சற்று முன்

'ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்' த்ரில்லர் தொடரின் இளம் நடிகர்களை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!   |    #BB4 படத்திற்கு 'அகண்டா - 2 தாண்டவம்' என பெயரிடப்பட்டது   |    ‘சித்தார்த் 40’ திரைப்படத்தில் சென்சேஷனல் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இணைந்துள்ளார்!   |    ஹனி பன்னி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு!   |    ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்த 'மொய் விருந்து'   |    'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் '#நானிஓடேலா 2 ' படத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது!   |    பிரம்மாண்டமான பட்ஜெட்டில் சர்வதேச தொழில்நுட்ப தரத்துடன் உருவாக உள்ள #BB4 திரைப்படம்!   |    தசரா பண்டிகை முன்னிட்டு, மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 'விஸ்வம்பரா' பட டீசர் வெளியானது!   |    BTG Universal, ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படங்கள்!   |    அதிரடியில் அசத்தும் விஜய் சேதுபதி, கதிகலங்கிய போட்டியாளர்கள்; பிக்பாஸ் சீசன் 8!   |    சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியாகிறது குளோபல் ஸ்டார் ராம் சரணின் 'கேம் சேஞ்சர்'   |    'கருப்பு பெட்டி' தலைப்பை வைக்க இதுதான் காரணம்! - இயக்குனர் எஸ்.தாஸ்   |    பிரைம் வீடியோ வெளியிட்ட ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் திரில்லர் தொடரின் டிரெய்லர்   |    வெற்றிமாறனின் தலைசிறந்த இயக்கம் 'விடுதலை பார்ட்2' பட டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளனர்!   |    PVCU3 இன் முதல் பெண் இந்திய சூப்பர் ஹீரோ 'மஹாகாளி'   |    தெருக்கூத்துக்கலையை மையப்படுத்தி ஒரு அழகான காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஆர்யமாலா’   |    பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    பிக் பாஸ் புகழ் தர்ஷன்-மாளவிகா நடிக்கும் ‘யாத்ரீகன்’   |    அக்டோபர் 11 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இயக்குநர் மாரி செல்வராஜின் சூப்பர்ஹிட் படம் 'வாழை'!   |    நடிகர் K C பிரபாத் அவர்களுக்கு படப்பிடிப்பின் போது மாரடைப்பு!   |   

croppedImg_370418639.jpeg

'வெப்பன்' விமர்சனம்

Directed by : Guhan Senniappan

Casting : Sathyaraj, Vasanth Ravi, Rajeev Menon, Tanya Hope, Rajeev Pillai, Yashika Aannand, Mime Gopi, Kaniha, Gajaraj, Syed Subhan, Baradwaj Rangan, Veluprabhakaran, Maya Krishnan, Shiyas Kareem, Benito ranklin, Raghu esakki, Vinothini Vaidyanathan, Meghna Su

Music :Ghibran

Produced by : Million Studio

PRO : DOne

Review :

"வெப்பன்" குகன் சென்னியப்பன் இயக்கத்தில் மில்லியன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஜிப்ரான். இந்த படத்தில் சத்யராஜ், வசந்த் ரவி, தன்யா ஹோப், ராஜீவ் மேனன், மைம் கோபி, யாஷிகா ஆனந்த், வேலு பிரபாகரன், கஜராஜ், கன்னிகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

ஒரு சாதாரண youtube நடத்தும் வசந்த் ரவி மற்றும் அவரது நண்பர்கள், அபார சக்திகள் கொண்ட  சூப்பர் ஹியூமன் இருக்கிறார், அவரைச் சந்தித்து விட வேண்டும்  என்று தேடிச் செல்கிறார்கள். அப்படி ஒரு மனிதன் இருக்கிறானா இல்லையா  என்று ஒரு பக்கம் கதை போக, இன்னொரு பக்கம் ராஜீவ் மேனன் தலைமையில்  சீக்ரெட் சொசைட்டி என்ற பெயரில்  ஒரு பெரிய குழு இயற்கை வளங்கள் எல்லாம் சுரண்டுகிறது. அந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவரையும் ஒருவன் கொலை செய்கிறான்  அவன் ஒரு சூப்பர் ஹியூமன் என்று நம்பி இந்தக் குழுவும் சூப்பர் ஹியூமன் இருக்கிறானா என்று தேடிச் செல்கிறது.  யார் அந்த சூப்பர் ஹியூமன்... கண்டுபிடித்தார்களா இல்லையா.. என்பதுதான் "வெப்பன்" படத்தின் கதை. 

 

தமிழ் சினிமாவில் புதிதாக முயற்சி செய்து இருக்கிறார்கள். பாராட்டுக்கள். 

 

ஆனால் படத்தின் திரைக்கதையை கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை. நம்பும்படியாகவும் இல்லை. ஏகப்பட்ட நட்சத்திரக் கூட்டங்கள். ஆனால் வசந்த் ரவி மட்டுமே படம் முழுதும் தெரிகிறார். இவ்வளவு கதாபாத்திரங்களை தவிர்த்து இருக்கலாம். 

 

ஆங்கில பட பாணியில் எடுக்கிறேன் என்ற பெயரில், பல ஆங்கில படங்களின் கதைகளையே திணித்து எடுத்திருக்கிறார்கள். 

 

படத்தின் ஒளிப்பதிவு  மிக அருமை. ஆனால் படம் முழுதும் கருப்பு கலரையே காட்டி இருப்பது என்ன கொடுமை. 

 

ஒரு படத்தின் அடிநாதம் மக்களுக்கு கனெக்ட் ஆகும் வழியில் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அந்தப் படம், எவ்வளவு பெரிய நல்ல படமாக இருந்தாலும்  மக்களிடம் சென்று சேராது. 

 

"வெப்பன்" படத்திற்கு மதிப்பீடு 2.5/5

 

 

Verdict : மக்களிடம் சென்று சேருவது கடினம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA