சற்று முன்

கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |    32வது படத்தின் மூலம் மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டருக்கு தயாராகும் நேச்சுரல் ஸ்டார் நானி!   |    'சுப்ரமண்யா', படத்தின் அசத்தலான ப்ரீ-லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!   |    வெளிநாடுகளில் வெளியீட்டிற்கு முன்பே சாதனைகள் படைக்கும் தளபதி விஜய்யின் 'கோட்' திரைப்படம்   |    ஆண்ட்ரியாவின் இந்த பதிலால் ஏமாற்றம் அடைந்த நிருபர்கள்!   |    ‘பில்லா ரங்கா பாட்ஷா’ படத்தின் அற்புதமான கான்செப்ட் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது   |    பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ள துருவா சர்ஜாவின் 'மார்டின்'   |    உலகமெங்கும் திரை ரசிகர்களிடையே பெரும் அலையைக் கிளப்பியுள்ள 'மனோரதங்கள்'   |    GEMBRIO PICTURES நிறுவனத்தின் முதல் தயாரிப்பு 'பாம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    'கூலி' படத்திற்காக தற்காப்பு கலைக்கான பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஸ்ருதிஹாசன்!   |    100 கோடி ரூபாய் வசூலை கடந்த 'தங்கலான்'   |    டொவினோ தாமஸ் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில்  தோன்றும் 'ஏஆர்எம்' பட டிரெய்லர்   |    ‘மைனா’ புகழ் சேது நடித்திருக்கும் ‘மையல்’   |    பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வித்தியாசமான த்ரில்லர் கதை 'பிளாக்'   |    'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' ஹைப்பர் லிங்க், நான்லீனியர் படம்   |    கடுமையாக உழைத்த தங்கலான்' பட குழுவினருக்கு விருந்து கொடுத்து நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்   |    திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடிய 'போகுமிடம் வெகு தூரமில்லை' படக்குழுவினர்!   |   

croppedImg_1075985486.jpeg

'மகாராஜா' விமர்சனம்

Directed by : Nithilan Swaminathan

Casting : Vijay Sethupathi, Anurag Kashyap, Natraj, Abirami, Mamta Mohandas, Saingam Puli, Arul Das, Munishkanth, Sachana Nemidas, Boys Manikandan, Kalayan, Kalki

Music :B Ajaneesh Loknath

Produced by : Sudhan Sundaram, Jagadish Palanisamy

PRO : DOne

Review :

"மகாராஜா" நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை பி.அஜனீஷ் லோக்நாத். இந்த படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி, அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், வினோத் சாகர், காளையன், பாரதிராஜா, பி.எல்.தேனப்பன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

சலூன் கடையில் வேலை பார்ப்பவராக விஜய் சேதுபதி வருகிறார். ஒரு எதிர்பாராத விபத்தில் தனது மனைவியை இழக்க நேரிடுகிறது, குழந்தையை ஒரு குப்பைத் தொட்டி காப்பாற்றுகிறது. 

 

அதனால் அந்த குப்பைத் தொட்டியை கடவுளாக விஜய் சேதுபதியும் அவரது மகளும் வணங்குகிறார்கள். 

 

இந்நிலையில் அந்த குப்பைத் தொட்டி காணாமல் போகிறது. இதை காவல் நிலையத்தில் விஜய் சேதுபதி கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். இந்த கம்பளைண்ட் எடுத்தார்களா குப்பைத்தொட்டியை கண்டுபிடித்தார்களா  என்பது தான் "மகாராஜா" படத்தின் மீதி கதை..? 

 

விஜய் சேதுபதியே ரெண்டு மூணு இயக்குனர்களிடம் இரண்டு மூன்று படங்கள் வேலை செய்து இருக்கிறார். அப்படி இருக்கையில் ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கி வெற்றிக்கொடுத்த  குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலனுக்கு ஏன் தர வேண்டும்..?

 

அதற்கு மிகப்பெரிய காரணம் இந்த படத்தில் உண்டு.

 

ஏழு வருடம் கழித்து குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் இயக்கிய படம்.  ஒரு குப்பைத் தொட்டிக்காக ஒரு படமா என்று தான் எல்லாரையும் யோசிக்க வைக்கும் முதல் பாதியில், ஆனால் படம் பார்ப்பவர்கள் அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் வகையில் திரைக்கதையை உருவாக்கி இருப்பார் இயக்குனர் நித்திலன்.

 

விஜய் சேதுபதிக்கு ஐம்பதாவது படம்.  ஐம்பதாவது படம் என்பதாலேயே கதையை பார்த்து பார்த்து தேர்வு செய்து இருக்கிறார் விஜய் சேதுபதி. படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு அபாரம்,

 

மம்தா மோகன்தாஸ் வந்து சென்று இருப்பார், அபிராமி நடிப்பும் அபாரம்.  அனுராக் கேசயப்பின் வில்லத்தனம் மிரட்டுகிறது. நட்டி, அருள் தாஸ், முனீஸ்காந்த் ஆகியோரின் நடிப்பு கனக்கச்சிதமாக இருக்கிறது. சிங்கம் புலி நடிப்பு, நடிப்பின் உச்சம். பாய்ஸ் படம் மணிகண்டன்க்கு இந்த படம் ஒரு கம்பேக்காக இருக்கும் என்பது உறுதி. 

 

படத்தின் ஒளிப்பதிவும் சரி, இசையும் சரி ஒரு புதிய தோனியை உருவாக்குகிறது. 

 

படத்தின் சண்டைக் காட்சிகள் நம்மை மிரள வைக்கிறது, அதிலும் பாய்ஸ் படம் மணிகண்டன் சண்டைக்காட்சியோ மிரட்சியின் உச்சம். 

 

ஏழு வருடம் கழித்து ஒரு படம் கொடுத்தாலும் அந்தப் படத்தில் ஒரு ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்திருக்கிறார் நித்திலன்.

 

அப்பா தந்தை சம்பந்தமாக பல படங்கள் வந்தாலும், இந்தப் படம் வேறு மாதிரியான ஒரு உச்சத்தை தொடுகிறது. 

 

படத்தின் திரைக்கதை அமைப்பு சில நேரங்களில் ஒரு குழப்பத்தை உண்டுபண்ணலாம். நன்றாக உற்று கவனிப்பவர்களுக்கு புரியும் இது எந்த மாதிரியான கதை அமைப்பை கொண்டது என்று. 

 

"மகாராஜா" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : "மகாராஜா" தேசிய விருது வாங்குவார்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA