சற்று முன்

கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |    32வது படத்தின் மூலம் மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டருக்கு தயாராகும் நேச்சுரல் ஸ்டார் நானி!   |    'சுப்ரமண்யா', படத்தின் அசத்தலான ப்ரீ-லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!   |    வெளிநாடுகளில் வெளியீட்டிற்கு முன்பே சாதனைகள் படைக்கும் தளபதி விஜய்யின் 'கோட்' திரைப்படம்   |    ஆண்ட்ரியாவின் இந்த பதிலால் ஏமாற்றம் அடைந்த நிருபர்கள்!   |    ‘பில்லா ரங்கா பாட்ஷா’ படத்தின் அற்புதமான கான்செப்ட் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது   |    பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ள துருவா சர்ஜாவின் 'மார்டின்'   |    உலகமெங்கும் திரை ரசிகர்களிடையே பெரும் அலையைக் கிளப்பியுள்ள 'மனோரதங்கள்'   |    GEMBRIO PICTURES நிறுவனத்தின் முதல் தயாரிப்பு 'பாம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    'கூலி' படத்திற்காக தற்காப்பு கலைக்கான பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஸ்ருதிஹாசன்!   |    100 கோடி ரூபாய் வசூலை கடந்த 'தங்கலான்'   |    டொவினோ தாமஸ் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில்  தோன்றும் 'ஏஆர்எம்' பட டிரெய்லர்   |    ‘மைனா’ புகழ் சேது நடித்திருக்கும் ‘மையல்’   |    பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வித்தியாசமான த்ரில்லர் கதை 'பிளாக்'   |    'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' ஹைப்பர் லிங்க், நான்லீனியர் படம்   |    கடுமையாக உழைத்த தங்கலான்' பட குழுவினருக்கு விருந்து கொடுத்து நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்   |    திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடிய 'போகுமிடம் வெகு தூரமில்லை' படக்குழுவினர்!   |   

croppedImg_7184927.jpeg

’இந்தியன் 2’ விமர்சனம்

Directed by : Shankar

Casting : Kamal Haasan, Siddharth, Rakul Preet Singh, S. J. Suryah, Priya Bhavani Shankar, Boby Simha, Samuthirakani, Vivek, Jegen

Music :Anirudh

Produced by : Lyca Productions and Red Giant Movies - Subaskaran Allirajah and Udhayanidhi Stalin

PRO : AIM

Review :

"இந்தியன் 2" ஷங்கர் இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் – சுபாஸ்கரன், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை அனிருத். இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ஜெகன், விவேக், நெடுமுடி வேணு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

சித்தார்த் தனது நண்பர்கள் பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷிகாந்த் ஆகியோருடன் சேர்ந்து நடத்தும் யூடியுப் சேனல் மூலம் ஊழல்வாதிகளின் முகத்திரையை கிழித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சிக்கிறார். அது முடியாமல் போக, இந்தியன் தாத்தாவை திரும்பி அழைத்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். அதற்காக அவர் சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளும் பிரச்சாரம், தைவானில் இருக்கும் இந்தியன் தாத்தா கவனத்திற்கு போகிறது. அவர் மீண்டும் இந்தியா வருகிறார்.

 

முதல் பாகத்தில் தமிழ்நாட்டு ஊழல்வாதிகளுக்கு உயிர் பயத்தை காட்டிய இந்தியன் தாத்தா, இந்த முறை இந்தியா முழுவதும் நடைபெறும் ஊழல்களுக்கு எதிராக தனது போராட்டத்தை தொடங்குகிறார். அதே சமயம், அவர் இந்தியாவுக்கு திரும்ப வர வேண்டும் என்று விரும்பிய சித்தார்த்தே அவரை வெறுக்கிறார். மறுபக்கம் அவரை தேடிக்கொண்டிருக்கும் விசாரணை அதிகாரிகளும் அவரை நெருங்குகிறார்கள். அதிகாரிகளிடம் இருந்து இந்தியன் தாத்தா தப்பித்தாரா?, சித்தார்த் அவரை வெறுப்பது ஏன்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

இந்தியன் முதல் பாகத்தில் இருக்கும் பிரமாண்டம் இதில் அளவுக்கு அதிகமாக இருந்தாலும், பலம் இல்லாத திரைக்கதையும், அதனுடன் ஒட்டி பயணிக்காத பிரமாண்டமும் படத்தின் பலவீனங்களாக இருந்தாலும், கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் சித்தார்த், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி ஆகியோரது கதாபத்திர வடிவமைப்புகள் பலவீனத்தை மறைத்து படத்தை ரசிக்க வைக்கிறது.

 

நாட்டில் நடக்கும் பெரிய பெரிய ஊழல்களுக்கு எல்லாம் சிறிய அளவில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளே மூலக்காரணம் என்பதை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் ஷங்கர், இலவசங்கள் வழங்கும் தமிழக அரசியல் பற்றி மேலோட்டமாக பேசிவிட்டு, குஜராத் தொழிலதிபர்களை பற்றியும், அவர்களின் ஊழல் பின்னணி பற்றியும் விரிவாக பேசியிருப்பதும், அதை  தனிமனித ஊடகமான யூடியுப் உடன் இணைத்து சொல்லியிருப்பது கவனம் ஈர்க்கிறது. 

 

முதுமையான உடல்மொழியை கச்சிதமாக வெளிப்படுத்தி கைதட்டல் பெறும் கமல்ஹாசன், ஊழலுக்கு எதிராக பேசும் வசனங்கள் கைதட்டல் பெறுவதோடு, தனது நடிப்பால் ரசிகர்களை விசிலடிக்க வைக்கிறார். 

 

சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, மறைந்த நெடுமுடி வேணு, விவேக் ஆகியோரது அளவான நடிப்பு திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா குறைவான காட்சிகளில் வந்தாலும், மூன்றாம் பாகத்தில் அவரது வேடம் பெரிய அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்.

 

இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் “தாத்தா வராரே...” பாடல் திரையரங்கையே அதிர வைக்கிறது. மற்ற பாடல்களும் ஓகே ரகம் தான். பின்னணி இசை வேகமான திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருந்தாலும், இந்தியன் முதல் பாகத்தின் பின்னணி இசையே முன்னணி பெறுகின்றன.

 

ரவிவர்மனின் ஒளிப்பதிவு இயக்குநரின் பிரமாண்ட கற்பனைக்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது.  ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு மூன்று மணி நேரம் படத்தை அலுப்பில்லாமல் பார்க்க வைக்கிறது.  கலை இயக்குநர் மற்றும் சண்டைப்பயிற்சியாளர் ஆகியோரது பணியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

முதல் பாகத்தை ஓப்பிட்டு பார்த்தால் இயக்குநர் ஷங்கர் இதில் சற்று தடுமாறியிருப்பது தெரிந்தாலும், படத்தின் சண்டைக்காட்சிகள்,  இந்தியாவின் பெரும் தலைகளை இந்தியன் தாத்தா நெருங்கும் காட்சிகள், காலண்டர் மற்றும் தாத்தா வராரே ஆகிய பாடல்கள் உள்ளிட்டவை மூலம் பிரமாண்டம் என்ற தனது மாயாஜாலம் மூலம் மக்களை முழுமையாக திருப்திப்படுத்தி விடுகிறார். 

 

இறுதிக் காட்சியில் நாடே கொண்டாடிய இந்தியன் தாத்தாவுக்கு எதிர்ப்பு வருகிறது. அது ஏன்? என்ற கேள்விக்கான விடையாக மூன்றாம் பாகத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

 

"இந்தியன் 2" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : இளமையையும், மிரட்டலும் குறையாத இந்தியன் தாத்தா

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA