சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

croppedImg_525707302.jpeg

'அந்தகன்’ விமர்சனம்

Directed by : Thiagarajan

Casting : Prashanth, Simran, Priya Anand, Karthik, Samuthirakani, Urvasi, Yogi Babu, KS Ravikumar, Poovaiyar

Music :Santhosh Narayanan

Produced by : Staar Movies - Shanthi Thiagarajan and Preethi Thiagarajan

PRO : Nikil murukan

Review :

"அந்தகன்" தியாகராஜன் இயக்கத்தில் ஸ்டார் மூவிஸ் – சாந்தி தியாகராஜன் & ப்ரீத்தி தியாகராஜன்  தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். இந்த படத்தில் பிரஷாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, கார்த்திக், வனிதா விஜயகுமார், ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், பூவையார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

சிறு இடைவெளிக்குப் பிறகு பிரஷாந்தை நாயகனாக பார்த்தாலும், அதே இளமையோடும், புத்துணர்ச்சியோடும் திரையில் தோன்றுகிறார். பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்திருப்பவர் சிறு சிறு அசைவுகளை கூட மிக நுணுக்கமாக செய்திருக்கிறார். எதிர்பார்க்காத சம்பவங்கள் தன் கண் முன் நடப்பதை பார்த்து பதற்றமடையும் பிரஷாந்த், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது, தன்னை கொலை செய்ய வருபவரிடம் இருந்து தப்பிப்பது, பார்வையற்ற தன்னை சுற்றி இருக்கும் ஆபத்துகளை நினைத்து பயப்படுவது என அனைத்து இடங்களிலும் பிரஷாந்தின் நடிப்பு கைதட்டல் பெறுகிறது. குறிப்பாக மொத்த திரைக்கதைக்கும் சுவாரஸ்யம் சேர்ப்பதில் பிரஷாந்தின் நடிப்பு முக்கிய பங்கு வகிப்பதோடு, இனி கோலிவுட்டின் டாப் இடத்திற்கு அவர் செல்வதை உறுதி செய்திருக்கிறது.

 

பலமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிம்ரன், கிடைக்கும் இடங்களில் தனது நவசர நடிப்பை வெளிக்காட்ட முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சில இடங்களில் அவரது முகத்தில் வயது முதிர்வு தெரிவது சிமி கதாபாத்திரத்தின் மீதான ஈர்ப்பை குறைத்தாலும், அவரது அதிரடியான நடிப்பு அந்த குறையை மறைத்துவிடுகிறது.

 

தேவதை போல் பிரஷாந்த் வாழ்க்கையில் திடீர் எண்ட்ரி கொடுக்கும் பிரியா ஆனந்த், அழகாக இருக்கிறார். பிரஷாந்துடன் அன்பாக உறவாடுகிறார். தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தவுடன் தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சியில் அழகாக நடித்திருக்கிறார்.

 

போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, சூழலுக்கு ஏற்ப முகத்தை மாற்றி ரியாக்‌ஷன் கொடுக்கும் காட்சிகள் அசத்தல்.  அவரது மனைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார், சில காட்சிகளில் வந்தாலும் தனது வழக்கமான அதிரடி மூலம் திரையில் சரவெடியாக வெடித்திருக்கிறார்.

 

நடிகர் கார்த்திக்காகவே நடித்திருக்கும் நவரச நாயகன் கார்த்திக், பூவையார், ஊர்வசி, யோகி பாபு, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் திரைக்கதையின் திருப்பங்களுக்கு ஏற்ப சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

 

சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஒரு இனிமையான இசை நிகழ்ச்சி அனுபவத்தை கொடுக்கிறது. பின்னணி இசையில் சுழலுக்கு ஏற்ப வித்தியாசத்தை காட்டியிருப்பவர், படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பியானோ உள்ளிட்ட மென்மையான இசைக்கருவிகள் மூலம் பின்னணி இசையை ஒரு கதாபாத்திரமாக பயணிக்க வைத்திருக்கிறார்.

 

ஒளிப்பதிவாளர் ரவி யாதவின் கேமரா காட்சிகள் அனைத்தையும் கலர்புல்லாகவும், பிரமாண்டமாகவும் படமாக்கி கண்கலங்கு விருந்து படைத்திருக்கிறது. கதாபாத்திரங்களை மிக அழகாக காட்டியிருப்பவர், ஒவ்வொரு காட்சியிலும் பயன்படுத்திய வண்ணங்கள் ரசிகர்களை ஈர்க்கிறது.

 

படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா திரைக்கதையில் இடம்பெறும் திருப்பங்களை எந்தவித குழப்பமும் இன்றி ரசிகர்களிடத்தில் கடத்தியிருக்கிறார்.

 

இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அந்தாதுன்’ படத்தின் ரீமேக் என்றாலும், தமிழுக்கு ஏற்றபடி பல மாற்றங்களுடன் இப்படத்தை இயக்கியிருக்கும் தியாகராஜன், படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நம்மை திரைக்குள் இழுத்துவிடுகிறார். பார்வையற்றவராக பிரஷாந்த் தோன்றிய சில நிமிடங்களில் இடம்பெறும் ஒரு திருப்பம், ஏன் இப்படி? என்ற கேள்வியுடன் அவருடன் பயணிக்க வைக்கிறது. அதை தொடர்ந்து கார்த்திக் வீட்டுக்கு பிரஷாந்த் செல்லும் போது நடக்கும் சம்பவம் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது. அதில் இருந்து, என்ன நடக்கும்?, என்ன நடக்கும்? என்று அடுத்தடுத்த காட்சிகள் எதிர்பார்ப்போடு நகர்வதோடு, திரைக்கதையில் வரும் புது புது திருப்பங்கள், திரையில் இருந்து நம் கண்கள் அகலாதபடி பார்த்துக்கொள்கிறது.

 

சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் என்றாலும், மனோபாலா, யோகி பாபு மற்றும் சமுத்திரக்கனி - வனிதா விஜயகுமார் ஆகியோர் மூலம் அவ்வபோது சிரிக்கவும் வைத்திருக்கும் இயக்குநர் தியாகராஜன், சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படம் என்றாலும் அதை பிரமாண்டமான ஒரு படைப்பாகவும், அனைத்து தரப்பினருக்குமான ஒரு படமாகவும் கொடுத்திருக்கிறார்.

 

படத்தில் இடம்பெறும் சிறு சிறு வேடங்களில் கூட முன்னணி நடிகர்கள் நடித்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. சில காட்சிகளில் வந்தாலும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையை வடிவமைத்திருக்கும் இயக்குநர் தியாகராஜன், படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை நம்மை இருக்கையில் கட்டிப்போட்டு விடுகிறார்.

 

‘அந்தாதுன்’ இந்தி படத்தை பார்த்தவர்களுக்கு புதிய அனுபவம் கொடுக்கும் வகையில் சில மாற்றங்களோடு இயக்கியிருக்கும் இயக்குநர் தியாகராஜன், அந்த படத்தை பார்க்காதவர்களுக்கு காட்சிக்கு காட்சி திருப்பங்களை வைத்து மிகப்பெரிய திரில்லர் அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.

 

"அந்தகன்" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : பிரமாண்டமான சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA