சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

croppedImg_1618182454.jpeg

'பார்க்’ விமர்சனம்

Directed by : EK Murugan

Casting : Thaman Kumar, Swetha Dorathy, Black Pandi, Rekha Suresh, Ranjana Natchiyar, Yogi Ram, Ranjan Kumar, Jayanthi Mala, Karate Raja, Grane Manohar

Music :Hamara CV

Produced by : Akshaya Movie Makers - Ln E.Nataraj

PRO : Sakthi Saravanan

Review :

"பார்க்" இ.கே.முருகன் இயக்கத்தில் அக்ஷயா மூவி மேக்கர்ஸ் - Ln E.நட்ராஜ்  தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஹமரா சி.வி. இந்த படத்தில் தமன் குமார், ஸ்வேதா டோரத்தி, பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ரேகா சுரேஷ், கராத்தே ராஜா, ஜெயந்தி மாலா, ரஞ்சன் குமார், ரஞ்சனா நாஞ்சியார், யோகி ராம், விஜய் கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

நாயகன் தமன் குமார் மற்றும் நாயகி ஸ்வேதா டோரத்தி இருவரையும்  ரவுடி கூட்டம் துரத்துகிறது. அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக நீண்ட நாட்களாக பூட்டப்பட்டு கிடக்கும் பூங்காவிற்குள் (பார்க்) நுழைகிறார்கள். அங்கு ரவுடிகளை விடவும் பெரிய ஆபத்து அவர்களை ஆட்கொள்கிறது. அதனால் எப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை கலகலப்பாகவும், கதறும்படியும் சொல்வது தான் ‘பார்க்’.

 

’ஒரு நொடி’ என்ற சஸ்பென்ஸ் திரில்லர் படத்தின் மூலம் அழுத்தமான கதாபாத்திரத்தில் அமர்க்களமாக நடித்து பாராட்டு பெற்ற நடிகர் தமன் குமார், இந்த படத்தில் வேறு ஒரு பரிணாமத்தில் பார்வையாளர்களை பயமுறுத்தியிருக்கிறார். நாயகியை கண்டதும் காதல், டூயட், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்து கமர்ஷியல் விசயங்களிலும் பட்டய கிளப்பியிருப்பவர், ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டவும் செய்திருக்கிறார். 

 

நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்திக்கு வழக்கமான கமர்ஷியல் நாயகியின் வேலை என்றாலும், அதை நிறைவாக செய்திருக்கிறார்.

 

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பிளாக் பாண்டி, தனது நடிப்பில் பல நடிகர்களின் பாடி லேங்வேச்களை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது காமெடி காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.

 

கிரேன் மனோகர், ரேகா சுரேஷ், கராத்தே ராஜா, ஜெயந்தி மாலா, ரஞ்சன் குமார், ரஞ்சனா நாஞ்சியார், யோகி ராம், விஜய் கணேஷ் என்று மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதையோட்டத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.

 

ஹமரா.சிவி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம். பாண்டியன் குப்பனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. குருசூர்யாவின் படத்தொகுப்பு காட்சிகளை வேகமாக நகர்த்தி சென்றிருக்கிறது.

 

நகைச்சுவை மற்றும் திகில் இரண்டும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகித்தாலும், இரண்டையும் இரண்டு பகுதிகளாக காட்டி படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் இ.கே.முருகன்.

 

வழக்கமான திகில் கதை தான் என்றாலும், அதற்காக இயக்குநர் பயன்படுத்தியிருக்கும் பூங்கா என்ற களம் புதிதாகவும், அதை காட்சிப்படுத்திய விதம் மிரட்டலாகவும் இருக்கிறது. 

 

குறைகள் சில இருந்தாலும், சிறிய விசயத்தை வைத்துக்கொண்டு காதல், காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட், திகில் என அனைத்து விசயங்களையும் அளவாக கையாண்டிருக்கும் இயக்குநர் இ.கே.முருகன், அனைத்து தரப்பினருக்குமான ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படத்தை கொடுத்ததில் வெற்றி பெற்றிருக்கிறார்.

 

"பார்க்" படத்திற்கு மதிப்பீடு 2.5/5

 

Verdict : பொழுபோக்கான படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA