சற்று முன்
'ரத்னம்’ விமர்சனம்
Directed by : Hari
Casting : Vishal, Samuthirakani, Priya Bhavani Shankar, Yogi Babu, Murali Sharma, Harish Peradi, Muththukumar, Vijayakumar, Jayaprakash, Thulasi, Kumki Ashwin
Music :Devi Sri Prasad
Produced by : Stone Bench Films & Zee Studios - Kaarthekeyen Santhanam
PRO : Nikil murukan
Review :
"ரத்னம்" ஹரி இயக்கத்தில் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் - கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத். இந்த படத்தில் விஷால், சமுத்திரக்கனி, பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, முரளி சர்மா, ஹரிஷ் பேரடி, முத்துக்குமார், விஜயகுமார், ஜெயபிரகாஷ், துளசி, கும்கி அஸ்வின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஆந்திரா தமிழ்நாடு பார்டரில் நடக்கும் கதை. திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக ஏற்படும் வழிப்பறி திருட்டு போன்றவற்றை கொள்ளையடிக்கும் கும்பல் பின்நாளில் நில மோசடி செய்யும் தாதாவாக உருவாகின்றனர். சர்வே எண் மாற்றி அளந்த ஒரு இடத்தில் இந்த தாதா கும்பல் அமைச்சரின் உதவியோடு மருத்துவக் கல்லூரி கட்டி முடிக்கும் தருவாயில், நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து விடுகிறது. இதற்குக் காரணம் தமிழ்நாட்டைச் சார்ந்த பிரியா பவானி சங்கரின் குடும்பத்தார் என்று தெரிந்து பிரியா பவானி சங்கரை கொலை செய்ய முற்படுகிறது.
வேலூரில் எம்எல்ஏ சமுத்திரக்கனியின் வலது கையாக இருக்கும் விஷால் ப்ரியா பவானி சங்கரை பார்த்த மாத்திரத்தில், அவருக்குள் ஏதோ ஒன்று ஓடுகிறது. இந்தக் கொலை கும்பல் ப்ரியா பவானி சங்கர் கொலை செய்ய வரும் அதே நேரத்தில் விஷால் காப்பாற்றுகிறார். பிரியா பவானி சங்கர் விஷாலுக்கும் என்ன தொடர்பு..? அவர்களிடமிருந்து அந்த நிலம் மீட்கப்பட்டதா..? இதுதான் படத்தின் கதை.
முழு படத்தையும் தன் தோள் மீது சுமந்திருக்கும் விஷால், ரத்னமாக இரத்த குளத்தில் நீந்தி இருக்கிறார். புயலை விட வேகமாக பயணித்திருக்கும் விஷால் கடுமையாக உழைத்திருப்பது அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது. அம்மா செண்டிமெண்ட் மூலம் ரசிகர்களை கலங்கடிக்கச் செய்யும் விஷால், ஆக்ஷன் காட்சிகளில் ஏகப்பட்ட ரிஸ்க் எடுத்திருக்கிறார்.
வழக்கமான கமர்ஷியல் நாயகியாக அல்லாமல் திரைக்கதையோடு பயணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், தோற்றத்திலும் நடிப்பிலும் எளிமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனி வழக்கம் போல் தனது நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு கம்பீரம் சேர்த்திருக்கிறார்.
யோகி பாபு வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. அவரை தொடர்ந்து வரும் நான் கடவுள் ராஜேந்திரன், விடிவி கணேஷ் போன்றவர்களின் நகைச்சுவை கடுப்பேற்றுகிறது.
முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, முத்துக்குமார் ஆகியோரின் வில்லத்தனம் வழக்கம் போல் மிரட்டுகிறது.
விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், துளசி, கஜராஜ், சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் மேனன், ஒய்.ஜி.மகேந்திரன், கணேஷ் வெங்கட்ராமன், கும்கி அஸ்வின் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் படத்தில் இருந்தாலும், அனைவரும் திரையை மட்டுமே நிரப்பியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் ஆக்ஷன் காட்சிகளை ஆக்ரோஷமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தில் ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் வருவதால், ஒன்றை மட்டும் ஒரே ஷாட்டில் எடுக்கும் முயற்சியை மேற்கொண்டு அதன் மூலம் ரசிகர்களை வியக்கவும் வைத்திருக்கிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அளவு.
இயக்குநரை விட ஸ்டண்ட் இயக்குநர் கனல் கண்ணனுக்கு தான் அதிகம் வேலை செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகளும், வாகனங்கள் மூலம் விரட்டும் காட்சிகள் எக்கச்சக்கம் என்றாலும் அவற்றை அவர் வடிவமைத்த விதம் ரசிகர்களை எரிச்சலடைய செய்கிறது.
இயக்குநர் ஹரி தனது வழக்கமான பாணியிலான கதையை, அதே வழக்கமான கமர்ஷியலோடும், வேகத்தோடும் சொல்லியிருந்தாலும், அருவாள் கலாச்சாரம் துப்பாக்கி சூடு வெட்டு குத்து கொலை சப்தம் என வழக்கமான கலவை மசாலா. ஆனால் இது ஒரு படி மேலே போய் ஹரியின் படங்களான சாமி கோவில் வேங்கை ஆறு ஆகிய படங்களில் காட்சிகளையே காப்பி அடித்து, இந்த படத்தின் காட்சிகளாக வைத்து படமாக்கியுள்ளார் இயக்குனர் ஹரி.
திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, அம்மா செண்டிமெண்ட், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தையும் அளவாக கையாண்டு அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக இயக்கியிருக்கும் இயக்குநர் ஹரி, ஆக்ஷன் காட்சிகளையும், படத்தின் நீளத்தையும் சற்று குறைத்தால் ரசிகர்கள் ரசிக்கும் படமாக மட்டும் இன்றி கொண்டாடும் படமாகவும் இருக்கும்.
"ரத்னம்" படத்திற்கு மதிப்பீடு 3/5
Verdict : அனைத்து தரப்பினரும் ரசிக்கக்கூடிய படம்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA