சற்று முன்

சைஜு ஸ்ரீதரனின் 'ஃபுட்டேஜ்' டிரெய்லர் வெளியாகியுள்ளது !   |    'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் தயாராகிறது   |    கதாநாயகன் தமன் மீது எனக்குப் பொறாமையாக இருக்கிறது! - இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது தான் 'வல்லவன் வகுத்ததடா' - இயக்குநர் விநாயக் துரை   |    மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ படக்குழுவினர்!   |    இயற்கையின் ஆசியில் திகட்டாத காதல் காவியமாக உருவாகும் 'ஆலன்'   |    ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இல் இடம்பெற்ற முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் இசை தொகுப்பு வெளியானது   |    ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்!   |    யுடியுபரக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்ட ‘96’ பட இயக்குநர் பிரேம் குமார்   |    'எனக்கொரு wife வேணுமடா' குறும்படத்தை பார்த்து பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்   |    மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் கூட்டணியில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்   |   

croppedImg_1567962043.jpeg

'தி அக்காலி' விமர்சனம்

Directed by : Mohammed Asif Hameed

Casting : Nasser, Jai kumar, Thalaivasal Vijay, Swayam sidha, Vinoth Kishan, Vinodhini, Arjai, Sekar, Yamini, Dharani, Bharath

Music :Mohammed Asif Hameed

Produced by : P Ukeshwaran

PRO : Nikil murukan

Review :

"தி அக்காலி" முகமத் ஆசிப் ஹமீது இயக்கத்தில்  P யூகேஸ்வரன்  தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை முகமத் ஆசிப் ஹமீது. இந்த படத்தில் ஜெய்குமார், நாசர், விஜய், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

பிளாக் மேஜிக் என்று சொல்லக்கூடிய மாந்திரீக உலகங்களில் நடக்கக்கூடிய கிரைம்களை பற்றி பேசும் படம். 

 

internel affairs போலீசாக வரும் ஸ்வயம் சித்தா, ஒன்பது வருடத்திற்கு முன்  போலீஸ் இன்ஸ்பெக்டரான ஜெயக்குமார் எடுத்த அமானுஷ கேஸை பற்றி விசாரிக்கிறார். 

 

அதன் வழியாக அந்த கதை விரிவடைகிறது. 

 

இந்த உலகில் தன்னம்பிக்கையின்மை, தோல்வி, மனவேதனை,  இயலாமை ஆகிய பல காரணங்களால் சாவின் விளிம்பிற்கு சென்று உயிர் நீக்க முற்படுபவனை கடவுளின் எதிரியான சாத்தான் அரவணைத்துக் கொள்கிறார் என்றும், அதன் மூலமாக நிறைய நரபலிகள் நடைபெறுகின்றன என்றும் கூறி, இந்த கதை பல அமானுஷ்ய விஷயங்களில் செல்கிறது. 

 

படத்தின் பட்ஜெட் மிகவும் சிறியது என்றாலும், கை தேர்ந்த ஒளிப்பதிவால் படத்தை ஆங்கில படத்திற்கு இணையாக காட்டியிருக்கிறார்கள் அற்புதம். 

 

படத்தை விறுவிறுப்பாக காட்ட வேண்டும் என்ற பெயரில், எடிட்டர் காட்சிகளை மாறி மாறி கத்தரித்து இருக்கிறார்.

 

ஆனாலும் படம் மனதில் ஒட்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம் ஒரு படம் யாருக்காக எதற்காக எடுக்கிறோம் என்ற ஒரு கேள்வியை முன் வைக்கும்? இந்தப் படம் அந்த கேள்விக்கு பதில் சொல்ல தவறி இருக்கிறது.

 

மேலும் ஒரு திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்ட வேண்டும் என்பதற்காக, தேவையில்லாத சடங்குகளையும், சம்பிரதாயங்களும் தேவையில்லாத போதை கலாச்சாரங்களையும் புகுத்தி திணித்து இருக்கிறார்கள். இவை அனைத்தும் வேண்டுமென்றே செய்த அபத்தத்தின் உச்சமாகவே பார்க்கப்படுகிறது. 

 

நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பதில் நாசர் கைதேர்ந்தவர், எப்படி இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்தார் என்று தான் தெரியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு தலைவாசல் விஜய் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பை கொடுத்தாலும், அவருடைய பங்கு பெரிதாக இல்லை. 

 

இந்த படத்தின் இயக்குனர்  பிளாக் மேஜிக் அப்படிங்கற ஒரு விஷயத்தை ரொம்ப நம்பி இருக்கிறார், அதற்கான கதைகளுக்காக நிறைய மெனக்கெட்டு இருக்கிறார். ஆனால் அவை அனைத்தையும் பாமர மக்களுக்கு எளிதாக புரியும்படி படம் பிடித்து காட்ட வில்லை. இதுவே இப்படத்தின் தோழ்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. 

 

"தி அக்காலி" படத்திற்கு மதிப்பீடு 2.5/5

 

Verdict : அக்காலி துர்நாற்றம் அடிக்காத தக்காளி

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA