சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

croppedImg_2002055731.jpeg

’ரா ரா சரசுக்கு ரா ரா’ விமர்சனம்

Directed by : Keshav Depur

Casting : Karthik, Kayathri Padel, Jayavani, KPY Bala, Maari Vinoth, Katpadi Rajan, Viswa, Ravi Varma, Abishek, Benjamin, Simran, Deepika, Gayathri, Jeffi

Music :GKV

Produced by : Sky Wanders Entertainment - A.Jayalakshmi

PRO : Sakthi Saravanan

Review :

"ரா ரா சரசுக்கு ரா ரா" கேஷவ் தெபுர் இயக்கத்தில் ஸ்கை வாண்டேர்ஸ்  எண்டர்டெய்ன்மெண்ட் - A.ஜெயலட்சுமி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஜி.கே.வி, இந்த படத்தில் காயத்ரி படேல், ஜெயவாணி, KPY பாலா, மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவி வர்மா, அபிஷேக், பெஞ்சமின், சிம்ரன், தீபிகா, காயத்ரி, ஜெப்பி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

பெண்கள் தங்கும் விடுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் இருக்கும் தனக்கு எதிரான ஆதாரத்தை கைப்பற்றுவதோடு, அந்த பெண்ணையும் கொலை செய்ய பிரபல ரவுடி திட்டமிடுகிறார். அதற்காக தனது அடியாளை அந்த விடுதிக்குள் அனுப்ப, அவருடன் அதே விடுதி பெண்ணிடம் தனது கேமராவை பறிகொடுத்த உதவி இயக்குநர்கள் இருவர், அந்த கேமராவை கைப்பற்ற செல்கிறார்கள். இதற்கிடையே, அந்த விடுதியில் இருக்கும் சில பெண்களின் அழைப்பின் பேரில் ஆன்லைன் கால் பாய் ஒருவர் அங்கு செல்கிறார். இவர்களுடன், அதே விடுதியில் தங்கியிருக்கும் பெண்ணை காதலிக்கும் ஒரு இளைஞர் தனது காதலிக்கு பிறந்தநாள் பரிசு கொடுப்பதற்காக செல்கிறார்.

 

இப்படி பெண்கள் விடுதிக்குள் பல்வேறு காரணங்களுக்காக இரவு நேரத்தில் நுழையும் ஆண்களால் பெரும் குழப்பங்கள் ஏற்பட, அந்த குழப்பங்களை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை கிளுகிளுப்பாகவும், கலகலப்பாகவும் சொல்வதே ‘ரா ரா சரசுக்கு ரா ரா’ படத்தின் மீதிக்கதை.

 

தமிழ் சினிமாவில் அடல்டு காமெடி படங்கள் என்பது மிக அரிதான ஒன்று, அதுபோன்ற படங்கள் வெளியானால் அந்த படக்குழுவினரை மன்னிக்க முடியாத குற்றம் செய்தவர்கள் போல் பலர் விமர்சிப்பதும் உண்டு. இப்படி ஒரு நிலையில், வெளியாகியிருக்கும் இந்த அடல்டு காமெடி படம் இளைஞர்களை முழுமையாக திருப்திப்படுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் சிறப்பாகவே செய்திருக்கிறது.

 

முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் காயத்ரி படேல், சிம்ரன், தீபிகா, ஜெஃபி, அக்‌ஷிதா ஆகியோர் அனைவரும் விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் அடிக்கும் லூட்டிகளை பியூட்டியாக செய்திருப்பதோடு, படம் முழுவதும் குட்டை டவுசர் போட்டுக்கொண்டு பார்வையாளர்களை கிரங்கடித்து விடுகிறார்கள்.

 

இரட்டை அர்த்த வசனக்களை மிக சாதாரணமாக பேசுவதோடு, அதற்கான ரியாக்‌ஷன்களை எந்தவித தயக்கமும் இன்றி கொடுத்து கைதட்டலும் பெறும் இளம் நடிகைகளின் நடிப்பில் சிறு சிறு தடுமாற்றம் தெரிந்தாலும், படம் முழுவதும் அவர்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்பது போல் கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார்கள்.

 

காயத்ரி ரெமா, கார்த்திக், கேபிஒய் பாலா, மாரி வினோத், காட்பாடி ராஜன், விஷ்வா, ரவி வர்மா, அபிஷேக், பெஞ்சமின் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஆர்.ரமேஷ், ஒரு இரவில், ஒரே லொக்கேஷனில் நடக்கும் கதை என்றாலும், அதை பல்வேறு கோணங்களில் படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.

 

இசையமைப்பாளர் ஜி.கே.வி இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க வைப்பதோடு, முனுமுனுக்கவும் வைக்கிறது. பின்னணியில் இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

 

படத்தொகுப்பாளர் மார்த்தாண்ட் கே.வெங்கடேஷ் வெட்டியதை விட தணிக்கை குழுவினர் வெட்டியது அதிகம் என்பதால், பல காட்சிகளும், வசனங்களும் முழுமை பெறாமல் போவது படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்துள்ளது.

 

எழுதி இயக்கியிருக்கும் கேஷவ் தெபுர், பெண்கள் தங்கும் விடுதியில் நடக்கும் குற்றங்களை மையப்படுத்தி கதை எழுதினாலும், முழுக்க முழுக்க அடல்டு காமெடி ஜானரில் திரைக்கதை அமைத்திருக்கிறார்.  படத்தின் முதல் பாதியில் இரட்டை அர்த்த வசனங்கள் மூலம் இளைஞர்களை கைதட்ட வைப்பவர், இரண்டாம் பாதியில் காமெடி காட்சிகள் மூலம் சிரிக்க வைக்கிறார்.

 

பெண்கள் விடுதியில் நடக்கும் மோசடியை சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் சொல்ல முயற்சித்தாலும், அதை திரைக்கதையில் அழுத்தமாக சொல்லாமல், பெண்களை இரட்டை அர்த்தம் வசனம் பேச வைப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது சில இடங்களில் படத்தை தொய்வடைய செய்கிறது. இருந்தாலும், படத்தில் இருக்கும் குறைகள் ரசிகர்களின் கண்களுக்கு தெரியாதவாறு கிளுகிளுப்பான காட்சிகள் மூலம் கவனம் ஈர்த்திருப்பவர், இரண்டாம் பாதி முழுவதும் பெண்கள் விடுதி குழப்பங்கள் மூலம் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்.

 

கார்த்திக் மற்றும் காயத்ரி படேல் இடையிலான ரொமான்ஸ் பாடல் மற்றும் அதை காட்சிப்படுத்திய விதம் பனிக்கட்டியை கூட பற்ற வைத்துவிடும் அளவுக்கு ஃபயராக இருக்கிறது. இந்த ஒரு பாடலின் மூலமாகவே ரசிகர்கள் கொடுத்த காசுக்கு நியாயம் செய்திருக்கும் இயக்குநர் கேஷவ் தெபுர், இளைஞர்களின் பல்ஸ் அறிந்து படத்தை இயக்கியிருக்கிறார்.

 

"ரா ரா சரசுக்கு ரா ரா" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : நல்ல பொழுதுபோக்கு படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA