சற்று முன்

அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |    தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் வெளியாகும் 'படை தலைவன்'   |    புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகும் 'பேரன்பும் பெருங்கோபமும்' திரைப்படம்!   |    விக்ரமுக்கு 'சேது' போல உதயாவுக்கு 'அக்யூஸ்ட்' அமையும் - ஆர்.கே. செல்வமணி   |    சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் விளையாட்டு சரித்திரத்தை மாற்றியமைக்க உள்ளது!   |    'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா   |    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் கத்தார் அரசு விருதை வென்று சாதனை!   |    'இராமாயணா' படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது!   |    பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது   |    இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம்! - தயாரிப்பாளர்-இயக்குநர் இசக்கி கார்வண்ணன்   |    இங்கு பெண்களுக்கான குரலை பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது - இயக்குநர் வசந்தபாலன்   |    சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    திரைப் படைப்பாளிகளின் பாராட்டுக்களைக் குவித்துள்ள 'மனிதர்கள்' மே 30 முதல் திரையரங்குகளில்!   |   

croppedImg_227128697.jpeg

’கடைசி உலகப் போர்’ விமர்சனம்

Directed by : Hip Hop Thamizha Aadhi

Casting : Hip Hop Thamizha Aadhi, Anaka, Nazar, Natty Natraj, Munishkanth, Harish Uthaman, Munishkanth, Shara, Azhagam Perumal, Singam Puli

Music :Hip Hop Thamizha Aadhi

Produced by : Hip Hop Thamizha Aadhi

PRO : Sathish Kumar

Review :

"கடைசி உலகப் போர்" ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி தயாரித்து நடித்திருக்கும் இந்த படத்திற்கு இசை என்.ஆர்.ரகுநந்தன். இந்த படத்தில்  அனகா, நாசர், நட்டி நட்ராஜ், முனீஷ்காந்த், ஹரிஷ் உத்தமன், சாரா, அழகம்  பெருமாள்,  சிங்கம்  புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

எதுவும் இல்லாத போது மனிதர்கள் ஒற்றுமையாக இருப்பது போல், அனைத்தும் இருக்கும் போதும் இருந்தால் எப்படி இருக்கும்!, என்ற மகத்தான கற்பனையை கருவாக வைத்துக்கொண்டு மூன்றாம் உலகப் போர் பின்னணியில், உள்ளூர் முதல் உலக அரசியல் வரை பேசியிருக்கும் ஹிப் ஹாப் ஆதியின் வித்தியாசமான முயற்சி தான் ‘கடைசி உலகப் போர்’.

 

ஐ.நா சபையின் ஆயுத பயிற்சி பெற்றவராக நடித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி, அதற்கேற்ற முறுக்குடன் இருந்தாலும், அமைதியான முறையில் அரசியல் பேசுகிறார். காதலி கல்வி அமைச்சராகப் போகிறார் என்றதும் அவர் மூலம் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர நினைக்கும் அவரது முயற்சி பாராட்டத்தக்கதாக இருக்கிறது. காதல் காட்சிகள் குறைவாக இருந்தாலும், சண்டைக்காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பார்வையாளர்கள் கவர்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் அனகாவின் முகத்தில் தெரியும் முதிர்ச்சி, நடிப்பிலும் தெரிகிறது. கொடுத்த வேலை குறைவு என்றாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.

 

முதலமைச்சரின் உறவினராக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், தன்னை ஒரு கிங் மேக்கர் என்று சொல்லிக் கொண்டு ஆட்சியாளர்களை ஆட்டுவிக்கும் வேலையை அமர்க்களமாக செய்திருக்கிறார். நட்டியின் வழக்கமான பாணி தான் என்றாலும், அது அவரது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்ப்பதோடு, அவரது கதாபாத்திரம் படத்திற்கும் பலமாக பயணிக்கிறது.

 

முதலமைச்சராக நடித்திருக்கும் நாசர் தனது அனுபவமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.  புலிப்பாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அழகம்பெருமாள், சினிமா நடிகராக நடித்திருக்கும் ஷாரா ஆகியோர் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள். 

 

முனீஷ்காந்த், சிங்கம்புலி, ஹரீஷ் உத்தமன், கல்யாண், தலைவாசல் விஜய், குமரவேல், இளங்கோ குமணன் ஆகியோர் கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

 

அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உடன் இணைந்து திரையில் பிரமாண்டமான மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறது. 

 

படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ் மற்றும் சண்டைப்பாயிற்சியாளர் மகேஷ் மேத்யூ இருவரது பணியும் படத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

 

எழுதி இயக்கி இசையமைத்து தயாரித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி, வித்தியாசமான முயற்சி மட்டும் இன்றி விபரீதமான முயற்சியும் இப்படத்தின் மூலம் எடுத்திருக்கிறார். 

 

உலகின் பல பகுதிகளில் நடக்கும் போர்கள் தொடர்பாக நாம் செய்தி தாழ்களில் படித்தும், தொலைக்காட்சிகளில் பார்த்தும் கடந்திருப்போம். ஆனால், அதை எதிர்கொள்ளும் அம்மக்களின் நிலை எப்ப்படி இருக்கும்?, என்பது குறித்து ஹிப் ஹாப் ஆதி யோசித்ததோடு நின்றுவிடாமல், இத்தகைய போர் இனி எங்கும் வரக்கூடாது என்ற சிந்தனையில் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஆதியின் இந்த நல்ல உள்ளத்தை நிச்சயம் பாராட்டினாலும், அவர் சொல்ல வருவதை மக்கள் சரியாக புரிந்துக் கொள்ளாதபடி திரைக்கதையில் பல விசயங்களை திணித்திருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.

 

பாட்டு, நடனம், நகைச்சுவை என்ற தனது வழக்கமான பாணியை தவிர்த்து, சமூக பொறுப்புணர்வோடு தனது முதல் படத்தை தயாரித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதியின் இந்த வித்தியாசமான முயற்சியில் சில குறைகள் இருந்தாலும்,  முழுமையான திரைப்படமாக பார்க்கும் போது அந்த குறைகள் தெரியாமல் ரசிகர்களை திருப்திப்படுத்துகிறது, என்பதை மறுக்க முடியாது.

 

"2018" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : வித்தியாசமான முயற்சி

மேலும் திரைப்பட விமர்சனம்