சற்று முன்

மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |    தூய்மை பணியாளர் பத்மாவுக்கு பார்த்திபன் வழங்கிய மரியாதை!   |    அரசியல் அல்ல, முழு எண்டர்டெய்னர் - ‘லீடர்’ குறித்து லெஜெண்ட் சரவணன் விளக்கம்   |    Fire Fox Film House தயாரிப்பில் புதிய போலீஸ் லவ் கமர்ஷியல் படம், படப்பிடிப்பு தொடக்கம்!   |    ராம் சரண்–புச்சி பாபு சானா கூட்டணியில் ‘பெத்தி’, ஏப்ரல் 30 உலகளாவிய திரையரங்கு வெளியீடு!   |    'பராசக்தி' ZEE5-ல், பிப்ரவரி 7 முதல் உலகளாவிய டிஜிட்டல் வெளியீடு!   |    கனவே வில்லனாகும் காதல் பயணம் – ‘ட்ரீம் கேர்ள்’ குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி   |    லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ நிழல் உலகமும் காவல் துறையும் மோதும் மாஸ் ஆக்ஷன் திரில்லர்!   |   

croppedImg_1784760159.jpeg

’ஆர் யூ ஓகே பேபி’ விமர்சனம்

Directed by : Lakshmy Ramakrishnan

Casting : Samuthirakani, Abhirami, Lakshmy Ramakrishnan, Mysskkin, Aadukalam Naren, Paval Navaneethan, Mullaiarasi, Robo Shankar, Ashok, Anupama Kumar

Music :Ilaiyaraaja

Produced by : Dr.Ramakrishnan

PRO : AIM

Review :

"ஆர் யூ ஓகே பேபி" லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு  இசை இளையராஜா. இந்த படத்தில் முல்லையரசி, அசோக், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சமுத்திரக்கனி, அபிராமி, ஆடுகளம் நரேன், இயக்குநர் மிஷ்கின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

அஷோக்குடன் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வரும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த முல்லையரசி கர்ப்பமாகிறார். பொறுப்பில்லாமல் போதும் குடிபோதையுடன் இருக்கும் அசோக்கை நம்பி எப்படி குழந்தையை வளர்ப்பது என பயந்த முல்லையரசி மருத்துவமனையில் நர்ஸ் ஒருவரின் மூலம் சமுத்திரக்கனி – அபிராமி தம்பதியருக்கு குழந்தையை தத்துக்கொடுத்தது பணம் வாங்கி இதற்காக ஒப்பந்த பத்திரத்திலும் கையெழுத்தும் இடுகிறார். குழந்தை மீது பாசத்தை கொட்டி வளர்க்கின்றனர். ஒரு வருடம் கழித்து  தன் குழந்தை தனக்கு வேண்டும் என்று, தனியார் சேனல் ஒன்றை நாடுகிறார் முல்லையரசி. அங்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் "சொல்லாததும் உண்மை" என்ற தனது தொலைக்காட்சி லைவ் ஷோ மூலமாக பல்வேறு குடும்ப  பிரச்சனைகளுக்கு நியாயம் பெற்று தருகிறார். அதேபோல் இந்த பிரச்சினையையும் எமோஷனலாக இந்த குழந்தையின் தாயை வைத்து நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார். ஆனால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இறுதியில் நீதிமன்றத்தையும் அணுகுகிறார் முல்லையரசி.  முடிவு என்ன ஆனது, நீதிமன்றம் இந்த வழக்கை எப்படி கையாளுகிறது?, இறுதியில் குழந்தை யாருக்கு கிடைத்தது?  என்பதே “ஆர் யூ ஓகே பேபி” திரைப்படத்தின் மீதி கதை 

 

குழந்தை இல்லாத தம்பதியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி மற்றும் அபிராமி இருவரும் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறைந்த வசனங்கள் பேசி நிறைவான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்தின் உணர்வுகளை ரசிகர்களிடத்தில் கடத்தியிருக்கும் சமுத்திரக்கணியின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

 

திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ளும் முல்லையரசியின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது. ஒரு பக்கம் வறுமை மறுபக்கம் கொடுத்த குழந்தையை திரும்ப பெறுவதற்கான உணர்ச்சிகரமான போராட்டம் என்று அனைத்து உணர்சிகளையும் மிக இயல்பாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

 

முல்லையரசியின் காதலனாக நடித்திருக்கும் அசோக், நீதிபதியாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட அனைவரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, தங்களது நடிப்பால் படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்கள்.

 

குழந்தை இல்லாத தாய்மார்களின் வலிகளை உணர்த்தும் வகையில் நடித்திருக்கும் அபிராமியின் நடிப்பு மிரட்டல். அதிலும், வளர்ப்பு பிள்ளைக்காக தாய்ப்பால் சுரக்க வைக்கும் காட்சி நெகிழ்ச்சியின் உச்சமாக இருக்கிறது.

 

மக்களின் வாழ்வியலை மிக எதார்த்தமான திரைப்படங்களாக கொடுத்து வரும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பின்னால் நடக்கும் வியாபார அணுகுமுறைகளை வெட்ட வெளிச்சமாக்கும் முறையில் இப்படத்தின் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருப்பதோடு, நம் நாட்டில் குழந்தை தத்தெடுப்பில் இருக்கும் சிக்கல்கள் பற்றியும் விரிவாக பேசியிருக்கிறார்.

 

கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, கதைக்களத்தோடு பார்வையாளர்களையும் பயணிக்க வைக்கும் வகையில் காட்சிகளை இயல்பாக படமாக்கியிருக்கிறது.

 

இளையராஜாவின் இசை உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் பயணித்திருக்கிறது.

 

சி.எஸ்.பிரேம் குமாரின் நேர்த்தியான படத்தொகுப்பு அழுத்தமான கதையை தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறது.

 

தான் சொல்ல நினைத்ததை எந்தவித சமரசமும் இன்றி உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அதிலும், இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அடிதட்டு மக்களை மையப்படுத்தியே நடக்கின்றன என்ற உண்மையை உரக்க சொல்லியிருப்பவர், அதன் பின்னணியை நடுநிலையோடு சொல்லி பாராட்டு பெறுகிறார்.

 

படத்தை இயக்கியிருப்பதோடு, தொலைக்காட்சி நிகழ்ச்சியியை நடுத்துபவராகவும் நடித்திருப்பவர், அந்த நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் அதன் பின்னணியில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை தைரியமாக வெளிப்படுத்தியிருப்பது புருவத்தை உயர்த்த செய்திருக்கிறது.

 

குழந்தையில்லா தம்பதியின் வலி மற்றும் குழந்தை தத்தெடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் போன்றவை பற்றி மிக தெளிவாக பேசி மக்களிடம் புரிதலை ஏற்படுத்தியிருக்கும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், சட்டம் மற்றும் சமூகம் இப்படிப்பட்ட பிரச்சனைகளை எப்படி கையாளுகிறது என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையோடு, நிரந்த தீர்வு காண வேண்டியதின் முக்கியத்துவத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

"ஆர் யூ ஓகே பேபி" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA