சற்று முன்

'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை ஒட்டி வெளியான 'புஷ்பா 2' டீசர்   |    உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் புது இயக்குனர்   |    ஒன்பது வருடங்களுக்கு பிறகு 'இன்று நேற்று நாளை' 2ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியது!   |    நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ள 'கல்கி 2898 AD' அனிமேஷன் அறிமுக வீடியோ!   |    ஜீவிக்கு 4 குளோன் இருக்கு - நடிகர் அப்துல் லீ   |    'சீயான் 62' வில் ஒப்பந்தமாகியுள்ள துஷாரா விஜயன்!   |    நகரம் முதல் கிராமம் வரை அனைவரும் முணுமுணுக்கும் பாடலாக மாறியுள்ள 'மயோன்' பாடல்!   |    தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது தான் 'வல்லவன் வகுத்ததடா' - இயக்குநர் விநாயக் துரை   |    மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ படக்குழுவினர்!   |    ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'கேன் (can)' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் அட்டகாசமான 'புஷ்பா: தி ரூல்' டீசர் வெளியாகவுள்ளது!   |    நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி...20 வருட கனவு தற்போது நினைவாகியது!   |    குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட 'ஸ்கூல் லீவ் விட்டாச்சு' ஆல்பம் பாடல்!   |    'தி ஃபேமிலி ஸ்டார்' ஒரு கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னர் - தயாரிப்பாளர் தில் ராஜு   |    அரண்மனை முதல் பாகம் செய்யும் போது, இது இப்படி சீரிஸாக மாறும் என நினைக்கவே இல்லை!   |    நானி 33 படத்தின் மூலம் மீண்டும் இணைந்த தசரா கூட்டணி!   |    'இனிமேல்' ஆல்பம் ரிலீஸில் கைதி 2 அப்டேட் தெரிவித்த லோகேஷ் கனகராஜ்   |   

croppedImg_805077158.jpeg

‘கிளாஸ்மேட்ஸ்’ விமர்சனம்

Directed by : Kuttypuli Sharavana Shakthi

Casting : Angaiyarkannan, Brana, Kuttypuli Sharavana shakthi, Mayilsamy, Tm karthik, Chaams, MP Muthupandi, Abi Nakshatra, Arul doss, Meenal, SR Jangid IPS

Music :Prithivy

Produced by : Mughavai Films International

PRO : AIM

Review :

"கிளாஸ்மேட்ஸ்" ஷரவணசக்தி இயக்கத்தில் முகவை பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு  இசை பிரித்வி. இந்த படத்தில் அங்கையற்கண்ணன், ஷரவணசக்தி, பிரனா, அபி நக்‌ஷத்ரா, மயில்சாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

கால் டாக்ஸி டிரைவரான நாயகன் அங்கையற்கண்ணனும், அவரது மாமா ஷரவணசக்தியும் குடிக்கு அடிமையானவர்கள். கார் ஒட்டி சம்பாதிக்கும் பணத்தை கட்டிங்...கட்டிங்காக செலவு செய்கிறார் நாயகன் அங்கையற்கண்ணன். அவருக்கு துணையாக இருக்கும் அவரது மாம ஷரவணசக்தி, மனைவி வேலை செய்து கொடுக்கும் பணத்தில் குடித்து குஷியாக வாழ்கிறார். குடிக்கு அடிமையான இவர்களால் இவர்களது குடும்பத்துக்கு மட்டும் இன்றி, அடுத்தவங்க குடும்பத்துக்கும் ஏகப்பட்ட சிக்கல்கள் வருகிறது. அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் எப்போதும் மது போதையில் இருக்கும் இவர்கள் அந்த போதையினாலேயே மிகப்பெரிய சிக்கல் ஒன்றில் சிக்கிக்கொள்ள, அதில் இருந்து மீண்டு வந்தார்களா?, மனம் திருந்தி மது பழக்கத்தை கைவிட்டார்களா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘கிளாஸ்மேட்ஸ்’ படத்தின் மீதிக்கதை.

 

 

நாயகனாக நடித்திருக்கும் அங்கையற்கண்ணன் அறிமுக நாயகனாக இருந்தாலும், கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார். மதுபோதையில் அவர் செய்யும் ரகளைகள் ரசிக்கும்படி இருக்கிறது.

 

நாயகனின் மாமவாக நடித்திருக்கும் ஷரவணசக்தி, வழக்கம் போல் தனது வசன உச்சரிப்பு மற்றும் உடல்மொழியால் நம்மை சிரிக்க வைக்கிறார். அதே சமயம், சில இடங்களில் அளவுக்கு அதிகமான பேச்சு மற்றும் நடிப்பு என்று ஒவர் டோஸ் கொடுப்பதை தவிர்த்திருக்கலாம். ஷரவணசக்தி தான் இயக்குநர் என்பதால் அவருக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாததால், மனுஷன் இஷ்ட்டத்துக்கு நடித்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் பிரனா, கணவன் என்னதான் குடிக்கு அடிமையாக இருந்தாலும், அவர் மீது அளவுக்கு அதிகமான அன்பை காட்டி உருகுவது ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்து படத்திற்கு பக்கபலமாக பயணித்திருக்கிறார்.

 

ஷரவணசக்திக்கு மனைவியாக நடித்திருக்கும் நடிகை, குடிகாரர்களை குணப்படுத்த வந்துவிட்டு அவர்களை விட பெரிய குடிகாரராகும் டி.எம்.கார்த்திக், துபாயில் வேலை செய்துவிட்டு மீண்டும் கிராமத்துக்கு வந்தாலும், கோட் சூட்டுடன் வலம் வரும் சாம்ஸ், மயில்சாமியின் மகளாக நடித்திருக்கும் அபி நக்‌ஷத்ரா, மயில்சாமி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும்  குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

 

பிரித்வி இசையில், சீர்காழி சிற்பி வரிகளில் பாடல்கள் அனைத்தும் ஆட்டமும், தாளமும் போட வைக்கிறது. அருண்குமார் செல்வராஜின் ஒளிப்பதிவு நேர்த்தி.

 

மது பழக்கத்துக்கு அடிமையானவர்கள் தங்களை சீரழித்துக் கொள்வதோடு, தங்களை சார்ந்திருப்பவர்களையும் எப்படி சீரழிக்கிறார்கள், என்று கிளாஸ் எடுத்திருக்கும் இயக்குநர் ஷரவணசக்தி, அதை நகைச்சுவையாகவும், ரகளையாகவும் சொல்லி ரசிக்க வைத்தாலும், படம் முழுவதும் குடி...குடி...என்று  காட்டுவது சற்று சலிப்படைய செய்கிறது. 

 

படத்தின் மையக்கருவுக்காக இயக்குநர் ஷரவணசக்தியை மனதார பாராட்டுவது போல், படத்தில் இடம்பெறும் பல வசனங்களுக்காகவும் பாராட்டலாம். குறிப்பாக, கிளைமாக்ஸ் நெருங்கும் போது, அபி நக்‌ஷத்ரா கதாபாத்திரம் மூலம் அவர் சொல்லியிருக்கும் விசயம் எதிர்பார்க்காத ஒன்றாக இருப்பதோடு, குடிநோயாளிகளுக்கான மரண அடியாகவும் இருக்கிறது.

 

"கிளாஸ்மேட்ஸ்" படத்திற்கு மதிப்பீடு 2.5/5

 

Verdict : 'குடி'மகன்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA