சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

croppedImg_1945841422.jpeg

ஏ.ஆர்.எம் விமர்சனம்

Directed by : Jithin Laal

Casting : Tovino Thomas, Krithi Shetty, Aishwarya Rajesh, Surabhi Lakshmi, Basil Joseph, Rohini, Harish Uthaman Nisthar Sait, Jagadish, Pramod Shetty, Aju Varghese, Sudheesh

Music :Dhibu Ninan Thomas

Produced by : Magic Frames - Listin Stephen, Dr. Zachariah Thomas

PRO : Sathish Kumar

Review :

"ஏ.ஆர்.எம்" ஜிதின் லால் இயக்கத்தில் மேஜிக் பிரேம்ஸ் – லிஸ்டின் ஸ்டீபன், டாக்டர். சஜரீஸ் தாமஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை திபு நினன் தாமஸ். இந்த படத்தில் டோவினோ தாமஸ், கிரித்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, பசில் ஜோசப், ரோகிணி, ஹரிஷ் உத்தமன், நிஸ்தர் சையத், ஜெகதீஷ், பிரமோத் ஷெட்டி, அஜு வர்கீஸ், சுதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

மூன்று வெவ்வேறு காலங்களில், ஒரு மனிதன் அவனது முன்னோர் எப்படி வெவ்வேறு விதமாக பார்க்கப்படுகிறார்கள், ஆனால் அனைத்து காலங்களிலும் ஜாதிய ஒடுக்கு முறையால் அந்த ஊரில் வாழும்  மக்கள் அனைவரும் ஒதுங்கி இருப்பதும்  அவர்கள் அனைவரையும் எப்படி ஒருங்கிணைக்கிறான் கதாநாயகன் என்பதுதான் ஏ.ஆர்.எம் படத்தின் கதை. 

 

மாரி 2 படத்தில் டொயோட்டா இசை ஒரு வில்லனாக காட்டி, அவரை கடைசியில் ஒரு காமெடியனாகவே செய்திருப்பார்கள். அதனால் இந்த படம் பார்க்கும்போது எங்களுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இல்லாமலே தான் இருந்தது. ஆனாலும் வேறு படங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் இந்த படத்தில் போய் பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டது. 

 

பார்த்த பின்பு தான் தெரிந்தது, டொவினோ தாமஸ்ஸை தமிழ் சினிமா உலகம் தான் பயன்படுத்தாமல் விட்டுவிட்டது என்று. மனிதன் இந்தப் படத்தில் அப்படி ஒரு அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

 

படத்தில் களரி வீரனாக வரும் இவர், களரி வீரனின் உடல் அசைவுகள் எந்தெந்தவாறு இருக்கும் என்று அதற்கேற்றார் போல் படம் முழுவதும் நகர்த்திச் சென்று இருக்கிறார். 

 

படத்தில் மூன்று கதாநாயகிகள் இருந்தாலும், மணியன் கதாபாத்திரத்தில் வரும் டொவினோ தாமஸ்ஸின் மனைவி கதாபாத்திரம் மனதில் பளிச்சிடுகிறது. 

 

படத்தின் ஒளிப்பதிவும், இயக்குனர்  ஜித்தின் லால்லின்   ஃபிலிம் மேக்கிங் சென்ஸ் படத்தை ஒரு படி மேலே உயர்த்தி காட்டுகிறது. மேலும் இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் என திபு நினன் தாமஸ், காட்சிகளுக்கு ஏற்ப இசை அமைத்தது அருமை. 

 

படத்தின் முதல் பாதி அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்தாலும், இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாகவே நகர்கிறது. ஆனால் அது இந்த கதைக்கு தேவையான ஒன்றுதான். 

 

இந்த படம் ஜாதிய ஒடுக்கு முறையைப் பற்றியும் பேசுகிறது. ஆனால் ஒரு இடத்தில் கூட திணிக்கவே இல்லை. தமிழில் ஜாதிய படங்கள் எடுக்கும் இயக்குனர்கள் தயவுசெய்து இந்த படத்தை ஒரு முறையாவது பார்த்து விட்டு, அதற்கு பிறகு தங்களுடைய ஜாதி படத்தை எப்படி எடுப்பது என்று தெரிந்து கொண்டால் மிகவும் நல்லது ..! 

 

"ஏ.ஆர்.எம்" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : குடும்பத்துடன் காண வேண்டிய ஒரு நல்ல படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA