சற்று முன்

சைஜு ஸ்ரீதரனின் 'ஃபுட்டேஜ்' டிரெய்லர் வெளியாகியுள்ளது !   |    'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் தயாராகிறது   |    கதாநாயகன் தமன் மீது எனக்குப் பொறாமையாக இருக்கிறது! - இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது தான் 'வல்லவன் வகுத்ததடா' - இயக்குநர் விநாயக் துரை   |    மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ படக்குழுவினர்!   |    இயற்கையின் ஆசியில் திகட்டாத காதல் காவியமாக உருவாகும் 'ஆலன்'   |    ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இல் இடம்பெற்ற முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் இசை தொகுப்பு வெளியானது   |    ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்!   |    யுடியுபரக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்ட ‘96’ பட இயக்குநர் பிரேம் குமார்   |    'எனக்கொரு wife வேணுமடா' குறும்படத்தை பார்த்து பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்   |    மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் கூட்டணியில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்   |   

croppedImg_2024877318.jpeg

‘ரயில்’ விமர்சனம்

Directed by : Baskar Sakthi

Casting : Kungkumaraj, Vairamala, Parvesh Mehru, Ramesh Vaidya, Senthil Kochadai, Shameera, Bindu, Babu Thanisha, Subash, Thangamani Prabhu, Ramesh Yandhra, Sam Daniel, Rajesh, Ramaiah

Music :SJ Janani

Produced by : Vediyappan

PRO : Nikil murukan

Review :

"ரயில்" பாஸ்கர் சக்தி இயக்கத்தில் வேதியப்பன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை எஸ்.ஜே.ஜனனி. இந்த படத்தில் குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ, ரமேஷ் வைத்யா, செந்தில் கோச்சடை, பிண்ட்டூ மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

தேனி மாவட்டத்தில் ஒரு பஞ்சாலையில் சுனில் என்கிற வட இந்தியன் வேலை பார்க்கிறான். அவன் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு வயதான மூதாட்டியின் வீட்டில் வாடகை எடுத்து தங்கி இருக்கிறான். அந்த வீட்டின் இன்னொரு பகுதியில் செல்லம்மாவும் அவனது கணவரும் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் செல்லம்மாவின் கணவர் பொழுதும் குடித்துக் கொண்டு எந்த வேலைக்கும் செல்லாமல் சுற்றித் திரிகிறார்.  வட மாநிலத்திலிருந்து வந்து நமது பிழைப்பை கெடுத்து விட்டானே என்று சுனில் மீது கோபப்படுகிறார்.  ஆனால் சுனிலும் செல்லமாகவும் ரொம்ப பாசமாக பழகுகிறார்கள். இது ஒரு கட்டத்தில் அவனுக்குள் ஒரு பொறாமையை தருகிறது. இதனால் அவனை கொலை செய்ய முடிவு எடுக்கிறான். அப்பொழுது என்ன ஆனது என்பது தான் "ரயில்" படத்தின் மீதிக்கதை.

 

பிழைப்பு தேடி வந்தவர்களின் வாழ்க்கையை எதார்த்தமாக கூற வேண்டும் என்று முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் பாஸ்கர் சக்தி வாழ்த்துக்கள். 

 

ஆனால் திரைக்கதையை கவனம் செலுத்தி இருக்கலாம் படத்தில் முதல் பாதி மிகவும் ஜவ்வாகவே இழுக்குறது. இரண்டாம் பாதி மட்டுமே கதையில் விறுவிறுப்பை கூட்டுகிறது. 

 

செல்லம்மாவின் கணவராக வருபவர் நடிகர் குரு சோமசுந்தரத்தை போல்  காட்சியளிக்கிறார். இயக்குனர் அவரை தேர்ந்தெடுத்து விட்டு அதுக்கப்புறம் மாற்றி விட்டாரா என்பதுதான் தெரியவில்லை. படத்தில் செல்லம்மாவாக வரும் நடிகை வைரமாலா நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். நிச்சயம் அவர் ஒரு ரவுண்டு வருவார். அது மட்டும் இல்லாமல் படத்தில் காமெடியனாக வருபவர், துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் வரும் டவுசர் பாண்டி போல் இருக்கிறார். நன்றாகவும் காமெடி பண்ணுகிறார். நடிகர்கள் யாரும் புதுமுக நடிகர்கள் என்ற சூடே தெரியாமல் வேலை வாங்கி இருக்கிறார் பாஸ்கர் சக்தி. 

 

தேனி ஈஸ்வரியின் ஒளிப்பதிவு, இயற்கை ஒளியின் மூலம் மிக அழகாக படம் பிடித்திருக்கிறார். 

 

ஆங்காங்கே சில பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், ரயில் படத்தை ஒரு தடவை பார்க்கலாம். ஆனால் இது கமர்சியல் படம் அல்ல.

 

"ரயில்" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : "ரயில்" படத்தை ஒரு தடவை பார்க்கலாம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA