சற்று முன்

‘ஹாட்ஸ்பாட் 2’ வெற்றி கொண்டாட்டம், இயக்குநருக்கு சொகுசு கார்!   |    “நேர்மையான செய்திகளில்தான் நம்பிக்கை” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு   |    ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு துவக்கம், சிவராத்திரி நாளில் பிரம்மாண்ட பூஜை!   |    ‘ஜாக்கி’ நான்கு வார வெற்றி!, மதுரையின் மண் மணத்தை கொண்டாடும் டாக்டர் பிரகபல் படைப்பு   |    ‘வித் லவ்’ வெற்றி கொண்டாட்டம், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற படக்குழு!   |    விஜய் சேதுபதியுடன் தியாகராஜன் குமாரராஜா மீண்டும் இணைவு! ‘பாக்கெட் நாவல்’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்   |    சென்னை கிளாம்பாக்கத்தில் ‘கலர் பென்சில்’ அனுபவ கல்வி மையம் தொடக்கம்   |    'அரிசி என்பது உணவு மட்டுமல்ல, உரிமையும் கூட' – உதயநிதி ஸ்டாலின் உணர்வுபூர்வப் பேச்சு   |    டீசர் வெளியீட்டில் கவனம் ஈர்த்த ‘காதல் ரீசெட் ரிபீட்’ – மார்ச் 6 உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    ‘நாக பந்தம்’ டீசர் வெளியீடு: மகா சிவராத்திரியில் தொடங்கிய காவியப் பயணம்   |    இன்றைய தலைமுறைக்கான பாடல் எழுதுவது எனக்கு பெருமை - இயக்குநர் சரண்   |    10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |   

croppedImg_1177451919.jpeg

'கருடன்' விமர்சனம்

Directed by : RS Durai Senthilkumar

Casting : Soori, Sasikumar, Unni Mukundan, Samuthirakani, Revathi Sharma, SShivada, Brigida Saga, Mime Gopi, RV Udhayakumar, Vadivukarasi, Dushyanth Jayaprakash

Music :Yuvan Shankar Raja

Produced by : Grassroot Films, Lark Studios - K.Kumar

PRO : Yuvaraj

Review :

"கருடன்" ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் க்ராஸ்ரூட் பிலிம்ஸ், லார்க் ஸ்டுடியோஸ் - K.குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தில் சசிகுமார், சூரி, ரேவதி சர்மா, ஷிவதா, பிரிகிடா சகா, ரோஷினி ஹரிபிரியன், மைம் கோபி, வடிவுக்கரசி, துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், உன்னி முகுந்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

அமைச்சரான ஆர் வி உதயகுமார், தேனி மாவட்டம் கோம்பை பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சொந்தமான, சென்னையில் உள்ள  சுமார் 300 கோடிக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார். அதற்கு அவருக்கு அந்தக் கோவிலின் பட்டைய பத்திரம் தேவைப்படுகிறது. இதற்காக தியேட்டர்காரனாக வரும் லோக்கலில் உள்ள Mime கோபியை அணுகுகிறார். ஆனால் வாழையடி வாழையாக, அந்தக் கோவில் பட்டயம் நகைகள் எல்லாத்தையும், அப்பத்தாவாக வரும் வடிவுக்கரசி அம்மா தான் பாதுகாத்து வருகிறார். அவருடைய பேரன் உன்னி முகுந்தன், மற்றும் சசிகுமார் பாலிய காலத்து நண்பர்கள். கோவில் திருவிழா மற்றும் பராமரிப்பு பணிகளை இருவருமே பார்த்து வருகின்றனர். அனாதையாக இருக்கும் சூரியை, சின்ன வயதில் இருந்து உன்னி முகுந்தன் தன் வீட்டில் வைத்து அரவணைத்து வருவதால், சூரி உன்னி முகுந்தனுக்கு உண்மையான விசுவாசியாக இருக்கிறார். 

 

இப்பொழுது மைம்கோபி, எப்படி சதியாட்டம் ஆடி அந்தக் கோவில் பட்டயத்தை இவர்கள் மூவரிடம் இருந்து பெறுகிறார்..? அல்லது பெற முடியாமல் தவிக்கிறார்..? இதன் பின்னணி என்ன என்பதுதான் படத்தின் கதை. 

 

நடிப்பில் சூரி மிரள வைக்கிறார். காமெடி நாயகனாக, குணச்சித்திர கதாபாத்திரமாக பார்த்த சூரி, இதில் கதையின் நாயகனாக வந்து  ஜொலிக்கிறார். குறிப்பாக இடைவெளிக்கு முன் வரும் காட்சி, அனைவரையும் எழுந்து நின்று கைதட்ட வைக்கும். 

 

சசிகுமார் வழக்கமான நடிப்பில் இருந்து மாறுபட்டு இருக்கிறார். மலையாள நடிகர் உன்னி முகுந்தன், தன்னுடைய எதார்த்த நடிப்பில் இருந்து ஒரு படி மேலே சென்று நடித்திருக்கிறார். அப்பத்தாவாக வரும் வடிவுக்கரசி, அவர் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.

 

சூரியின் காதலியும் சரி,சசிகுமாரின் மனைவியும் சரி, உன்னி முகுந்தனின் மனைவியும் சரி  அவர்களின் பங்கை செவ்வனே செய்து இருக்கிறார்கள். 

 

ஒரு சின்ன கதை கரு, அதில் உள்ள நேர்த்தியான திரைக்கதை, கனகச்சிதமான ஒளிப்பதிவு, அற்புதமான பின்னணி இசை என அனைத்து துறைகளிலும் தன்னுடைய ஆளுமையை காட்டியிருக்கிறார் இயக்குனர் துரை செந்தில்குமார். 

 

வெற்றிமாறனின் நண்பரும், பாலு மகேந்திராவின் சிஷ்யனுமான  துரை செந்தில்குமார் இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய முத்திரையை பதிக்க போகிறார் என்பது உறுதி. 

 

யுவன் சங்கர் ராஜா பாடல்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். 

 

இந்தக் கதையில் வரும் சமுத்திரக்கனி, மலையாள நடிகர்களை போன்று மிக மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார். இது மிகவும் ஆச்சரியம். 

 

ஒளிப்பதிவாளர் இந்த படத்திற்கு அப்புறம் மிகப்பெரிய படங்களை எடுப்பார் என்பது உறுதி. 

 

சூரி, நடிப்பின் அரக்கர்கள் என்று சொல்லக்கூடிய தனுஷ் எஸ் ஜே சூர்யாவை தாண்டிவிட்டார் என்றே சொல்லலாம். இதற்கு மேல் அவருக்கு வரும் பட வாய்ப்புகள் அனைத்தும் கதாபாத்திரம் கொண்டவை என்பதும் உறுதி. 

 

இந்தப் படம் A B கால் என்று அனைத்து சென்டர்களிலும் நன்றாக ஓடும். குறிப்பாக கால் சென்டரில், அதிலும் தென் மாவட்டங்களில் இந்த படம்  மிகப்பெரிய வெற்றி பெறும் என்பது  நிச்சயம்.

 

இறுதியில் இயக்குனர் வெற்றிமாறனின் வாய்ஸ் ஓவரில், " அதிகமாக ஆசைப்படும் ஒருவன் தவறான வழியில் செல்லும்போது இயற்கையும் கடவுளும் அவர்களை திருத்தம் முற்ப்படும் " என்று கூறும் வசனம் அற்புதம். 

 

"கருடன்" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : கருடன் திரையரங்குகளில் அண்ணாந்து பறப்பான்.

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA