சற்று முன்

இங்கிருந்து பாலிவுட் செல்பவர்கள் மீது நிறைய மரியாதை வைத்துள்ளார்கள்!   |    ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை!   |    விஜய் சேதுபதி படத்தின் கதாசிரியர் அருள் செழியன் இயக்குனராக அறிமுகமாகும் குய்கோ!   |    கஷ்டப்படுகிற ஹீரோயினாக நடிப்பதை விட ஒரு நெகட்டிவ் ரோலில் கெத்தாக நடிக்கலாம்.   |    இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது!   |    ஆண்கள் கூட்டத்தின் நடுவே தான் மட்டுமே ஒரு பெண் - மனம் திரானந்த நாயகி நிரஞ்சனி   |    நல்ல கண்டன்ட் கொடுத்தால் கண்டிப்பாக பத்திரிக்கையாளர்கள் கொண்டாடுவார்கள்   |    இளையராஜா இசையில் யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக பாடிய பாடல்!   |    இதுவரை இல்லாத தோற்றத்தில் நாக சைதன்யா நடிக்கும் 'தண்டேல்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    வித்தியாசமான தோற்றத்தில் பாலிவுட்டின் நம்பிக்கைக்குரிய நடிகை நடிக்கும் 'G2 '( குடாச்சாரி 2)   |    'தி வில்லேஜ்' எனும் திகில் தொடருடனான எனது ஒ டி டி டிஜிட்டல் தள அறிமுகம் - நடிகர் ஆர்யா   |    'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' குழுவின் நன்றி தெரிவிப்பு விழா!   |    அஜித் சாருக்கு நான் கொஞ்சம் நெருக்கம் ஆகியுள்ளேன் - நடிகை யாஷிகா ஆனந்த்!   |    ரஜினி ஜோடியாக நடித்த நடிகை முதன்மை வேடத்தில் நடிக்கும் 'ஆலகாலம்'   |    கோலாகலமாக நடைபெற்ற “தி வில்லேஜ்” சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    22வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து!   |    25 லட்ச ரூபாயில் எடுக்க முடிந்த படத்திற்கு இரண்டு கோடி செலவழிக்கிறார்கள்!   |    ஒரு ரசிகனை பல சமயங்களில் கன்வின்ஸ் செய்வது இயலாத காரியம் - நடிகர் அரிஷ் குமார்   |    ஹைதராபாத்தில் அதிரடி ஆக்சன் காட்சியுடன் தொடங்கிய 'சூர்யாவின் சனிக்கிழமை'   |    விருதுகளை அள்ளும் சார்ட்டட் அக்கவுண்டன்ட் 'ஜூட் பீட்டர்'   |   

croppedImg_669525565.jpeg

’வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ விமர்சனம்

Directed by : Jeyaraj Pazhani

Casting : Niranjana Neithiyar, Shruthi Periyasamy, Arshath

Music :Darshan Kumar

Produced by : Neelima Isai

PRO : Yuvaraj

Review :

 

 

"வாழ்வு தொடங்குமிடம் நீ தானே" ஜெயராஜ் பழனி இயக்கத்தில் நீலிமா இசை தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு  இசை தர்ஷன் குமார். இந்த படத்தில்  நிரஞ்சனா நெய்தியார், ஸ்ருதி பெரியசாமி, அஷ்ரத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

இரண்டு இளம் பெண்கள் தன்பாலின சேர்க்கையாளராக மாறி காதலித்து வாழும் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் கதை. இவர்களின் காதலை இந்த சமூகம் அங்கீகரித்ததா? அல்லது புறக்கணித்ததா? சமூகத்தின் எதிர்ப்புகளை மீறி இவர்களின் காதல் என்ன ஆனது? என்பதுதான் வாழ்வு தொடங்குமிடம் நீ தானே படத்தின் கதை. 

 

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிரஞ்சனா நெய்தியார் மற்றும் ஸ்ருதி பெரியசாமி இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார்கள். தங்களுக்கு இடையிலான உறவும் காதல் தான் என்பதை நிரூபிக்க இருவரும் போராடும் காட்சிகளில் அசத்தலாக நடித்திருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் தர்ஷன் குமாரின் பின்னணி இசை கவனம் ஈர்க்கும் வகையில் இருப்பதோடு, படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

கதைக்கு ஏற்ப பயணித்திருக்கும் ஒளிப்பதிவாளர் சதீஷ் கோகுல கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, கடற்கரை மற்றும் கடற்கரை சார்ந்த பகுதிகளை ரசிக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறது.

 

ஒரு ஆணுக்கும், பெண்ணும் இடையே ஏற்படும் காதல் எப்போது வரும் என்று தெரியாது, அது இயற்கையானது என்பது போல், தன் பாலினத்தவர்கள் மீது ஏற்படும் காதலும் இயற்கையானது தான், எனவே அதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்திருக்கும் இயக்குநர் ஜெயராஜ் பழனி, அதை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார்.

 

இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியதால், இந்தியாவில் ஓரினச்சேர்க்கை என்பது தவறானது இல்லை என்றாலும், மக்கள் அப்படிப்பட்ட உறவுகளை மக்கள் ஏற்றுக்கொள்ள முன்வருதில்லை மாறாக ஓரினச்சேர்க்கையாளர்களை குற்றவாளிகளாகவே பார்க்கும் சூழலை மாற்றியமைக்கும் முயற்சியாக இயக்குநர் ஜெயராஜ் பழன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சில குறைகள் இருந்தாலும், ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் காதலை போல் தன் பாலினத்தவர்கள் மீது ஏற்படும் காதலும் இயற்கையானது தான், என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்.

 

"வாழ்வு தொடங்குமிடம் நீ தானே" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : நிகழ்கால சூழலுக்கு ஏற்ற நல்ல முயற்சி

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA