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.

 

இசையமைப்பாளர் கெபியின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. பெரும்பாலான இடங்களில் இசையை தவிர்த்துவிட்டு அமைதியை கடைப்பிடித்திருப்பது காட்சிகளின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்கிறது.

 

சிறு சம்பவத்தை வைத்து மிக சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் யாழ் குணசேகரன், முதல் பாதியை படு சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். பெரியவர் விடாப்பிடியாக இருக்கும் போதே காரில் என்ன இருக்கிறது?, என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படம் விறுவிறுப்பாகவும் நகர்கிறது.

 

திரைக்கதை மற்றும் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தும் இயக்குநர் யாழ் குணசேகரன், காரில் இருக்கும் மர்ம முடிச்சை அவிழ்க்கும் போது கொஞ்சம் விளக்கமாக சொல்லியிருப்பதோடு, அதற்கான காட்சிகளை அழுத்தமாக வைத்திருந்தால் படம் கூடுதல் கவனம் பெற்றிருக்கும். இருந்தாலும், சிறிய பட்ஜெட்டில், சிறிய நிகழ்வு ஒன்றை வைத்து இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்காக இயக்குநர் யாழ் குணசேகரனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

 

"கெழப்பய" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : கண்டிப்பாக பார்க்கலாம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA