சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

croppedImg_1365321466.jpeg

'தலைமைச் செயலகம்' விமர்சனம்

Directed by : Vasanthabalan

Casting : Kishore, Sriya Reddy, Bharath, Remya Nambeesan

Music :Ghibran

Produced by : Radhika Sarathkumar, R. Sarathkumar

PRO : AIM

Review :

 

 

"தலைமைச் செயலகம்" வசந்த பாலன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் 
R. சரத்குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஜிப்ரான். இந்த தொடரில் கிஷோர், ஸ்ரீயா ரெட்டி, ரம்யா நம்பீசன், நிரூப் நந்தகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் கிஷோர் ஓர் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெறும் நிலையில் உள்ளார். இவர் சிறை சென்ற பின் முதல்வர் பதவியைப் பிடிக்க கிஷோரின் மகள் ரம்யா நம்பீசன், மருமகன் மற்றும் அரசியல் ஆலோசகர் ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் போட்டி போடுகிறார்கள்.

 

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஒரு கிராமப் பகுதியில் திருட்டு பட்டம் சுமத்தப்பட்டு பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்படுகிறார். சித்திரவதை உச்சத்தை அடியும் போது சூழ்ந்திருந்த அனைவரையும் வெட்டி வீசியெறிகிறார். பின்னர் மாயமான அவரை 15 வருடங்களாக உள்ளூர் காவல்துறை எங்குத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. குற்றவாளி கண்டுபிடிக்கப்படாத சூழலில், வழக்கு சி.பி.சி.ஐ.டி புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்படுகிறது. 

 

இந்த இரண்டு கதைகளும் ஒரு கட்டத்தில் இணைந்து பயணம் செய்கிறது.  
இதுவே 'தலைமைச் செயலகம்' தொடர்கதை 

 

முதலமைச்சராக முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் நடிகர் கிஷோர் நடிப்பின் புதிய பரிமாணங்களைத் தொட்டிருக்கிறார். “கொற்றவை” பாத்திரத்தில் வரும் ஷ்ரேயா ரெட்டியும் பார்வை மட்டும் உடல் மொழியிலேயே அந்த வேடத்துக்கு உயிரூட்டுகிறார்.

 

வடமாநில சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக வரும் ஆதித்யா மேனனின் விசாரணையில் இருக்கும் மிடுக்கு தமிழகக் காவல்துறை அதிகாரியாக வரும் பரத்திடம் மிஸ்ஸிங்! ஒரு சில இடங்களில் பரத்தின் நடிப்பு கதாபாத்திரத்தோடு ஒட்டாமல் பல மைல்களுக்கு அப்பால் இருக்கிறது. மூத்த அரசியல்வாதியும் முதல்வரின் நண்பராகவும் வரும் சந்தானபாரதியும், போராளி இயக்க தலைவியாக வரும் கனி குஸ்ருதியும் கவனிக்க வைக்கிறார்கள். ரம்யா நம்பீசன், நிரூப் நந்தகுமார் நடிப்பு சுமார் ரகம் என்றால், ஒய்.ஜி.மகேந்திரன், ஷாஜி ஷென் நடிப்பில் படு செயற்கைத்தனம். ஆனாலும் நிறைய பாத்திரங்கள் சமகால அரசியலோடு தொடர்புடைய நிஜமான மனிதர்களை ஆங்காங்கே நினைவூட்டுகின்றன.

 

ஜிப்ரானின் பின்னணி இசை தலைமைச் செயலகம் தொடருக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பகுதியாக பார்க்க வேண்டிய தொடர்தான்… ஆனால் முதல் எபிசோடைப் பார்க்க ஆரம்பித்தால் மற்ற எபிசோடையும் பார்க்கும் ஆர்வத்தை அதிகரிக்கும். அந்த அளவு சிறப்பாக அமைந்திருக்கிறது.

 

முதல் காட்சியில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு பெண் தன்னைத் துன்புறுத்தும் ஆண்களை வெட்டி வீழ்த்தும் காட்சியிலேயே இது வழக்கமான இணைய தொடரல்ல என்று புரிந்து விடுகிறது. எட்டு எபிசோடுகளைக்கொண்ட இந்தத் தொடர் முதல் எபிசோடைப் பார்க்க ஆரம்பித்தால் மற்ற எபிசோடையும் பார்க்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் இதுபோன்ற அரசியல் திரில்லர் புதிய அனுபவமாக இருப்பதை மறுக்க முடியாது. அந்த அளவு சிறப்பாக அமைந்திருக்கிறது இந்த தலைமைச் செயலகம்.

 

"தலைமைச் செயலகம்" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : சிறப்பான

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA