சற்று முன்

'THE LEGEND OF CHANDRABABU’ நாவலை படமாக்கும் உரிமையை பெற்றுள்ள ‘குளோபல் ஒன் ஸ்டுடியோஸ்’!   |    ஒரு சிலருக்கு மட்டும்தான் தனித்துவமான சினிமா மொழி கைவரும் - தயாரிப்பாளர் சமீர்   |    ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டமே 'கூரன் ' படத்தின் கதை!   |    2005 ஆம் ஆண்டில் தொடங்கிய இசைப் பயணம்......#ஜீவிபி100 எனும் சாதனை பயணம்!   |    சமுத்திரகனியை திட்டினால் படம் ஜெயித்து விட்டது என அர்த்தம்! - இயக்குநர் சரண்   |    சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘இரவின் விழிகள்’   |    நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கும் 'மாமன்'   |    ரசிகர்களின் ஆரவாரக் கொண்டாட்டத்துடன் பாக்ஸ் ஆஃபிஸ் - இல் கலக்கும் 'மிஸ் யூ'!   |    வித்தியாசமான தோற்றத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் தோன்றும் 'மெண்டல் மனதில்'   |    கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில் வெளியாகும் மோகன்லாலின் 'பரோஸ்'   |    வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிக்கும் பிரமாண்டமான தயாரிப்பு 'படையாண்ட மாவீரா'   |    ரசிகர்களின் எதிர்பார்ப்பை வியப்பில் ஆழ்த்திய 'வீர தீர சூரன்' படத்தின் டீசர்!   |    விஜய் தேவரகொண்டா வெளியிட்ட ராஷ்மிகா மந்தனாவின் 'தி கேர்ள்பிரண்ட்' படத்தின் டீசர்!   |    இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில் முதல் ஆன்மிக ஆல்பம் 'அஷ்ட ஐயப்ப அவதாரம்'!   |    பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள 'திரு.மாணிக்கம்' வெளியீடு அறிவிப்பு!   |    'மெட்ராஸ்காரன்' திரைப்பட இரண்டாவது சிங்கிள்' காதல் சடுகுடு' பாடல் வெளியீட்டு விழா!   |    திருநங்கைகளை பற்றி அழுத்தமாக பேசும் படைப்பாக 'சைலண்ட்' படம் வந்திருப்பது அழகு   |    நந்தமுரி மோக்ஷக்யா அறிமுகப்படத்தின் அட்டகாச ஸ்டில் வெளியாகியுள்ளது   |    கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்து பொங்கல் வெளியீடாக வரும் 'தருணம்'!   |    ‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது !!   |   

croppedImg_1205332738.jpeg

'வேதா' விமர்சனம்

Directed by : Nikkhil Advani

Casting : John Abraham, Sharvari, Abhishek Banerjee, Ashish Vidyarthi, Tamanna

Music :Amaal MallikManan Bhardwaj YuvaRaghav–Arjun (songs), Kartik Shah (score)

Produced by : Zee Studios, Emmay Entertainment, JA Entertainment - Umesh KR Bansal, Monisha Advani, Madhu Bhojwani, John Abraham

PRO : DOne

Review :

"வேதா" நிகில் அத்வானி இயக்கத்தில் உமேஷ் கே.ஆர்.பன்சால், மோனிஷா அத்வானி, மது போஜ்வாணி, ஜான் ஆபிரகாம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை அமால் மாலிக், மனன் பரத்வாய், யுவராகவ் – அர்ஜுன். இந்த படத்தில் ஜான் ஆபிரகாம், ஷர்வாரி, தமன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

வட இந்தியாவில் உள்ள சுமார் ஐம்பது கிராமங்கள் கொண்ட பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, தாங்கள் வைத்ததே சட்டம் என்று அந்த கிராமத்து மக்களை அடக்கி ஆள்கிறது. அதில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் குத்துச்சனடை கற்றுக்கொள்ள விரும்புகிறாள். அதனால், அவர் அவமானப்படுத்தப்படுவதோடு, உயர் சாதி பெண்ணை காதலித்ததால் அவளது சகோதரனை அவள் கண் முன் கொடூரமாக கொலை செய்கிறார்கள். அந்த பெண்ணையும், அவளது தங்கையையும் கொலை கும்பல் வெறியோடு துரத்துகிறது. அப்போது அந்த பெண்ணை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறார் முன்னாள் ராணுவ வீரர் ஜான் ஆபிரகாம். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை அதிரடியாக சொல்வது தான் ‘வேதா’.

 

நவீன அறிவியல் காலத்திலும், சாதீய அடக்குமுறை எப்படி எல்லாம் மக்களை ஆட்டுவிக்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் அசீம் ஆரோராவின் கதையை இயக்குநர் நிகில் அத்வானி, நம் ஆழ்மனதுக்குள் பதிய வைக்கும் விதத்தில் காட்சிப்படுத்தி இயக்கியிருக்கிறார்.

 

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்திருக்கும் ஷர்வாரி, ஆதங்கம், ஆர்வம், அதிர்ச்சி, போராட்டம் என்று அனைத்து உணர்வுகளையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

 

அநீதியை கண்டு வெகுண்டெழும் முன்னாள் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கும் ஜான் ஆபிரகாம், ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டினாலும், நடிப்பில் நிதானத்தை காட்டி சிறப்பாக நடித்திருக்கிறார்.

 

ஜான் ஆபிரகாமின் காதலியாக வரும் தமன்னா காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார்.

 

மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அளவான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார்கள்.

 

ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டுமே படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது. 

 

தற்போதும் நாடு முழுவதும் நடக்கும் சாதீய கொடுமைகளை நம் கண்முன் காட்டும் விதத்தில் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் நிகில் அத்வானி, எளிதாக கடந்து செல்லக்கூடிய ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக அல்லாமல் அனைத்து மக்களும் அவசியம் பார்க்க வேண்டிய முக்கியமான படைப்பாக கொடுத்திருக்கிறார்.

 

"வேதா" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : அனைத்து மக்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA