சற்று முன்

சினிமா மாதிரி ஒரு பயங்கரமான ஆயுதம் வேறில்லை - இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர்   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரைம் வீடியோவின் 'சுழல் - தி வோர்டெக்ஸ்' இரண்டாவது சீசன்!   |    பிரபாஸின் ' சலார் ' திரைப்படத்தின் ஒரு வருட ட்ரெண்டிங் சாதனை!   |    ரொமான்ஸ் ஜானரில் உருவான '2K லவ்ஸ்டோரி' திரைப்பட வெற்றியை கொண்டாடும் விழா!   |    சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் 'மதராஸி' பட ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது!   |    கிராமப் பின்னணியில் அமானுஷ்ய மர்ம திரில்லரான 'எமகாதகி' படத்தின் வெளியீட்டு அறிவிப்பு!   |    ஆஹா ஓடிடி யில் காதலர் தினமான இன்று இரவு 7 மணி முதல் 'மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்'   |    'டிராகன்' படத்தில் நான் தான் அவருக்கு வில்லன், ஆனால் நல்ல வில்லன் - இயக்குநர் மிஷ்கின்   |    மடோனா செபாஸ்டியன் நடிக்கும் காதல்-நகைச்சுவை திரைப்படம் 'ஹார்ட்டின்'   |    காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ஆல்பம் 'பட்டி'   |    'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் பான் இந்திய படத்தில் இணைந்த பாலிவுட் ஜாம்பவான் அனுபம் கேர்!   |    சந்தோஷ் நாராயணனின் வசீகரிக்கும் இசையில் 'வா வாத்தியார்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    “ரெட்ரோ” படத்தின் “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது   |    அதர்வா முரளி நடிப்பில் முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும் ரொமான்ஸ் திரைப்படம் 'இதயம் முரளி'   |    பாட்ஷா கிச்சா சுதீப்பின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் 'மேக்ஸ்' ZEE5-ல்!   |    'VD12' படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு டீசர் வெளியாகியுள்ளது!   |    பிப்ரவரி 28 அன்று திரையரங்குகளில் ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியாகும் 'சாரி’   |    நடிகர் ரிச்சர்ட் ரிஷி & பெல்ஜியன் மலினோயிஸ் நாய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சுப்ரமணி’!   |    'ஓ மை கடவுளே' புகழ் அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் 'டிராகன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு   |    கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |   

croppedImg_1709766239.jpeg

‘செவ்வாய்கிழமை’ விமர்சனம்

Directed by : Ajay Bhupathi

Casting : Payal Rajput, Sritej, Ajmal Ameer, Chaitanya Krishna, Ajay Ghosh, Laxman

Music :B Ajaneesh Loknath

Produced by : Saikumar Yadavilli

PRO : DOne

Review :

"செவ்வாய்கிழமை" அஜய் பூபதி இயக்கத்தில் சுவாதி குணப்பட்டி, சுரேஷ் வர்மா, அஜய் பூபதி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு  இசை பி.அஜனீஷ் லோக்நாத். இந்த படத்தில் பயல் ராஜ்புட், நந்திதா ஸ்வேதா, ஸ்ரீதேஜ், அஜ்மல் அமீர், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லக்ஷ்மன்  மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

மகாலக்‌ஷ்மிபுரம் எனும் ஊரில் அந்த ஊர் மக்கள் சிலரைப் பற்றி சில எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்படுகிறது. அந்த வாசகங்கள் எழுதப்பட்ட மறுநாள் அவர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதுவும் இந்த சம்பவங்கள் செவ்வாய்கிழமைகளில் மட்டுமே நடக்கிறது. இந்த மர்ம மரணங்கள் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்திதா சுவேதா விசாரணை நடத்த, இறந்துபோன ஷைலுவின் ஆவி தான் இதற்கு காரணம் என்று அந்த ஊரில் உள்ள டாக்டர் ஒருவர் சொல்கிறார். இதை ஊர் நம்பினாலும், நந்திதா சுவேதா சம்பாமல் தனது விசாரணையை தொடர, உண்மையில் இந்த மரணங்களுக்கு பின்னணியில் இருப்பது ஷைலுவின் ஆவி தானா?, யார் அந்த ஷைலு? போன்ற கேள்விகளுக்கு மிரட்டலாக விடையளித்திருப்பது தான் ‘செவ்வாய்கிழமை’.

 

கதையின் நாயகியாக ஷைலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பயல் ராஜ்புத், இரண்டாம் பாதி படம் முழுவதையும் தன் தோளில் சுமந்திருக்கிறார். காமம் சார்ந்த நோயல் உடல் அளவில் மட்டும் இன்றி மனதளவிலும் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கசப்பான வாழ்க்கையின் வலியை படம் பார்ப்பவர்களிடம் எளிதாக கடத்தும் வகையில் அவரது நடிப்பு சிறப்பாக இருக்கிறது.

 

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா, அழுத்தமான வேடத்தில் பலம் வாய்ந்த பெண் அதிகாரியை பிரபதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.

 

ஸ்ரீதேஜ், அஜ்மல் அமீர், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லக்‌ஷ்மன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் தமிழ் சினிமாவுக்கு பரிட்சயம் இல்லாத முகங்களாக இருந்தாலும், கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள்.

 

எழுதி இயக்கியிருக்கும் அஜய் பூபதி, திரைக்கதை மற்றும் மேக்கிங் மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார். முதல் பாதியில் இடம்பெறும் திகில் காட்சிகள் மிரட்டலாக இருப்பதோடு, அறிமுக காட்சியில் காட்டப்படும் சிறுவன் மற்றும் சிறுமிக்கு என்ன ஆனது? என்ற கேள்வியோடு படம் சுவாரஸ்யமாக நகர, இடைவேளையின் போது சிறுமி பெரியவளாக இருக்கும் வேடத்தை காட்டும் இடைவேளைப் பகுதி எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

 

தொடர் மரணங்களுக்கான பின்னணியை சொல்லும் காட்சிகள் வழக்கமான பாதையில் பயணித்தாலும், அதன் பின்னணியை விவரிக்கும் திரைக்கதை வித்தியாசமாகவும், புதியதாகவும் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

முதல் பாதியில் திகில் காட்சிகள் மூலம் மிரட்டியிருக்கும் இயக்குநர் இரண்டாம் பாதியில் சில இடங்களில் சற்று தடுமாறினாலும், இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத் அவருக்கு தோள் கொடுத்து படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். அவரது பின்னணி இசையும், சில பீஜியம்களும் காட்சிகளை திகிலின் உச்சத்தில் உட்கார வைத்துவிடுகிறது.

 

ஒளிப்பதிவாளர் தசரதி சிவேந்த்ராவின் ஒளிப்பதிவில் திகில் காட்சிகள் அனைத்தும் பயமுறுத்தும் வகையில் இருக்கிறது. படத்தின் ஆரம்ப காட்சியிலேயே நம்மை திரைக்குள் இழுத்து விடுபவர், அடுத்தடுத்த காட்சிகள் மூலம் நம் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ளும்படி காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். அதிலும் இரவு நேர காட்சிகள் அனைத்தும் திக்…திக்…நிமிடங்களாக இருக்கிறது.

 

குல்லப்பள்ளி மாதவகுமாரின் படத்தொகுப்பு படத்தின் கதையை மிக தெளிவாக கடத்துகிறது. தஜுதின் சையத் மற்றும் ராகவ் வசனம் எளிமையாக இருந்தாலும் திரைக்கதைக்கு வலிமை சேர்த்திருக்கிறது.

 

முதல் பாதியில் திகில் காட்சிகளை வைத்து பேய் படம் பார்க்கும் உணர்வை கொடுக்கும் இயக்குநர் அஜய் பூபதி, இரண்டாம் பாதியில் க்ரைம் சஸ்பென் திரில்லர் ஜானரில் கதையை நகர்த்தியிருப்பதோடு, மருத்துவர் ரீதியிலான குறைபாட்டை திரைக்கதையில் வைத்து புது வழியில் படத்தை நகர்த்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

 

"செவ்வாய்கிழமை" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : வித்தியாசமான திகில் படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA