சற்று முன்

சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ‘EXAM’ வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா   |    சிவப்பு உடையில் அதிரடி லுக்… கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்!   |    இயக்குநரிலிருந்து ஹீரோவாக மாறும் பிரசாந்த் பாண்டியராஜ் – ZEE5-ல் மே 22 முதல் ‘வாரண்ட்’!   |    பாண்டிராஜின் புதிய திரில்லர் காமெடி “பரிமளா & கோ” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!   |    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!   |    தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |   

croppedImg_1036206072.jpeg

'புஜ்ஜி அட் அனுப்பட்டி' விமர்சனம்

Directed by : Ram Kandasamy

Casting : Kamalkumar, Vaitheeshwari, Karthik Vijay, Baby Pranithi Sivashankaran, Lawanya Kanmani, Ramkumar, Meena, Varadharajan

Music :Karthik Raja

Produced by : Kavilayaa Creations

PRO : Sakthi Saravanan

Review :

 

 

"புஜ்ஜி அட் அனுப்பட்டி" ராம் கந்தசாமி இயக்கத்தில் கவிலையா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை கார்த்திக் ராஜா. இந்த படத்தில் பிரணிதி சிவ சங்கரன், கார்த்திக் விஜய், கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

ஒரு கிராமத்தில் துர்கா என்ற இளம் பெண் கைவிடப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டியுடன் அழகான பிணைப்பை உருவாக்குகிறாள். அதற்கு புஜ்ஜி என்று பெயரிடுகிறாள். புஜ்ஜியை அவளது குடிகாரத் தந்தை விற்கும்போது அதை மீட்கும் பணியில் அவளும், அவளுடைய சகோதரரும், அவர்களது தோழியாக வரும் தர்ஷனியும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள். 

 

வழிநெடுக பல்வேறுபட்ட மாந்தர்களை சந்திக்கிறார்கள்.  அவர்களின் எதார்த்தங்களையும் புரிந்து கொள்கிறார்கள். இறுதியில் அந்த புஜ்ஜி என்ற ஆட்டுக்குட்டியை மீட்டார்களா..? இல்லையா..? என்பதை படத்தின் கதை கரு.

 

இது முழுக்க முழுக்க குழந்தைகள் உலகம் சார்ந்து எடுக்கப்பட்ட படம். குழந்தைகளின் தேடல், அவர்கள் ஒரு பொருளின் மீது அன்பு வைப்பதால் ஏற்படும் உணர்ச்சிகள், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காத பாசம் என்று படம் முழுக்க உணர்ச்சிகளை கொட்டி தெளித்து இருக்கிறார்கள். படம் முழுதும் மனிதம் பற்றி பேசி இருக்கிறார்கள். 

 

ஒரு மிகக் குறைந்த பட்ஜெட்டில்  சின்ன நேர்த்தியான கதையை சொல்ல முயற்சி இருக்கிறார்கள். படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். 

 

படத்தில் வரும் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் வட்டார வழக்கில் பின்னி எடுத்திருக்கிறார்கள். 

 

கதைக்காக இவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தும் இந்த படம் ஜொலிக்காமல் போவதற்கு மிக முக்கியமான காரணம், படத்தின் மேஜிக்கை மட்டுமே நம்பி லாஜிக்கை கோட்டை விட்டது மட்டும்தான். 

 

எதார்த்தம் என்ற பெயரில் அபத்தமான சில காட்சிகளை வைத்திருக்கிறார்கள். பெட்ரோல் பங்கில் நோட்டீஸ் கொடுப்பது, பக்கத்து கிராமத்தில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை தேடி கண்டுபிடிக்காமல் அப்படியே இருப்பது, குடிகார அப்பா சதா குடி போதையிலேயே இருப்பது மாதிரி காட்டிக் கொள்வது, இடைச்செருகளாக வந்த சரண்யா என்ற பின் அவளைப் பற்றிய பெரிய புரிதல் எதுவும் இல்லாமல் இருப்பது என்று படம் முழுக்க ஆங்காங்கே மிகப்பெரிய லாஜிக் ஓட்டைகள் உள்ளன. 

 

இதை சரி செய்து இருந்தால் இந்த படம் வெற்றி வெற்றி பெறாவிட்டாலும், நல்ல படம் என்ற பெயர் எடுத்திருக்கும். 

 

"புஜ்ஜி அட் அனுப்பட்டி" படத்திற்கு மதிப்பீடு 2.5/5

 

Verdict : இன்னும் கொஞ்சம் தேறியிருக்கலாம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA