சற்று முன்

'அஞ்சாமை' விமர்சனம்
Directed by : SP Subburaman
Casting : Vidaarth, Vani Bhojan, Rahman, Krithik Mohan, Vijay Tv Ramar, Dhanya
Music :Raghav Prasad
Produced by : Thiruchithram - Dr. M. Thirunavukarasu MD
PRO : Johnson
Review :
"அஞ்சாமை" எஸ்.பி.சுப்புராமன் இயக்கத்தில் திருசித்ரம் – டாக்டர்.எம்.திருநாவுக்கரசு MD தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ராகவ் பிரசாத். இந்த படத்தில் விதார்த், வாணி போஜன், ரஹ்மான், கிருத்திக் மோகன், விஜய் டிவி ராமர், தன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கூத்துக் கலைஞரான நடிகர் விதார்த் தன் மகனை டாக்டர் ஆக்கி பார்க்க வேண்டும் என்று தனது நடிப்புத் தொழிலையே விட்டு கடினமாக உழைக்கிறார். அப்பொழுதுதான் நீட் தேர்வு என்று புதுமுறை வருகிறது. அதற்கு அவருடைய பையனுக்கு சென்டராக ராஜஸ்தானில் போடப்படுகிறது. ஊர் பெயர் தெரியாத இடத்தில் அவர் பையனும் கூட வந்த சில நபர்களும் சோதனை என்ற பெயரில் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள். இறுதியில் விதார்த் மன உளைச்சலால், heart attack வந்து இறந்து விடுகிறார். இதையெல்லாம் அவருடைய பையன், காவல் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் ஆன ரகுமானிடம் கூறி நீதி கேட்கிறார். இதற்கு இன்ஸ்பெக்டர் ரகுமான் எடுக்கும் முடிவுகளே அஞ்சாமை படத்தின் கரு.
விதார்த்தும் சரி.. ரஹ்மானும் சரி.. நடிப்பில் தன்னுடைய முத்திரையை பதித்து இருக்கிறார்கள். இவர்கள் தவிர இந்தப் படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் நன்றாகவே தங்களுடைய நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
கதை என்ன சொல்ல வந்ததோ அதை நேர்த்தியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
நீட் தேர்வால் மாணவர்கள் படும் அவதிகளை புட்டு புட்டு வைத்திருக்கிறார். எவ்வளவு சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். குறிப்பாக கோர்ட் ட்ராமா காட்சிகளில் அரங்கம் அதிர்கிறது.
முதல் பாதி விதாரத்துக்கான படம் என்றால், இரண்டாம் பாதி ரகுமானுக்கான படம்.
படத்தின் காட்சிகள் மிக அருமை. படத்தின் திரைக்கதையும் மிக மிக அருமை. ஒளிப்பதிவு பாடல்கள் என முக்கியமான கருத்துக்கு தேவையான காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.
படத்தின் மிகப்பெரிய குறையாக பார்க்கப்படுவது லாஜிக் தான். இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று கேட்கும் அளவிற்கு லாஜிக் ஓட்டைகள் நிறைய உள்ளன. ஆனால் அதையெல்லாம் படத்தின் இறுதிக் காட்சி நிவர்த்தி செய்து விடுகிறது.
படத்தின் இயக்குனர் எஸ்பி சுப்புராமன் நல்ல கலை கருவை எடுத்ததற்கு பாராட்டலாம். ஆனால் இது கற்பனையான திரைக்கதை என்பதால், மாணவர்களின் மனநிலை ஓட்டத்தை அறிந்து இதை எடுத்ததினால் இந்த கற்பனை கதை ஜெயிக்கும் கதையாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
'அஞ்சாமை" படத்திற்கு மதிப்பீடு 3.5/5
Verdict : அஞ்சாமை ஒரு அடங்காமை
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA