சற்று முன்

’கண்ணப்பா’ வெறும் திரைப்படம் அல்ல, இது நமது வரலாறு! - நடிகர் சரத்குமார்   |    சூரியின் உழைப்பு அசாதாரணமானது! - 'கருடன்' தேங்க்ஸ் கிவிங் மீட்டில் இயக்குனர் வெற்றிமாறன்   |    அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் 'பயமறியா பிரம்மை'   |    25வது நாளை நோக்கி வெற்றிநடை போடும் ‘சாமானியன்’   |    ஆறு வருட தேடலுக்குப் பிறகு இசையமைப்பதற்கான வாய்ப்பு! - இசையமைப்பாளர் எம். எஸ். பிரவீன்   |    'டகோயிட்' பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட செல்ஃபியைப் பகிர்ந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!   |    நடுத்தரக் குடும்பங்களின் யதார்த்த அனுபவங்களை படம் பிடித்து காட்டும் படம் ’தோனிமா’!   |    அவர் பெயரைக் கேட்டதுமே ஓகே சொல்லி விட்டேன்! - நடிகை அபிராமி   |    பஞ்சம் பிழைக்க வந்த அதே ஊரில் இன்று பாராட்டு! - விஜய் சேதுபதி   |    பிரபாஸின் 'கல்கி 2898 AD ' பட முன்னோட்டம் வெளியீடு   |    திரைப்பட படைப்பாளிகளுக்கு பிரபல நிறுவனங்கள் இணைந்து வழங்கும் பொன்னான வாய்ப்பு!   |    ‘மல்லி’ க்காக இணைந்த 80'ஸ் கதாநாயகிகள்   |    நீட் தேர்வின் மூலம் ஏற்படும் அவதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘அஞ்சாமை’!   |    ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!   |    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட 'கருடன்' இசை வெளியீட்டு விழா   |    வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட விஜய் சேதுபதியின் தோற்றத்துடன் வெளியான 'ஏஸ்' பட டீசர்!   |    'VJS 51' பட டைட்டில் டீஸருடன் வெளியானது!   |    ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் 25 வது படம் கேக் வெட்டி கொண்டாடிய குழுவினர்!   |    பிரபலங்கள் பாராட்டில் 'கோதையின் குரல்' குறும்படம்!   |    சன் டிவியில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் புதிய மெகாத்தொடர் மல்லி!   |   

croppedImg_1431094750.jpeg

'ஒரு நொடி’ விமர்சனம்

Directed by : B.Manivarman

Casting : Thaman Kumar, MS Baskar, Vela Ramamurthy, Pazha Karuppaiah, Sri Ranjani, Nikitha, Vignesh Adidhya, Deepa Shankar

Music :Sanjay Manickam

Produced by : Madurai Azhagar Movies & White Lamp Pictures - Azhagar .G & K.G.Ratheesh

PRO : Sri Venkatesh

Review :

"ஒரு நொடி" B.மணிவர்மன் இயக்கத்தில் மதுரை அழகர் மூவீஸ் மற்றும்  வைட் லாம்ப் பிக்சர்ஸ் - அழகர் G & K.G. ரத்தீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு  இசை சஞ்சய் மாணிக்கம். இந்த படத்தில் தமன் குமார், MS பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, ஸ்ரீ ரஞ்சனி, நிகிதா, விக்னேஷ் ஆதித்யா, தீபா ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்காக கடன்காரனை பார்க்கச் செல்லும் போட்டோ ஸ்டூடியோ ஓணரான எம் எஸ் பாஸ்கர் திடீரென காணாமல் போகிறார். இதை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக கதையின் நாயகன் தமன் குமார்.

 

இது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, இன்னொரு இடத்தில் ஒரு பெண் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறாள்.

 

இறந்து போன இந்த பெண்ணிற்கும், தொலைந்து போன எம் எஸ் பாஸ்கருக்கும் என்ன தொடர்பு, எம் எஸ் பாஸ்கர் மீண்டும் கிடைத்தாரா என்பது தான் மீதி கதை.

 

படத்தின் கதையில் இருக்கும் வேகம் திரைக்கதையில் சற்று தடுமாறுகிறது. திரைக்கதையில் சுவாரசியத்தை கூட்ட வேண்டும் என்பதற்காகவே, அடுத்தடுத்த கொலைகளை அடுகடுக்காக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிவர்மன்.

 

படத்தில் எம் எஸ் பாஸ்கர் மற்றும் தமன்குமார், சலூன் கடை நடத்தும் நடிகர் ஆகியோரின் நடிப்பை தவிர வேறு யாருடைய நடிப்பும் பெரிதாக எடுபடவில்லை.

 

படத்தின் பாடல்களும் பெரிதாக ஜோடிக்கவில்லை. ஒளிப்பதிவில் கவனம் கூட்டியிருக்கலாம். முதல் பாதை சலிப்பைத் தட்டியதால், இரண்டாம் பாதி நன்றாக இருந்தும் ஜோடிக்கவில்லை என்று சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் திரைக்கதையில் சில பல ஓட்டை ஒடிசல்களும் உள்ளன.

 

இருந்தாலும் படத்தின் பெயர் ஒரு நொடி என்பதற்கு ஏற்ப காட்சி அமைத்தது இயக்குனரின் தனி சிறப்பம்சம் . முழுக்க முழுக்க கதையை மட்டுமே நம்பி தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தாமல் போனதால் சூப்பரா தான் வந்திருக்க வேண்டிய ஒரு நொடி திரைப்படம் சுமாரான படமாக வந்துவிட்டது.

 

"ஒரு நொடி" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : சுவாரஸ்யமான க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA