சற்று முன்

போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |   

croppedImg_1737441429.jpeg

'டிமான்டி காலனி 2' விமர்சனம்

Directed by : Ajay R Gnanamuthu

Casting : Arulnithi, Priya Bhavanishankar, Antti Jaaskelainen, Dsering Dorjee, Arun Pandian, Muthukumar, Meenakshi Govindarajan, Sarjano Khalid, Archana Ravichandran

Music :Sam CS

Produced by : BTG Universal, Gnanamuthu Pattarai, Whitenights Entertainment - Bobby Balachandran, Vijay subramanian, RC Rajkumar

PRO : AIM

Review :

 

 

"டிமான்டி காலனி 2" அஜய் ஞானமுத்து இயக்கத்தில்  பிடிஜி யுனிவர்சல், ஞானமுத்து பட்டறை, ஒயிட் நயிட் எண்டர்டெயின்மெண்ட் – பாபி பாலச்சந்திரன், விஜய் சுப்பிரமணியன், ஆர்.சி.ராஜ்குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சாம்.சி.எஸ். இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமார், அருண் பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

பிரியா பவானி சங்கரின் காதல் கணவரும், அவரது நண்பர்களும் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். கணவரின் மர்ம மரணத்தை நினைத்து தாங்க முடியாத துயரத்தில் இருக்கும் பிரியா பவானி சங்கர், 6 வருடங்களுக்குப் பிறகு அதற்கான காரணத்தை கண்டுபிடிப்பதற்காக கணவரின் ஆத்மாவிடம் பேச முயற்சிக்கிறார். அப்போது ஆபத்தில் இருக்கும் வேறு ஒரு ஆத்மா அவரிடம் உதவி கேட்கிறது. அதன் மூலம் ‘டிமான்டி காலனி’ முதல் பாகத்தின் கதையோடு தொடர்பு ஏற்படுவதோடு, அதில் இறந்ததாக காட்டப்படும் அருள்நிதியை உயிர் பிழைக்க வைப்பதற்கான ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது. 

 

அதன்படி, அருள்நிதியை உயிர் பிழைக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடும் பிரியா பவானி சங்கர், அவருக்கு சகோதரர் ஒருவர் இருப்பதை (அவரும் அருள்நிதி தான்) தெரிந்துக் கொண்டு அவருடன் இணைந்து முதல் பாகத்தின் நாயகன் அருள்நிதியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை முதல் பாகத்தின் காட்சிகளைப் போல் சொன்னாலும், அதை விட பிரமாண்டமான முறையில் சொல்வது தான் ‘டிமான்டி காலனி 2’.

 

‘டிமான்டி காலனி’ முதல் பாகத்தின் கதையை நாயகன் அருள்நிதி மூலம் நகர்த்திய இயக்குநர் இந்த இரண்டாம் பாகத்தின் கதையை பிரியா பவானி சங்கரை முதன்மைப்படுத்தி நகர்த்தியிருக்கிறார். அவருக்கு துணையாக அருள்நிதி பயணித்திருக்கிறார்.

 

காதல கணவர் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் வெளிக்காட்டுவது, உயிருக்கு போராடும் அருள்நிதியை காப்பாற்ற முயற்சிப்பது, டிமான்டி ஆத்மாக்களின் உலகத்தில் தைரியமாக பயணித்தாலும், பயத்தையும், பதற்றத்தையும் அவ்வபோது முகத்தில் வெளிக்காட்டுவது என்று பிரியா பவானி சங்கர் படம் முழுவதும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

 

கதையில் பிரியா பவானி சங்கருக்கு அதிகமான வாய்ப்பு இருப்பது தெரிந்தும், தைரியமாக நடித்திருக்கும் அருள்நிதியின் தாராள மனதை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். முதல் பாகத்தில் நாயகனாக நடித்த அருள்நிதி இதில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதோடு, ஒரு வேடத்தை வில்லத்தனம் கலந்த கதாபாத்திரமாக கச்சிதமாக கையாண்டிருக்கிறார். மற்றொரு வேடத்திற்கு இந்த பாகத்தில் பெரிய வேலை இல்லை. ( ஒருவேளை அடுத்த பாகத்தில் இருக்கலாம் )

 

அருள்நிதியின் சித்தப்பாவாக படம் முழுவதும் பயணிக்கும் முத்துக்குமாரின் நடிப்பில் குறையில்லை. அருண் பாண்டியனுக்கு பெரிய வேடம் என்றாலும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

 

மீனாட்சி கோவிந்த், அர்ச்சனா ரவிச்சந்திரன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் சிறிய வேடத்தில், நிறைவாக நடித்திருக்கிறார்கள். சீன துறவிகளாக நடித்திருப்பவர்களின் நடிப்பு அளவு.

 

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் -ன் பின்னணி இசை  ஓரளவு தான் கைகொடுத்திருக்கிறது. குறிப்பாக, டிமான்டி வரும் காட்சியும், அவர் கையில் வைத்திருக்கும் கோல் மூலம் எழுப்பப்படும் இடி சத்தமும் இதில் எந்த ஒரு பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தாமல் போனது இசையின் மிகப்பெரிய பலவீனம்.

 

ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு படத்தின் பட்ஜெட் பெரியது என்பதை காட்சிக்கு காட்சி உணர்த்துகிறது. பெரிய சைனீஸ் உணவகம் மற்றும் சிறிய அறையில் நடக்கும் கிளைமாக்ஸ் காட்சிகள் உள்ளிட்டவற்றை மிக நேர்த்தியாக படமாக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

 

முதல் பாகத்தின் கதையோடு, இரண்டாம் பாகத்தின் கதையை இணைத்த விதம், அதை தொடர்ந்து வரும் காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்திய விதம் என்று படத்தொகுப்பாளர் குமரேஸ்.டி திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.

 

திகில் படங்களுக்கு என்று இருக்கும் வழக்கமான பாதையில் பயணிக்காமல் சற்று வித்தியாசமான முயற்சி செய்து தனது முதல் படமான ‘டிமான்டி காலனி’-யில் வெற்றி கண்ட இயக்குநர் அஜய் ஞானமுத்து, இந்த முறையும் அதே வித்தியாசமான முயற்சியை மேற்கொள்வதற்காக சீன துறவிகள், அவர்களின் பூஜை ஆகியவற்றை தேர்ந்தெடுத்திருப்பதோடு, முதல் பாகத்தின் பாணியிலேயே இந்த இரண்டாவது பாகத்தையும் கையாண்டு ரசிகர்களை பயமுறுத்த முயற்சித்திருக்கிறார்.

 

முதல் பாகம் எளிமையாக இருந்தாலும், ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் நிறைந்தவையாக இருந்தது. ஆனால், இந்த இரண்டாம் பாகத்தின் காட்சிகள் அனைத்தும் பிரமாண்டமாக இருந்தாலும், திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமலும், காட்சிகள் பயம் இல்லாமலும் பயணிப்பதால் படம் ரசிகர்களிடம் ஒட்டாமல் போகிறது.

 

டிமான்டி ஆத்மாக்கள் உலகத்தின் அரசர், அவருக்காக பலி கொடுக்கப்படுவது, அதை தலைமுறை தலைமுறையாக செய்யும் குடும்பம், 6 வருடங்களுக்கு ஒரு முறை அவர்கள் டிமான்டிக்கு பலி கொடுப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் போன்றவை எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அவற்றின் மூலம் பார்வையாளர்களை எந்தவிதத்திலும் பயமுறுத்தாத இயக்குநர் அஜய் ஞானமுத்து, ஒவ்வொரு 6 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகும் ’டிமான்டி காலனி’-யின் அடுத்தடுத்த பாகங்களோடு வருவேன், என்ற ரீதியில் படத்தை முடித்து ரசிகர்களிடம் பயத்தை ஏற்படுத்துகிறார்.

 

"டிமான்டி காலனி 2" படத்திற்கு மதிப்பீடு 2.5/5

 

 

Verdict : பொழுதுபோக்கு படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA