சற்று முன்

'ஹிட் லிஸ்ட்' விமர்சனம்
Directed by : Suryakathir Kakkallar - K.Karthikeyan
Casting : Sarathkumar, Vijay Kanishka, Samuthirakani, Goutham Vasudev Menon, Shmiruthi Venkat, Aishwarya Dutta, Sidhara, Abi Nakshathra, Anupama Kumar, Ramachandra Raju, Munishkanth, Balasaravanan, Reding Kingsly
Music :C.Sathya
Produced by : RK Celluloids - KS Ravikumar
PRO : Riaz K Ahamed
Review :
"ஹிட் லிஸ்ட்" சூரியக்கதிர் மற்றும் கார்த்திக் இயக்கத்தில் RK செல்லுலாய்ட்ஸ் - KS ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சி.சத்யா. இந்த படத்தில் விஜய் கனிஷ்கா, அம்மா சித்தாரா, சரத்குமார், ஸ்மிருதி வெங்கட், கெளதம் வாசுதேவ் மேனன், அபி நக்ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, அனுபமா குமார், ராமச்சந்திரன், பாலசரவணன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வள்ளலாரின் கொள்கையின் படி எந்த ஒரு உயிருக்கும் தீங்கிழைக்க கூடாது நேர்மையாக வாழ வேண்டும் என்ற கோட்பாடுடன் இருக்கும் மின் பொறியாளர்தான் விஜய் கனிஷ்கா. அம்மா தங்கச்சி என்று அழகான குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இன்னொரு பக்கம் அசிஸ்டன்ட் கமிஷனர் ஆக வரும் சரத்குமார் வட சென்னையில் உள்ள ஒரு முக்கியமான ரவுடியை பிடிக்கத் தயாராகிறார்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியின் போது விஜய் கனிஷ்காவும் சரத்குமாரும் சந்திக்க நேரிடுகிறது. அந்த நேரத்தில் விஜய் கனிஷ்காவிற்கு ஒரு வெளிநாட்டு நம்பரில் இருந்து தொடர்ந்து அழைப்பு வருகிறது. அந்த அழைப்பில் அவருடைய அம்மா மற்றும் தங்கச்சியை கடத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதை உடனே சரத்குமாரிடம் விஜய் கனிஷ்கா சொல்கிறார், சரத்குமாரும் உடனடியாக ஆக்ஷனில் இறங்குகிறார். இருவரும் கடைசியில் விஜய் கனிஷ்காவின் அம்மா மற்றும் தங்கையை மீட்டார்களா..? இல்லையா..? என்பதை படத்தின் கதை.
இயக்குனர் விக்ரமனின் பையன் தான் நடிகர் விஜய் கனிஷ்கா. குருவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கே எஸ் ரவிக்குமார் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.
விஜய் கனிஷ்கா சண்டை காட்சிகளில் தூள் கிளப்பினாலும் நடிப்பில் கொஞ்சம் சறுக்குகிறார். இனிவரும் காலங்களில் கவனம் தேவை.
சரத்குமாருக்கு வயதாகிவிட்டது என்று யாராலும் நம்ப முடியாது ஏனென்றால் இந்த படத்தில் வரும் ஒரு முக்கியமான சண்டைக்காட்சியில் அனைவரையும் மிரள வைக்கிறார்.
ஒரு வெங்காயத்தை உரிக்கும் போது உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாதது போல, ஹிட் லிஸ்ட் படத்தில் விறுவிறுப்பான காட்சிகள் அடுத்தடுத்து வந்தாலும் படத்தில் ஒன்றுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு காட்சியிலும் விறுவிறுப்பை கூட்ட வேண்டும் என்று இயக்குனர்கள் என நினைத்தார்கள் சரி, அதற்குப் பின்னால் இருக்கும் லாஜிக் ஓட்டைகளில் கவனம் செலுத்த வேண்டாமா..?
படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் வரும் ஸ்மிருதி வெங்கட் சமுத்திரக்கனி அழ வைத்திருக்கிறார்கள். கௌதம் மேனன் ஸ்டைலிஷ் ஆன எதிர்மறை கதாபாத்திரத்தை நுட்பமாக கையாண்டிருக்கிறார். இதை அடி நாதமாக வைத்து கதையின் லாஜிக் ஓட்டைகளில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
படத்தின் இயக்குனர்கள் கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களான சூரியக்கதிர் மற்றும் கார்த்திக். ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கே எஸ் ரவிக்குமார் இந்த படத்தின் ஒரு காட்சியில் கூட தலையிடவில்லை என்று கூறியிருந்தார். நியாயமாக பார்த்தால் அவர் தலையிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
படத்தின் லாஜிக் ஓட்டையில் மிகப்பெரிய ஓட்டையாக கருதப்படுவது, ஒரு சிறு உயிருக்கு கூட திங்கிழைக்க கூடாது என்ற எண்ணம் கொண்டவனால், எப்படி உயிரை கொல்ல வேண்டும் என்ற அளவுக்கு எண்ணம் வரும்.
"ஹிட் லிஸ்ட்" படத்திற்கு மதிப்பீடு 3/5
Verdict : Hit லிஸ்ட் ஒரு waiting லிஸ்ட்.
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA